அசினுக்கு வயதான ஹீரோக்களுடன் ஜோடி சேரவே வாய்ப்புகள் வருகின்றன. இதனால் வருத்தமடைந்துள்ளார். இந்தியில் தற்போது பிசியாக நடித்து வருகிறார். கஜினியில் அமீர்கானுடன் நடித்தார். லண்டன் டிரீம்ஸ் படத்தில் சல்மான்கான், அஜய்தேவ்கானுடன் இணைந்து நடித்தார்.
ஹவுஸ் புல் 2 படத்தில் அக்ஷய்குமார் ஜோடியாகவும் போல் பச்சன் படத்தில் அபிஷேக் பச்சனுடனும் நடித்தார். எல்லோருமே வயதான ஹீரோக்கள். தனது வயதுக்கு இணையான இளம் ஹீரோவுடன் ஜோடி சேர வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது. ஆனால் இதுவரை அந்த வாய்ப்பு அமையவில்லை.
இது பற்றி அசின் கூறும்போது என் வயதுக்கு இணையான இளம் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடிக்க ஆசையாக உள்ளது. கஜினி படத்துக்கு பிறகு கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வலுவான கேரக்டர் எனக்கு அமையவில்லை. அது போன்ற வேடத்துக்காக காத்து இருக்கிறேன் என்றார்.

No comments:
Post a Comment