முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கடந்த மார்ச் மாதம் 29-ந்தேதி “மர்ம” நபர்களால் கடத்தி கொலை செய்யப்பட்டார். கொலையாளிகள் அவரது உடலை திருவளர்ச்சோலை என்ற இடத்தில் வீசிவிட்டு சென்னர். ராமஜெயத்தை கடத்தி கொலை செய்தவர்கள் யார்? கொலைக்கான காரணம் என்ன என்பது பற்றி திருச்சி மாநகர போலீசில் 7 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தப்பட்டது.
ஆனால் மாநகர போலீசாரால் வழக்கில் துப்பு துலக்க முடியவில்லை. இதையடுத்து கடந்த ஜூன் மாதம் ராம ஜெயம் கொலை வழக்கை திருச்சி சி.பி.சி.ஐ.டி. போலீ சார் விசாரிக்கும்படி தமிழக காவல்துறை டி.ஜி.பி. ராமானுஜம் உத்தரவிட்டார். அதன்பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் ‘ஐ.ஜி’ அருண், டி.ஐ. ஜி. ஸ்ரீதர், எஸ்.பி. மகேஸ் வரி, டி.எஸ்.பி. மலைச்சாமி ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசார ணையை தொடங்கினர். தற்போது ராமஜெயம் கொலை வழக்கு விசாரணையை துரிதப்படுத்த டி.எஸ்.பி. மலைச்சாமி தலைமையில் மொத்தம் 16-தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.
சென்னை, கோவை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர், தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசார் அனைவரும் ராமஜெயம் கொலை வழக்கு விசாரணையில் முடுக்கி விடப்பட்டு உள்ளனர். ராமஜெயம் கொலையை பொறுத்தவரை போலீசாருக்கு கிடைத்த முக்கிய தடயம் அவர் பயன்படுத்திய செல்போன்களின் எண்கள் மட்டுமே. அந்த எண்களுக்கு அடிக்கடி தொடர்பு கொண்டவர்கள், இரவு நேரத்தில் தொடர்பு கொண்டு பேசியவர்கள் பட்டியல் தனித் தனியாக தயாரிக்கப்பட்டு உள்ளது.
சம்பவத்தன்று சந்தேகப்படும்படியாக பேசிய நபர்களின் நடமாட்டம், எங்கேயிருந்து பேசியுள்ளனர் என்பதை செல்போன் டவர் மூலம் கண்டுபிடித்து விசாரணை நடத்தினர். இதே போன்று ராமஜெயம் கடத்தப்பட்டதாக கூறப்படும் வாகனம் குறித்தும் விசாரணை நடக்கிறது.
சம்பவம் முழுவதும் தில்லை நகர், சத்திரம் பஸ் நிலையம், மாம்பழச்சாலை, ஸ்ரீரங்கம் பகுதிக்கு உள்ளேயே நடந்து உள்ளதாக கூறப்படுவதால், குறிப்பிட்ட அந்த வாகனத்ததை பார்த்த நபர்கள் யாராவது உள்ளார்களா? என்றும் விசாரணை நடக்கிறது. தனிப்படையினர் பல கோணங்களில் பல்வேறு இடங்களுக்கு சென்று ராமஜெயத்தின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு பேசியவர்கள், சம்பவத்தன்று அந்த நபர்களின் நடமாட்டம் எங்கேயிருந்தது இவர்கள், செல்போன்களில் சம்பவத்தன்று யார், யாருக்கு பேசினார்கள் என்று விசாரணை நடக்கிறது. இந்த அடிப்படையில் முக்கிய பிரமுகர்கள், அரசியல் பிரமுகர்கள், பெண் பிரமுகர்கள், ஆகியோரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடக்கிறது. விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால் விரைவில் குற்றவாளிகள் பற்றிய அதிரடி தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:
Post a Comment