பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவர் இல.கணேசன் சேலத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
பெட்ரோல் டீசல் விலையை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டு இருப்பது கண்டிக்கதக்கது. ஆரம்பத்திலேயே இதை தவிர்க்க வேண்டும். தேர்தல் வெற்றி தொடர்பாக அத்வானி தனது இணைய தளத்தில் தெரிவித்து இருந்த கருத்தில் திரித்து போட்டப்பட்டு உள்ளது.
வருகிற பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். பிரதமர் வேட்பாளர் யார் என்பதை இப்போது சொல்ல முடியாது. தேர்தல் நேரத்தில் தான் அறிவிக்க முடியும்.
டெசோ மாநாடு நடத்த தி.மு.க.வுக்கு எந்தவித தார்மீக உரிமை கிடையாது. ஈழ தமிழர் விசயத்தில் நம்பக தன்மையை அவர்கள் இழந்து விட்டனர். ஈழ தமிழர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசுக்கு பங்கு உள்ளது. அதுபோல் மத்திய அரசு கூட்டணியில் உள்ள தி.மு.க. விற்கும் பங்கு உண்டு. அதற்கு பரிகாரம் தேடும் வகையில் டெசோ மாநாடு நடத்தப்படுகிறது. இந்த மாநாடு தேவையில்லை.
ஈழ தமிழர்களுக்கு சம உரிமை, மறுவாழ்வு, தொழில் செய்ய உதவி, பாதுகாப்பு ஆகியவற்றை பெற்று தர மத்திய அரசை அவர்கள் வலியுறுத்த வேண்டும். டெசோ மாநாடு நடத்த கூடாது என்று போக்குவரத்தை போலீசார் காரணம் காட்டி உள்ளனர். இது ஏற்க கூடியது தான்.
சென்னையில் ஏற்கனவே போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. சிறுபான்மை இன மாணவர்களுக்கு மத்திய அரசு அதிக அளவில் கல்வி உதவி தொகையை வழங்கி வருகிறது. இதை அனைத்து மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி காஞ்சிபுரம் மாவட்டம் மறைமலை நகரில் வருகிற 16-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை 3 நாட்கள் உண்ணா விரத போராட்டம் நடக்கிறது. இந்த போராட்டம் மாநில தலைவர் பொன் ராதா கிருஷ்ணன் தலைமையில் நடக்கும். சேலத்தில் தீவிர உறுப்பினர் சேர்க்கைக்காக தற்போது வந்து உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

No comments:
Post a Comment