மணிரத்னம் இயக்கிய 'அக்னி நட்சத்திரம்' படம் 1988-ல் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடியது. பிரபு, கார்த்திக் இணைந்து நடித்தனர். இப்படத்தில் இடம் பெற்ற 'ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா' பாடல் பட்டி தொட்டியெங்கும் பிரபலம். அக்னி நட்சத்திரம் படத்தை தற்போது மீண்டும் ரீமேக் செய்ய ஏற்பாடு நடக்கிறது.
இதில் பிரபு மகன் விக்ரம் பிரபு, கார்த்திக் மகன் கவுதம் ஆகிய இருவரையும் நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளனர். விக்ரம் பிரபு 'கும்கி' படத்தில் தற்போது நடித்து வருகிறார். மணிரத்னம் இயக்கும் 'கடல்' படத்தில் கவுதம் நாயகனாக நடிக்கிறார். தரணியிடம் படத்தை இயக்க பேச்சுவார்த்தை நடக்கிறது.

No comments:
Post a Comment