இலங்கைத் தமிழர்களின் நலன் கோரி சென்னையில் நாளை மறுதினம் திமுக தலைமையில் நடக்க இருந்த டெசோ மாநாட்டுக்கு தமிழக அரசு திடீரென இன்று அனுமதி மறுத்துள்ளது.
இத்தகவலை சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது.
டெசோ மாநாட்டுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று தொடரப்பட்ட பொது நலன் மனு மீதான விசாரணை இன்று நடந்தபோது தமிழக அரசு இந்த பதிலை அளித்தது.
நீதிமன்றத்தில் தமிழக அரசின் வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன் கூறுகையில், மாநாட்டில் எத்தனை பேர் கலந்து கொள்வார்கள் என்பதையும், எத்தனை வாகனங்கள் வரும் என்பதையும் சரியாக தெரிவிக்கவில்லை.
மேலும் மாநாடு நடக்க இருக்கும் ஒய்எம்சிஏ மைதானத்தில் 8,000 பேருக்கு மட்டுமே இட வசதி உண்டு. இதனால் சென்னையைத் தவிர வேறு எங்கு வேண்டுமானாலும் டெசோ மாநாட்டை நடத்திக் கொள்ளலாம் என்றார்.
காவல்துறை முடிவெடுக்கலாம்-நீதிமன்றம்:
இதையடுத்து டெசோ மாநாட்டுக்கு அனுமதி வழங்குவது குறித்து காவல்துறை முடிவெடுக்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

No comments:
Post a Comment