Friday, October 5, 2012

எனது சொந்த தயாரிப்பிலேயே நடிப்பேன்: விஜய் ஆண்டனி

தமிழ் சினிமாவுக்கு இசையமைப்பாளராக அறிமுகம் ஆனவர் விஜய் ஆண்டனி. இவர் இசையமைத்த நாக்க மூக்கா’, ‘ஆத்திச்சூடிஆகிய பாடல்கள் பட்டிதொட்டி எங்கும் பட்டையை கிளப்பின. தமிழ், தெலுங்கு என பல முன்னணி நாயகர்களின் படங்களில் இவர் இசையமைத்த பாடல்கள் மாபெரும் வெற்றியைப் பெற்றன.

இதையடுத்து, இவர் நான்என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். இப்படம் அவருக்கு தமிழ் சினிமாவில் ஒரு நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது. இசையில் மட்டுமல்லாது நடிப்பிலும் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இவருக்கு படவாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.

இந்நிலையில், நேற்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் விஜய் ஆண்டனி கலந்து கொண்டு பேசும்போது, நான் தமிழில் தற்போது திருடன்’, ‘சலீம்ஆகிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளேன். இப்படங்களை நான் தயாரிக்கவும் செய்கிறேன். இப்போதைக்கு எனது சொந்த தயாரிப்பிலேயே நடிக்க முடிவு செய்துள்ளேன். நான் ஒரு நல்ல நடிகன் என்று சொல்லும் அளவிற்கு உயர்ந்த பிறகு, மற்ற நிறுவனங்கள் தயாரிப்பில் நடிப்பது குறித்து முடிவு எடுப்பேன். எனது தயாரிப்பு நிறுவனம் மூலம் பல புதிய இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள், நடிகர்கள் என அறிமுகப்படுத்தப் போகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.



No comments:

Post a Comment