பாராளுமன்றத்துக்கு 2014-ம் ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. அந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் தலைவர் சோனியா தீவிரமாக உள்ளார். தற்போது ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் சில கட்சிகளால் காங்கிரஸ் கடும் நெருக்கடியை சந்தித்துள்ளது.
ஸ்பெக்ட்ரம் ஊழல், ஆதர்ஷ் வீட்டு வசதி ஊழல், காமன்வெல்த் விளையாட்டு ஊழல், நிலக்கரி சுரங்க ஊழல் போன்ற ஊழல் குற்றச்சாட்டுக்கள் மத்திய அரசு மீது மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் விலைவாசி உயர்வும் மக்கள் மீது கூடுதல் சுமையை ஏற்றி உள்ளது. மழை பொய்த்ததால் வறட்சி ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. எனவே ஏழை-எளிய மக்களை கவர, அவர்களுக்கு இலவச பொருட்கள் கொடுக்கும் முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. முதல் கட்டமாக இந்தியாவில் வாழும் ஒவ்வொரு ஏழைக் குடும்பத்துக்கும் தலா ஒரு இலவச செல்போன் கொடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக ரூ. 7 ஆயிரம் கோடி செலவாகும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் மன்மோகன்சிங் வருகிற 15-ந் தேதி சுதந்திர தினத்தன்று இலவச செல்போன் அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தை வெற்றிகரமாக எப்படி அமல்படுத்துவது என்பது பற்றி மத்திய அரசின் உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
இந்தியாவில் 60 லட்சம் குடும்பங்கள், வறுமைக் கோட்டுக்கு கீழ் வசித்து வருகின்றன. அந்த குடும்பத்தினர் அனைவருக்கும் இலவச செல்போன் கிடைக் கும். இதற்கான நிதியை மத்திய தொலைத் தொடர்புத் துறையின் யுனிவர்சல் சர்வீஸ் ஆப்ளிகேசன் (யு.எஸ்.ஓ.) பிரிவு வழங்கும். மேலும் இந்த திட்டத்தை அமல்படுத்த தனியார் தொலைத் தொடர்பு நிறு வனங்களின் மொத்த வருவாயில் இருந்து 5 சதவீதம் சேவை வரி விதிக்கப்பட்டு பெறப்படும். மத்திய அரசு ஏற்கனவே நாடெங்கும் உள்ள 2 1/2 லட்சம் கிராம பஞ்சாயத்துக்களை இணையத் தளங்கள் மூலம் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
எனவே குக்கிராமங்களில் கூட இலவச செல்போன் சேவைக்கான அடிப்படை தொலைத்தொடர்பு வசதிகளை அளிக்க முடியும் என்று மத்திய அரசு கருதுகிறது. வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இலவச செல்போன்களுக்கு 200 நிமிடம் இலவச டாக்டைம் வழங்கப்படும். மேலும் மாதந்தோறும் செல்போன் சேவைக்காக ரூ. 100 வழங்கப்படும் என்று தெரிகிறது.
இந்த சேவை கட்டணத்தையும் தொலைத் தொடர்பு துறையினர் மூலம் செய்து விடும் வகையில் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஏழைகளை கவரும் இந்த திட்டம், மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கிராமத்து மக்களுடன் இலவச செல்போன் மூலம் நேரடி தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்று மத்திய அரசு கருதுகிறது. அந்த தொடர்பு 2014-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரசுக்கு தனிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் வகையில் வெற்றிகளை தரும் என்று காங்கிரஸ் தலைவர்கள் நம்புகிறார்கள்.

No comments:
Post a Comment