Friday, October 5, 2012

மாற்றானுக்கு யு சான்றிதழ்!

சூர்யாவின் மாற்றான் படத்துக்கு அனைவரும் பார்க்கத்தக்க யு சான்றிதழ் அளித்துள்ளது தணிக்கைக் குழு.

சூர்யா -காஜல் அகர்வால் ஜோடியாக நடிக்க, கேவி ஆனந்த் இயக்கியுள்ள படம் மாற்றான். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

வரும் 12-ம் தேதி உலகமெங்கும் வெளியாகும் மாற்றான், ஒட்டிப் பிறந்த இரட்டையர்களின் கதை. இரண்டு வேடங்களிலும் சூர்யா நடித்துள்ளார்.

ஆங்கிலப் படம் ஒன்றின் தழுவல் என்று பரவலாகக் கூறப்பட்டாலும், இது எங்கள் சொந்தக் கற்பனை என்று படத்தின் திரைக்கதை வசனம் எழுதிய சுபா பிடிவாதமாகக் கூறி வருகின்றனர் (ஆனால் கேவி ஆனந்த், இது தனக்கு ஏதோ ஒரு தாய்லாந்துப் படம் மற்றும் நாவல் ஒன்றின் பாதிப்பு என்று வாய் தவறி முதலில் கூறிவிட்டார்!).

படத்தை தணிக்கைக் குழுவினருக்கு நேற்று போட்டுக் காட்டினர். எந்த இடத்திலும் கட் இல்லாமல், கிளீன் யு சான்றிதழ் அளித்துள்ளனர்.

படத்தின் அனைத்து ஏரியாக்களும் விற்றுவிட்டன. மொத்தம் ரூ 85 கோடிக்கு பிஸினஸ் ஆகியிருக்கிறதாம் மாற்றான்!



No comments:

Post a Comment