விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Sunday, October 26, 2014

    நடிகைகளின் வாழ்க்கை ‘திருப்பங்கள்’

    திருப்பங்கள் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் வரும். மகிழ்ச்சியான திருப்பங்கள் மட்டுமல்ல, சோகமான திருப்பங் களும் ஏற்படத்தான் செய்யும். ஆனால் திருப்பங்கள் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் மறக்க முடியாத அனுபவங்களை தருகின்றன.

    நடிகைகளின் வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பங்களை அவர்களே சொல்ல கேட்போமா!

    பிரியங்கா சோப்ரா

    இவர் பெண்களையே தனக்கு உதவியாளராக நியமித்திருக்கிறார். அவர்களுக்கு வேலையையும் அதோடு மனோ   பலத்தையும் தன்னால் தர முடியும் என்கிறார்.  

    ‘‘ஒவ்வொரு மனிதருக்கும் வாழ்க்கையில் எவ்வளவோ தேவைகள் இருக்கின்றன. அவர்         களுக்குள் எவ்வளவோ ஆசைகளும் இருக்கின்றன. அவைகள் எல்லாம் நிறைவேறாத பட்சத்தில் விரக்தி அடைந்து ஏமாற்றத்தை எதிர்கொள்கிறார்கள். அப்படிப்பட்ட நேரங்களில் அவர்களுக்கு ஒரு திருப்புமுனை ஏற்பட்டால் அவர்கள் வாழ்க்கையே உற்சாகமாகிவிடுகிறது. என் வாழ்க்கையிலும் அப்படிப்பட்ட விஷயங்கள் நடந்திருக்கின்றன.

    எதிர்பாராத ஒரு விமான விபத்தை நான் சந்திக்க நேர்ந்தது. நான் உயிர் பிழைத்தது மறு பிறவி என்று தான் சொல்ல வேண்டும். அந்த நேரத்தில்கூட நான் என்னை பற்றி சிந்திக்கவில்லை. என்னுடன் பயணித்த அத்தனை பேரையும் பற்றி தான் சிந்தித்தேன். அப்போது ஏற்பட்ட பதற்றத்தில் இருந்து நான் மீள வெகுநாட்கள் ஆகிவிட்டன.

    அப்போதுதான் எனக்கு இந்த வாழ்க்கையின் தத்துவம் புரிந்தது. கண்மூடி திறப்பதற்குள்ளே நம் வாழ்க்கை காணாமல் போய்விடக்கூடும் என்ற உண்மையை உணர்ந்தேன். வாழ்க்கை போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்தேன். எதிர்பார்ப்பை குறைத்தேன். விரக்தியில் இருந்து விடுபட்டேன். புதிய பிரியங்காவாக என் வாழ்க்கையை தொடங்கினேன். வெற்றிபெற்றேன்..’’ என்கிறார்.

    2000–ம் ஆண்டில் ‘மிஸ் இந்தியா’ அடுத்து ‘மிஸ் வேல்டு’ போன்ற பட்டங்களை வென்ற பிறகுதான் பிரியங்கா சினிமாவிற்கு வந்தார். ‘ஜத்ராஜ்’ பட வெற்றியால் இந்தி திரை உலகில் உச்சத்துக்கு போனார். அதில் அவர் ஏற்றிருந்த வித்தியாசமான கதாபாத்திரம் விருதையும் பெற்றுத் தந்தது.

    ‘‘ஆணவம், பொறாமை, பேராசை இதெல்லாம் தூக்கி எறியப்பட வேண்டிய விஷயம். அவைகளை தூக்கி எறிந்தால்தான் நாம் அனைவராலும் விரும்பப்படுவோம். அந்தப் பக்குவத்தை மரணவாயிலை தொட்டு விட்டு திரும்பிய பிறகுதான் நான் பெற்றிருக்கிறேன். என் வாழ்க்கையில் பெரிய திருப்பம், விமான விபத்துதான்’’ என்கிறார்.

    நவாசுதீன் சித்தீகி (நடிகர்)

    ‘‘என் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியவர், அஞ்சலி என்ற பெண். அவளால் எனக்கு ஏற்பட்டது அவமானம். அந்த அவமானம்தான் என் வாழ்க்கையை திருப்பிப்போட்டது.

    சினிமாவில் நடிக்கும் ஆசை சிறுவயதிலேயே எனக்கு இருந்தது. அதற்காக டெல்லி திரைப்பட கல்லூரியில் படித்தேன். படித்து வெளியே வந்த எனக்கு வேலை கிடைக்கவில்லை. சினிமா வாய்ப்பிற்காக அலைந்தேன். வீட்டில் யாரிடமும் சொல்லாமல் மும்பை வந்து சேர்ந்தேன்.

    ஒரு சினிமா கம்பெனியில் என் திறமையை பரிசோதித்துக்கொண்டிருந்தபோது அங்கே அஞ்சலியை சந்தித்தேன். அவளே விரும்பி நெருங்கிப் பழகினாள். ஒரு முறை நான் வசிக்கும் வீட்டிற்கே வந்தாள். சிறிய அறை, நெருக்கடியான இடம். காற்றுகூட வர வசதியில்லாத இடத்தில் நான் தங்கியிருந்தேன். அதைப் பார்த்து முகம் சுளித்த அஞ்சலி ஓடியே போய்விட்டாள். அதன்பிறகு என்னை சந்திக்கவோ, பேசவோ அவள் விரும்பவில்லை.

    என் நிலைமையை கண்டு நானே அவமானப்பட்டேன். அது எனக்குள்ளே ஒரு வெறியாக வளர்ந்தது. என் முயற்சிகள் வேகமெடுத்தது. பிறகு டைரக்டர் அனுராக் கஷ்யப்பின் பார்வை என் மீது பட்டது. நான் நடிகனாக உருவெடுத்தேன். நான் நடித்த ‘ப்ளாக் ப்ரைடே’ படம் வெற்றி பெற்றது. அதை தொடந்து பல படங்கள் வந்தன. பிரிந்து போன அஞ்சலியும் திரும்பி வந்து மன்னிப்பு கேட்டுக்கொண்டாள். அந்த அஞ்சலிதான் என் மனைவி’’என்கிறார்.

    கரீனா கபூர்

    2000–ம் ஆண்டு சினிமாவில் காலடி வைத்தார் கரீனா. ‘ரிப்யூஜீ’ என்ற படத்தில் நடித்தார். பின்பு ‘கபி குஷி கபி கம்’ படத்தில் தலையை காட்டினார். பேசப்படவில்லை. ‘சமேலி’ படத்தில் விலைமாது கதாபாத்திரத்தில் வேண்டா வெறுப்பாக நடித்தார். ஆனால் அந்தப்படம் அமோக வெற்றிபெற்று அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.

    ‘‘சமேலி படம்தான் என் வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்தியது. திருப்பம் என்பது ஒரு மகிழ்ச்சி. நாம் நம் வேலையை பார்த்துக்கொண்டிருந்தால் என்றாவது ஒருநாள் நம் வாழ்க்கையில் திருப்பம் ஏற்படும். சமேலி கொடுத்த திருப்பத்திற்கு பின்னால் நான் வாழ்க்கையை திரும்பிப் பார்க்கவே இல்லை..’’ என்கிறார்.

    ஜான் ஆப்ரகாம்


    ‘திருப்புமுனை எல்லோர் வாழ்விலும் வரும். ஆனால் எல்லோரது வாழ்க்கையும் அதன் மூலம் உயர்ந்துவிடுவதில்லை. திருப்புமுனையை சரியாக பயன்படுத்திக்கொண்டவர்கள் மட்டும்தான் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அதை சரியாக பயன்படுத்திக்கொள்ள கல்வியறிவு தேவை. அறிவும், அனுபவமும் இருந்தால் மட்டுமே திருப்புமுனை, வாழ்க்கையில் நல்ல திருப்பத்தை தரும். திருப்புமுனை, மகிழ்ச்சியையும் தரலாம். அதிர்ச்சியையும் தரலாம். எதுவந்தாலும் அறிவையும், அனுபவத்தையும் பயன்படுத்தி அதை எதிர்கொள்ளவேண்டும்’ என்கிறார்.


    Posted by விழியே பேசு... at 6:44 PM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: சினிமா

    No comments:

    Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ▼  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ▼  October (217)
      • 'நெருங்கிவா முத்தமிடாதே’ அந்த மாதிரி படம் இல்ல!
      • காப்பியடிங்க! காயப்படுத்தாதீங்க!
      • பார்த்திபன் கொடுத்த ஐடியா!
      • செக்ஸ் டார்ச்சர் கொடுத்த மீடியேட்டரை செருப்பால் அட...
      • முட்டாள்களுடன் பணியாற்றினேன் இசை அமைப்பாளருக்கு கட...
      • வீட்டைவிட்டு நான் வெளியேறவில்லை.. பிரச்சினை முடியா...
      • சித்தார்த் வீட்டில் சமந்தா!
      • சொத்துத் தகராறு: நடிகர் கார்த்திக் மீது தாயார் போல...
      • அனுஷ்காவின் தலைக்காதல்கள்...
      • ராம் கோபால் வர்மாவின் ஸ்ரீதேவி’ படத்தில் இருந்து வ...
      • என்னை மணக்க பாவனா பைத்தியம் இல்லை: இயக்குனர் தடாலடி
      • விஜய் 58-ல் முதல் முதலில் ...
      • கதை எழுத சொல்லும் கத சொல்லப் போறோம் டீம்
      • காவியத்தலைவன் சார்பில் நடிப்பு போட்டி-வசந்தபாலன் த...
      • த்ரிஷா-ராணா பிரிவுக்கு நடிகை காரணமா?
      • அஜித் விஷால் மோதல்
      • சிறந்த வீரர் விருது மெஸ்ஸியை முந்தினார் ரொனால்டோ க...
      • கொடுத்த வாக்குறுதியை ராஜபக்சே மீறிவிட்டார் பொன்.ர...
      • பாலிவுட் நடிகருக்கு சரமாரி அடி சனா கான் காதலன் கோபம்
      • தமிழகத்தில் காங்கிரஸ் உடைகிறது: ஜி.கே.வாசன் புது க...
      • மலேசியாவில் விஜயகாந்த்… ''ரசிகர்களே கன்னம் பத்திரம்''
      • திடீர் திருப்பம் - அஜீத் ஜோடி ஹன்சிகா கிடையாது
      • ’மாஸ் - கிளாஸ்’ - புகழ்ந்து தள்ளும் திரையுலகினர்!
      • அஜீத்தின் அதாரு உதாரு முடிந்தது
      • தமிழனுக்கு தூக்கு சிங்கள இனவெறியனுக்கு அஞ்சல் தலைய...
      • கத்தி, பூஜை வெளிநாட்டு வசூல் நிலவரம்
      • மீனவர்களுக்கு இலங்கையில் தூக்கு தண்டனை: தண்டவாளம் ...
      • மதுரைக்கு இணைந்து சென்ற ஸ்டாலின்- வைகோ…
      • 'காற்று என்னை எடுத்து செல்லட்டும்' - தூக்கிலிடப்பட...
      • ரூ 100 கோடியை நோக்கிச் செல்லும் கத்தி வசூல்!
      • அனிருத் காப்பி அடித்தாரா? உண்மை வீடியோ!
      • தென் கொரிய டி.வி. சீரியல்களை பார்த்த 50 வடகொரியர்க...
      • வெளியானது அஜீத்தின் என்னை அறிந்தால் பர்ஸ்ட் லுக்... !
      • 'மோடி தலையைத் துண்டிப்போம்': கொலை மிரட்டல்
      • 5 மீனவர்களுக்கு தூக்கு தண்டனை- கொழும்பு ஹைகோர்ட்! ...
      • சோனியாவின் மூன்றாவது படம் - விஜய் சேதுபதியுடன் நடி...
      • கொச்சியில் நூதன போராட்டம் ‘காதல் முத்தம்’ போலீஸ் அ...
      • இந்தியாவுக்காக மீண்டும் விளையாடுவது சந்தேகமே: விரக...
      • கத்தி தயாரிப்பாளர் கைது !?
      • மாறன் சகோதரர்கள் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு
      • கூட்டணி அமைக்க ஸ்டாலின் விரும்பினால் மகிழ்ச்சி! வை...
      • துரத்தும் தயாரிப்பாளர்கள்! ஓடும் முருகதாஸ்!
      • யுவன் சங்கர் ராஜாவுக்கு நிச்சயம் முடிந்தது: துபாயி...
      • தமிழகத்தில் 6152 அரசுப் பள்ளிகளில் டாய்லெட்டே கிடை...
      • தமிழக அரசியலில் பரபரப்பு... ஒரே மேடையில் திமுக- தே...
      • எந்த மாதிரியானது விஜய்-யின் அடுத்த படம்?
      • வீட்டை விட்டு விரட்டப்பட்டார் நடிகர் கார்த்திக்?.....
      • விஜய்யுடன் நடிக்க மறுத்த நடிகர்
      • இசை கல்லூரியில் படிக்க ஏ.ஆர். ரகுமான் விருப்பம்
      • மோனிகா கடைசி படம்
      • கோலிவுட் - பாலிவுட் வில்லன்கள் மோதல்
      • கத்தி விநியோகஸ்தருக்கு ரூ 2 கோடி நஷ்டமாம்!
      • கத்தி நஷ்டத்தின் பின்னணி இதுதான்
      • இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணியில் சேர லஞ்சமாக செக்...
      • நிர்வாண காட்சி படத்துக்கு கத்தரி வைக்காத சென்சார்
      • கடலுக்கு அடியில் எலக்ட்ரானிக் ஷோரூம்
      • விண்வெளிக்கு உபகரணங்கள் கொண்டு சென்ற அமெரிக்க சரக்...
      • கருப்பு பணம் பதுக்கியவர்கள் யார்-யார்?: சுப்பிரமணி...
      • பிறந்தநாளில் தாய்க்கு கோவில் கட்டும் நடிகர்
      • கறுப்பு பணம் பதுக்கிய 600 பேர் பெயர் பட்டியல் சுப்...
      • இந்தோனேசியாவில் மாயமான மலேசிய விமானம்?
      • விஜய்யுடன் எனக்குப் போட்டியா?.. - விஷால் விளக்கம்
      • சொத்துமதிப்பு எப்படி ரூ.2.98 கோடி அதிகரித்தது?: பொ...
      • உயிருக்கு அச்சுறுத்தலா? ஷாரூக், தீபாகாவுக்கு திடீர...
      • சகாயத்துக்கு ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு வழங்...
      • உலகில் முதன்முறையாக ஜன்னல் இல்லாத விமானம்
      • விபச்சார வழக்கில் கைதான நடிகை உயிருக்கு தொழிலதிபர்...
      • இந்தியா வல்லரசு நாடாகும் - விஜய்விளக்கம்
      • ஊழல் நஷ்டத்தை சரிகட்ட பால் விலையை உயர்த்துவதா?: கே...
      • கணக்கை எளிதாகச் செய்ய ஓர் இணையதளம்!
      • விஜய்க்கு மதுரை நீதிமன்றம் நோட்டீஸ்!
      • கருப்புப் பணம் பதுக்கியவர்கள் பெயர்களை நாளைக்குள் ...
      • அரசியல்வாதிகளெல்லாம் ரொம்ப "சில்லி"... சானியா கோபம்
      • அடுத்த சேவாக் என்று வர்ணிக்கப்படும் இளம் பேட்ஸ்மென...
      • ஆர்யா படத்தில் அஜீத்?
      • படப்பிடிப்புத் தளத்தில் நடிகையை பலாத்காரம் செய்ய ம...
      • இந்தியாவில்விடுதலைப் புலிகள் மீதான தடை ரத்தாகுமா?...
      • கருப்பு பணம்: 3 பெயர்களை வெளியிட்டது மத்திய அரசு
      • எனக்கும், வைகோவுக்கும் கருத்து வேறுபாடு இல்லை.. மு...
      • இந்தியாவுக்கு படையெடுக்கும் வெளிநாட்டவர்
      • பன்னீர் பதவியில் நீடிக்க கருணாநிதி ஆலோசனை
      • அனிருத்துக்கு விஜய் கொடுத்த பரிசு!
      • சொத்து விவரம் சமர்ப்பிக்காத அத்வானி, சோனியா,ராகுல்
      • ஆதார் அட்டை விவகாரத்தில் பல்டி
      • காஷ்மீரை மீட்பேன் என்ற பிலாவல் பூட்டோ மீது தாக்குதல்
      • ரஜினியிடம் பாடம் கற்ற சோனாக்ஷி
      • கால்பந்து கேப்டன் காதலி வீட்டில் சுட்டுக்கொலை
      • பின்லேடனை கண்டுபிடித்த பெல்ஜியன் மாலின்வா என்.எஸ்....
      • மதுபான விலையை உயர்த்தும் அரசு
      • கத்தி வசூல்: ரஜினி-விஜய் ரசிகர்கள் மோதல்
      • காந்திக்குப் பதிலாக நேருவை கொலை செய்திருக்க வேண்டு...
      • பாஜகவுடன் இருக்கலாமா, வேண்டாமா.. கட்சிக்காரர்களிடம...
      • பெங்களூர் சிட்டி ரெயில் நிலையத்தில் இலவச ‘வை–பை‘ இ...
      • நடிகைகளின் வாழ்க்கை ‘திருப்பங்கள்’
      • விஜய் "ஓவர்"... அடுத்து அஜீத் பக்கம் முருகதாஸ்!
      • ரஜினி வந்தா வரட்டும், யாரும் கட்டாயப்படுத்தவில்லை....
      • ரஜினியை சந்தித்து பேசிய "கா.சி" : கடுப்பில் பாஜக
      • பொறுமை இழந்த விஜய்சேதுபதி!
      • எந்திரனை முந்தியதா கத்தி? - விறுவிறு பாக்ஸ் ஆபிஸ்
      • ரகுமான் ஜோடியாக ஜோதிகா ரீ என்ட்ரி
      • பால் விலை லிட்டருக்கு ரூ.10 உயர்வு;முதல்வர் ஓ.பன்ன...
      • வந்தாச்சு ஆண்ட்ராய்டு லாலிபாப்!
      • கூகுள் தலைமை செயல் அதிகாரியாக தமிழகத்தை சேர்ந்த சு...
      • விஜய் ஆவேசம் திமுக அதிருப்தி!!
      • ரூட் கிளியர் விஜயகாந்த் நிம்மதி
      • திடீரென ரசிகர்களை சந்தித்த ரஜினி
      • காந்திக்கு பதிலாக நேருவை கொலை செய்திருக்க வேண்டும்...
      • அமைச்சர் ஆனதும் ரூ.2.98 கோடி அதிகரித்த பொன்.ராதாக...
      • சுவிஸ் வங்கியில் பணம் போட்ட அந்த 4 தமிழக புள்ளிகள்...
      • தீபாவளி ஹிட் 'கத்தி'யோ, 'பூஜை'யோ இல்ல!!!?
      • ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு ஆயுத குவியலை போட்ட அமெர...
      • ஃப்ளாஷ்பேக்: இந்திய நடிகர்களின் அரசியல் வழிகாட்டி ...
      • வளர்ப்பு மகன் திருமணம் பற்றி ஜெயலலிதா சொன்ன பொய்கள்
      • லதா ரஜினிகாந்த்; அழகிரி முதுகில் எஸ்எஸ்ஆர் போட்ட ...
      • ஜெயலலிதாவால் கட்சியை விட்டு நீக்கப்பட்டவர் எஸ்.எஸ்...
      • சல்மானின் சவாலை ஏற்பாரா ரஜினி?
      • சென்னை அணியை ஊக்குவிக்க வந்த ரஜினி -அமிதாப் பச்சன்
      • மகாராஷ்டிராவில் துணை முதல்வர் பதவி கொடுத்து சிவசேன...
      • ஸ்ரீரங்கத்தில் ஜெயலலிதா மீண்டும் போட்டி !?
      • வச்சா குடுமி அடிச்சா மொட்டை ' தமிழக அமைச்சர்களின் ...
      • பதக்கத்தை வாங்க மறுத்ததால் சரிதா தேவி சஸ்பெண்ட்
      • கனடா நாடாளுமன்றம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்!
      • இந்த தாடி 'அம்மா தாடி' ! தமிழக அமைச்சர்களின் கூத்த...
      • கம்ப்யூட்டர், டேப்ளட்களைக் கையாள பீகார் அமைச்சர்கள...
      • பிரபுதேவாவின் அடுத்த காதல்?
      • கடற்படை ஊழலை அம்பலப் படுத்திய வீரருக்கு அடிஉதை:வேட...
      • டெரர் கிளப்பும் சூர்யாவின் மாஸ் கெட்டப்
      • தனுஷின் அனேகன் ட்ரைலர்
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ►  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ►  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.