சத்தீஷ்கர், ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், ஒடிசா உள்ளிட்ட வடமாநிலங்களில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்க்ள. அவர்களுக்கு எதிராக மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் உள்ளூர் போலீசாருடன் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
சத்தீஷ்கர், ஜார்க்கண்ட் மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் பலர் போலீசில் பிடிபட்டுள்ளனர். அவர்களிடம் மத்திய உளவு பிரிவு போலீசாரும், அதிகாரிகளும் விசாரணை நடத்தினார்கள். அப்போது மாவோயிஸ்டுகள் டெல்லியில் தளம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் திடுக்கிடும் தகவல் வெளியானது.
மாவோயிஸ்டுகளிடம் மேலும் விசாரித்தபோது, 2020-ல் டெல்லி செங்கோட்டையில் செங்கொடி என்ற இலக்கு வைத்திருப்பதாகவும் தெரிய வந்தது.
இதற்காக டெல்லியில் உள்ள தங்களது ஆதரவாளர்கள், அனுதாபிகள் மூலம் ஊடுருவும் திட்டம் தயாரித்துள்ளனர். மாவோயிஸ்கள் இயக்க ஆதரவாளர்கள் டெல்லியில் 1000 பேர் வரை இருக்கலாம் என்பதை உளவுத்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அவர்களின் நடமாட்டத்தை போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.
டெல்லியில் தங்களது இயக்கத்தின் ஆதரவாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும் மாவோயிஸ்டுகள் திட்டமிட்டுள்ளனர். இதற்காக மாவோயிஸ்டு- கம்யூனிஸ்டு வாதிகளை தங்கள் இயக்கத்தில் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், இவர்கள் மூலம் இயக்கத்துக்கு நிதி திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் உளவு துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.
டெல்லியில் கீழ்மட்டத்தில் உள்ள இளைஞர்கள் மத்தியில் ஆதரவைப் பெறும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் மூலம் நிதி திரட்டி பல்வேறு மாநிலங்களில் நடைபெறும் ஆயுதப் போராட்டத்துக்கு பயன்படுத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
துண்டு பிரசுரங்கள் மூலம் தங்கள் கொள்கை பிரசாரம் மேற்கொள்ளலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையொட்டி டெல்லியில் உள்ள அனைத்து அச்சகங்களையும் உளவுத்துறை கண்காணிக்கிறது.
மேலும் வெளிநாட்டுக்கு தீவிரவாத குழுக்களின் ஆதரவை பெற்று போராட்ட வியூகங்களில் புதிய யுக்தியை கடைபிடிக்க திட்டமிட்டு இருக்கிறார்கள் என்றும் உளவுத்துறை கண்காணிக்கிறது.
வருகிற 15-ந்தேதி நாடு முழுவதும் சுதந்திர தின கொண்டாட்டங்கள் நடைபெற இருப்பதால் மாவோயிஸ்டுகள் மற்றும் நக்சலைட்டு இயக்கங்களை கண்காணித்து உஷார் நடவடிக்கைகள் மேற்கொள்ளு மாறு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

No comments:
Post a Comment