உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை, திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், பழவேற்காடு (புலிக்காடு), சிவகங்கை செட்டிநாடு போன்றவை இடம் பெறுகின்றன. இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வரலாற்று சிறப்பு, தொன்மை, பழமை, கலை, பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் நகரங்கள், இடங்கள், தலங்கள் போன்றவற்றை உலக பாராம்பரிய சின்னங்கள் வரிசையில் யுனெஸ்கோ நிறுவனம் சேர்த்துள்ளது. உலகமெங்கும் மொத்தம் 962 இடங்கள் பாரம்பரிய சின்னங்களாக அறிவிக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன. இந்தியாவில் வரலாற்று சிறப்பு, தொன்மை பழமை வாய்ந்த பல இடங்கள், கட்டிடங்கள் போன்றவை இருந்தாலும் பாரம்பரிய சின்னங்கள் மற்றும் பாரம்பரிய இடங்கள் பட்டியலில் குறைந்தளவு இடங்களே இடம் பெற்றுள்ளன. இந்நிலையில் பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை, திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு (புலிக்காடு) சிவகங்கையில் உள்ள செட்டிநாடு போன்றவை இடம் பெறுகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன் சுற்றுலாத் துறை, பாரம்பரிய சின்னங்கள் பட்டியல் சேர்க்கை குழு சார்பில் சிறப்பு கருத்தரங்கு ஒன்று சென்னையில் நடந்தது. இந்த கருத்தரங்கில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
இதில் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையை பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் சேர்ப்பது குறித்த பரிந்துரை கட்டுரையை பேராசிரியர் ஸ்ரீராம் சமர்ப்பித்தார். அதே போல பெர்ணார்டு டிராகன் என்பவர் செட்டிநாடு குறித்தும், ரூப்மதி ஆனந்த் என்பவர் ஸ்ரீரங்கம் கோயில் குறித்தும், சேவியர் பெணடிக்ட் என்பவர் புலிக்காடு குறித்தும் தங்களது பரிந்துரை கட்டுரைகளை அளித்துள்ளனர். உலக பாரம்பரிய சின்னங்கள் குறித்த ஆலோசனைக்குழு தலைவர் சுஜித் பானர்ஜி இந்த கட்டுரைகளை பெற்றுக்கொண்டு, கட்டுரைகளை மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று இந்த இடங்கள் பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

ஆமாம்..ஆமாம்...ஈ.வெ.ராமசாமி நாய்க்கரே வாசலில் நின்னு பெருமாள பாத்து கும்பிட்டுகிட்டு நிக்கிறாரு.....
ReplyDelete