விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Monday, October 27, 2014

    ஆதார் அட்டை விவகாரத்தில் பல்டி

    ஆதார்' அட்டை விவகாரத்தில், மத்திய உள்துறை அமைச்சகம், தன் முந்தைய நிலைப்பாட்டை திடீரென மாற்றியுள்ளது. இந்த திட்டத்தை முழுமையாக செயல்படுத்தும்படி, மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ள உள்துறை அமைச்சகம், 'ஆதார் அட்டையை, எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் ஏற்க தக்க ஆவணமாக கருதலாம்' என்றும் கூறியுள்ளது.

    கடந்த, காங்., தலைமையிலான, ஐ.மு., கூட்டணி ஆட்சி காலத்தில், 2009ல், ஆதார் அடையாள அட்டை திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காகதனி ஆணையமும் அமைக்கப்பட்டது.

    மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், குடிமக்களின் கைவிரல் ரேகை (பயோமெட்ரிக்), கருவிழி, முகவரி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இந்த அட்டையில் இடம் பெற்றிருக்கும். இந்த திட்டத்தின் கீழ், குடிமக்கள் ஒவ்வொருவருக்கும், ஒரு பிரத்யேக அடையாள எண் கொடுக்கப்படும்.ஆனால், அப்போதைய உள்துறை அமைச்சகமும், எதிர்க்கட்சியாக இருந்த பா.ஜ.,வும், இந்த திட்டத்தின் நம்பகத் தன்மை குறித்து கவலை தெரிவித்தன.குறிப்பாக, முந்தைய ஐ.மு., கூட்டணி ஆட்சி காலத்தில், 'ஆதார் அடையாள அட்டையை பெறுவதற்காக, பொதுமக்கள் தரும் ஆவணங்களின் உண்மைத் தன்மையை உறுதி செய்ய வேண்டும். ஏதாவது ஒரு ஆவணத்தைசமர்ப்பித்தால், அதை ஆதாரமாக வைத்து ஆதார் அட்டை வழங்கக் கூடாது' என, உள்துறை அமைச்சகம் சார்பில் கவலை தெரிவிக்கப்பட்டது.

    மேலும், ஆதார் அடையாள அட்டை வழங்கும் ஆணையத்தின் தகவல் தொகுப்புகளை, வேறு யாராவது திருடினால் ஏற்படும் விளைவுகளையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும், அப்போதைய உள்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. சுஷில் குமார் ஷிண்டே, சிதம்பரம் இந்த காலங்களில் உள்துறை அமைச்சர்களாக இருந்தனர்.கடந்த லோக்சபா தேர்தலின்போது, பிரசாரம் செய்த பா.ஜ., தலைவர்களும், ஆதார் அடையாள அட்டை திட்டத்தை கடுமையாக விமர்சித்தனர். 'வங்கதேசத்தில் இருந்து, சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் குடிபெயர்ந்தவர்களுக்கு எல்லாம், ஆதார் அடையாள அட்டை கொடுக்கப்படுகிறது. இது, உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் திட்டம்' என, விமர்சிக்கப்பட்டது.

    இந்நிலையில், பா.ஜ., தலைமையிலான புதிய அரசு பதவியேற்றதும், இந்த திட்டம் ரத்து செய்யப்படும் என, தகவல் வெளியாகியது. இதற்கிடையே, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி ஆகியோரை, ஆதார் அடையாள அட்டை வழங்கும் ஆணையத்தின் தலைவராக இருந்த நந்தன் நீல்கேனி சந்தித்து, திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து பேசினார். இதையடுத்து, மத்திய அரசின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டது.

    இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில், அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதில், ஆதார் அடையாள அட்டை திட்டத்தை தீவிரமாக செயல்படுத்தும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்த கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:ஆதார் அடையாள அட்டை திட்டத்தின் கீழ், ஒரு நபருக்கு ஒரு எண் மட்டுமே ஒதுக்கப்படுகிறது. இதனால், சம்பந்தபட்ட நபரின் உலகளாவிய அடையாள ஆவணமாக இதை கருதலாம். சம்பந்தபட்ட நபரின் கைவிரல் ரேகை, கருவிழி உள்ளிட்ட விவரங்களும் துல்லியமாக பதிவு செய்யப்படுகின்றன. எனவே, ஆதார் அட்டையில் உள்ள விவரங்களை சிறந்த அடையாள குறியீடாக ஏற்கலாம்.மக்களுக்கு தேவையான அரசு சேவைகளையும், திட்டங்களையும் செயல்படுத்துவதற்கு, இதை முழுமையான ஆவணமாக கருதலாம். இதில், ஏமாற்று, மோசடி, போலி போன்ற விஷயங்களுக்கு வாய்ப்பில்லை.


    மக்களுக்கு பயன்:


    ஆதார் அடையாள அட்டையை எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் எளிதில் ஏற்க தக்க ஆவணமாகவும் கருதலாம். அரசின் பல்வேறு திட்டங்களின் பயன்களை, பொதுமக்கள் ஆதார் அட்டை மூலமாகவே பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.அரசின் பலன்களை ஏழை மக்கள் எளிதில் பெறுவதற்கு இந்த அட்டை பெரிதும் உதவும். ஆதார் அட்டை மூலம், ஒருவரின் அடையாளத்தை எளிதில் உறுதி செய்ய முடியும்.எனவே, இந்த திட்டத்தை தீவிரமாக செயல்படுத்த வேண்டும்.இவ்வாறு, அந்த கடிதத்தில் உள்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

    ஆதார் அட்டை விவகாரத்தில், மத்திய உள்துறை அமைச்சகம், தன் முந்தைய நிலையை முற்றிலும் மாற்றியுள்ளது, மத்திய அரசு வட்டாரத்தில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, 'வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக இடம் பெயர்ந்தவர்கள் ஆதார் அட்டையை எளிதில் பெறுவதாக கூறிய பா.ஜ., தலைவர்கள், தற்போது இதற்கு என்ன விளக்கம் அளிக்கப் போகின்றனர்' என, எதிர்க்கட்சிகள் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.


    67 கோடி பேருக்கு...


    * ஆதார் அடையாள அட்டை திட்டம், 2009ல், அறிவிக்கப்பட்டது. 2010ல், இதற்கான ஆணையம் அமைக்கப்பட்டு, இன்போசிஸ் நிறுவனத்தை சேர்ந்த நந்தன் நீல்கேனி, அதன் தலைவராக நியமிக்கப்பட்டார்

    *இந்த திட்டத்துக்காக இதுவரை, 4,906 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

    *இதுவரை, நாடு முழுவதும், 67.38 கோடி பேருக்கு இந்த அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதுவரை, நான்கு கட்ட திட்டங்கள் நிறைவேற்றி முடிக்கப்பட்டுள்ளன.

    *பா.ஜ., தலைமையிலான புதிய அரசு, இந்த ஆண்டு பட்ஜெட்டில், ஐந்தாம் கட்ட பணிகளை மேற்கொள்வதற்காக, 2,039 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.

    *உ.பி., பீகார், சத்தீஸ்கர், உத்தரகண்ட் போன்ற மாநிலங்களில் ஐந்தாம் கட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

    *'அடுத்த சில ஆண்டுகளுக்குள், நாடு முழுவதும் உள்ள அனைவருக்கும் ஆதார் அடையாள அட்டை வழங்க வேண்டும்'
    என, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    *தமிழகத்தை பொறுத்தவரை, இதுவரை ஆதார் அட்டைக்கு பதிவு செய்யாதவர்களுக்காக, அடுத்த மாதம் முதல், நிரந்தர முகாம்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 'பெல்' நிறுவனம் இந்த பணிகளை மேற்கொள்கிறது.

    *டில்லி, திகார் சிறையில் உள்ள கைதிகளுக்கும் ஆதார் அட்டை வழங்குவதற்கான நடவடிக்கைகள் துவங்கியுள்ளன.


    என்.பி.ஆர்., திட்டம் என்னாச்சு?



    குடிமக்களை பற்றிய விவரங்களையும், அடையாளத்தையும் உறுதி செய்வதற்காக, ஆதார் அட்டை வழங்கப்பட்டு வரும் நிலையில், ஏற்கனவே, தேசிய மக்கள் தொகை பதிவேடு எனப்படும், என்.பி.ஆர்., திட்டமும் செயல்படுத்தப்பட்டது. ஆதார் அட்டை வழங்குவதற்காக தனி ஆணையம் அமைக்கப்பட்ட நிலையில், என்.பி.ஆர்., திட்டம், மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய பதிவாளர் ஜெனரல் மூலம் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்திலும், பொதுமக்களின் கைவிரல் ரேகை, கருவிழி, புகைப்படம், முகவரி ஆகிய விவரங்கள் பதிவு செய்யப்பட்டன.இந்த இரண்டு திட்டங்களில் எது அதிகாரப்பூர்வமான திட்டம் என்பதில் மக்களிடையே குழப்பம் நீடிக்கிறது. உதாரணமாக, உ.பி.,யில், என்.பி.ஆர்., திட்டம் தான் நடைமுறையில் உள்ளது. ஆனால், டில்லியில், இரண்டு திட்டங்களுமே செயல்படுத்தப்படுகின்றன. ஆனாலும், சமீபகாலமாக, என்.பி.ஆர்., திட்டம் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படுவது இல்லை. இதன் பணிகள் முடங்கி விட்டதா என்பது குறித்த தகவலும் இல்லை.


    ஆதார் அவசியமா?


    'சமையல் காஸ் சிலிண்டர் உட்பட, அரசின் நேரடி மானிய திட்டங்களுக்கு ஆதார் அட்டை கட்டாயம் என, முந்தைய மத்திய அரசு தெரிவித்தது. இந்த விவகாரம் சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றதை அடுத்து, 'அரசின் மானிய திட்டங்களை பெறுவதற்கு ஆதார் அட்டை அவசியமில்லை. இதற்காக, ஆதார் அடையாள அட்டையை தரும்படி பொதுமக்களை கட்டாயப்படுத்த கூடாது' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இந்நிலையில், 'அரசின் நேரடி மானிய திட்டங்கள், ஆதார் அடையாள அட்டை திட்டம் மூலம் செயல்படுத்தப்படும்' என, மத்திய அரசு தற்போது தெரிவித்துள்ளது, பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.


    Posted by விழியே பேசு... at 10:03 AM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    No comments:

    Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ▼  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ▼  October (217)
      • 'நெருங்கிவா முத்தமிடாதே’ அந்த மாதிரி படம் இல்ல!
      • காப்பியடிங்க! காயப்படுத்தாதீங்க!
      • பார்த்திபன் கொடுத்த ஐடியா!
      • செக்ஸ் டார்ச்சர் கொடுத்த மீடியேட்டரை செருப்பால் அட...
      • முட்டாள்களுடன் பணியாற்றினேன் இசை அமைப்பாளருக்கு கட...
      • வீட்டைவிட்டு நான் வெளியேறவில்லை.. பிரச்சினை முடியா...
      • சித்தார்த் வீட்டில் சமந்தா!
      • சொத்துத் தகராறு: நடிகர் கார்த்திக் மீது தாயார் போல...
      • அனுஷ்காவின் தலைக்காதல்கள்...
      • ராம் கோபால் வர்மாவின் ஸ்ரீதேவி’ படத்தில் இருந்து வ...
      • என்னை மணக்க பாவனா பைத்தியம் இல்லை: இயக்குனர் தடாலடி
      • விஜய் 58-ல் முதல் முதலில் ...
      • கதை எழுத சொல்லும் கத சொல்லப் போறோம் டீம்
      • காவியத்தலைவன் சார்பில் நடிப்பு போட்டி-வசந்தபாலன் த...
      • த்ரிஷா-ராணா பிரிவுக்கு நடிகை காரணமா?
      • அஜித் விஷால் மோதல்
      • சிறந்த வீரர் விருது மெஸ்ஸியை முந்தினார் ரொனால்டோ க...
      • கொடுத்த வாக்குறுதியை ராஜபக்சே மீறிவிட்டார் பொன்.ர...
      • பாலிவுட் நடிகருக்கு சரமாரி அடி சனா கான் காதலன் கோபம்
      • தமிழகத்தில் காங்கிரஸ் உடைகிறது: ஜி.கே.வாசன் புது க...
      • மலேசியாவில் விஜயகாந்த்… ''ரசிகர்களே கன்னம் பத்திரம்''
      • திடீர் திருப்பம் - அஜீத் ஜோடி ஹன்சிகா கிடையாது
      • ’மாஸ் - கிளாஸ்’ - புகழ்ந்து தள்ளும் திரையுலகினர்!
      • அஜீத்தின் அதாரு உதாரு முடிந்தது
      • தமிழனுக்கு தூக்கு சிங்கள இனவெறியனுக்கு அஞ்சல் தலைய...
      • கத்தி, பூஜை வெளிநாட்டு வசூல் நிலவரம்
      • மீனவர்களுக்கு இலங்கையில் தூக்கு தண்டனை: தண்டவாளம் ...
      • மதுரைக்கு இணைந்து சென்ற ஸ்டாலின்- வைகோ…
      • 'காற்று என்னை எடுத்து செல்லட்டும்' - தூக்கிலிடப்பட...
      • ரூ 100 கோடியை நோக்கிச் செல்லும் கத்தி வசூல்!
      • அனிருத் காப்பி அடித்தாரா? உண்மை வீடியோ!
      • தென் கொரிய டி.வி. சீரியல்களை பார்த்த 50 வடகொரியர்க...
      • வெளியானது அஜீத்தின் என்னை அறிந்தால் பர்ஸ்ட் லுக்... !
      • 'மோடி தலையைத் துண்டிப்போம்': கொலை மிரட்டல்
      • 5 மீனவர்களுக்கு தூக்கு தண்டனை- கொழும்பு ஹைகோர்ட்! ...
      • சோனியாவின் மூன்றாவது படம் - விஜய் சேதுபதியுடன் நடி...
      • கொச்சியில் நூதன போராட்டம் ‘காதல் முத்தம்’ போலீஸ் அ...
      • இந்தியாவுக்காக மீண்டும் விளையாடுவது சந்தேகமே: விரக...
      • கத்தி தயாரிப்பாளர் கைது !?
      • மாறன் சகோதரர்கள் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு
      • கூட்டணி அமைக்க ஸ்டாலின் விரும்பினால் மகிழ்ச்சி! வை...
      • துரத்தும் தயாரிப்பாளர்கள்! ஓடும் முருகதாஸ்!
      • யுவன் சங்கர் ராஜாவுக்கு நிச்சயம் முடிந்தது: துபாயி...
      • தமிழகத்தில் 6152 அரசுப் பள்ளிகளில் டாய்லெட்டே கிடை...
      • தமிழக அரசியலில் பரபரப்பு... ஒரே மேடையில் திமுக- தே...
      • எந்த மாதிரியானது விஜய்-யின் அடுத்த படம்?
      • வீட்டை விட்டு விரட்டப்பட்டார் நடிகர் கார்த்திக்?.....
      • விஜய்யுடன் நடிக்க மறுத்த நடிகர்
      • இசை கல்லூரியில் படிக்க ஏ.ஆர். ரகுமான் விருப்பம்
      • மோனிகா கடைசி படம்
      • கோலிவுட் - பாலிவுட் வில்லன்கள் மோதல்
      • கத்தி விநியோகஸ்தருக்கு ரூ 2 கோடி நஷ்டமாம்!
      • கத்தி நஷ்டத்தின் பின்னணி இதுதான்
      • இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணியில் சேர லஞ்சமாக செக்...
      • நிர்வாண காட்சி படத்துக்கு கத்தரி வைக்காத சென்சார்
      • கடலுக்கு அடியில் எலக்ட்ரானிக் ஷோரூம்
      • விண்வெளிக்கு உபகரணங்கள் கொண்டு சென்ற அமெரிக்க சரக்...
      • கருப்பு பணம் பதுக்கியவர்கள் யார்-யார்?: சுப்பிரமணி...
      • பிறந்தநாளில் தாய்க்கு கோவில் கட்டும் நடிகர்
      • கறுப்பு பணம் பதுக்கிய 600 பேர் பெயர் பட்டியல் சுப்...
      • இந்தோனேசியாவில் மாயமான மலேசிய விமானம்?
      • விஜய்யுடன் எனக்குப் போட்டியா?.. - விஷால் விளக்கம்
      • சொத்துமதிப்பு எப்படி ரூ.2.98 கோடி அதிகரித்தது?: பொ...
      • உயிருக்கு அச்சுறுத்தலா? ஷாரூக், தீபாகாவுக்கு திடீர...
      • சகாயத்துக்கு ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு வழங்...
      • உலகில் முதன்முறையாக ஜன்னல் இல்லாத விமானம்
      • விபச்சார வழக்கில் கைதான நடிகை உயிருக்கு தொழிலதிபர்...
      • இந்தியா வல்லரசு நாடாகும் - விஜய்விளக்கம்
      • ஊழல் நஷ்டத்தை சரிகட்ட பால் விலையை உயர்த்துவதா?: கே...
      • கணக்கை எளிதாகச் செய்ய ஓர் இணையதளம்!
      • விஜய்க்கு மதுரை நீதிமன்றம் நோட்டீஸ்!
      • கருப்புப் பணம் பதுக்கியவர்கள் பெயர்களை நாளைக்குள் ...
      • அரசியல்வாதிகளெல்லாம் ரொம்ப "சில்லி"... சானியா கோபம்
      • அடுத்த சேவாக் என்று வர்ணிக்கப்படும் இளம் பேட்ஸ்மென...
      • ஆர்யா படத்தில் அஜீத்?
      • படப்பிடிப்புத் தளத்தில் நடிகையை பலாத்காரம் செய்ய ம...
      • இந்தியாவில்விடுதலைப் புலிகள் மீதான தடை ரத்தாகுமா?...
      • கருப்பு பணம்: 3 பெயர்களை வெளியிட்டது மத்திய அரசு
      • எனக்கும், வைகோவுக்கும் கருத்து வேறுபாடு இல்லை.. மு...
      • இந்தியாவுக்கு படையெடுக்கும் வெளிநாட்டவர்
      • பன்னீர் பதவியில் நீடிக்க கருணாநிதி ஆலோசனை
      • அனிருத்துக்கு விஜய் கொடுத்த பரிசு!
      • சொத்து விவரம் சமர்ப்பிக்காத அத்வானி, சோனியா,ராகுல்
      • ஆதார் அட்டை விவகாரத்தில் பல்டி
      • காஷ்மீரை மீட்பேன் என்ற பிலாவல் பூட்டோ மீது தாக்குதல்
      • ரஜினியிடம் பாடம் கற்ற சோனாக்ஷி
      • கால்பந்து கேப்டன் காதலி வீட்டில் சுட்டுக்கொலை
      • பின்லேடனை கண்டுபிடித்த பெல்ஜியன் மாலின்வா என்.எஸ்....
      • மதுபான விலையை உயர்த்தும் அரசு
      • கத்தி வசூல்: ரஜினி-விஜய் ரசிகர்கள் மோதல்
      • காந்திக்குப் பதிலாக நேருவை கொலை செய்திருக்க வேண்டு...
      • பாஜகவுடன் இருக்கலாமா, வேண்டாமா.. கட்சிக்காரர்களிடம...
      • பெங்களூர் சிட்டி ரெயில் நிலையத்தில் இலவச ‘வை–பை‘ இ...
      • நடிகைகளின் வாழ்க்கை ‘திருப்பங்கள்’
      • விஜய் "ஓவர்"... அடுத்து அஜீத் பக்கம் முருகதாஸ்!
      • ரஜினி வந்தா வரட்டும், யாரும் கட்டாயப்படுத்தவில்லை....
      • ரஜினியை சந்தித்து பேசிய "கா.சி" : கடுப்பில் பாஜக
      • பொறுமை இழந்த விஜய்சேதுபதி!
      • எந்திரனை முந்தியதா கத்தி? - விறுவிறு பாக்ஸ் ஆபிஸ்
      • ரகுமான் ஜோடியாக ஜோதிகா ரீ என்ட்ரி
      • பால் விலை லிட்டருக்கு ரூ.10 உயர்வு;முதல்வர் ஓ.பன்ன...
      • வந்தாச்சு ஆண்ட்ராய்டு லாலிபாப்!
      • கூகுள் தலைமை செயல் அதிகாரியாக தமிழகத்தை சேர்ந்த சு...
      • விஜய் ஆவேசம் திமுக அதிருப்தி!!
      • ரூட் கிளியர் விஜயகாந்த் நிம்மதி
      • திடீரென ரசிகர்களை சந்தித்த ரஜினி
      • காந்திக்கு பதிலாக நேருவை கொலை செய்திருக்க வேண்டும்...
      • அமைச்சர் ஆனதும் ரூ.2.98 கோடி அதிகரித்த பொன்.ராதாக...
      • சுவிஸ் வங்கியில் பணம் போட்ட அந்த 4 தமிழக புள்ளிகள்...
      • தீபாவளி ஹிட் 'கத்தி'யோ, 'பூஜை'யோ இல்ல!!!?
      • ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு ஆயுத குவியலை போட்ட அமெர...
      • ஃப்ளாஷ்பேக்: இந்திய நடிகர்களின் அரசியல் வழிகாட்டி ...
      • வளர்ப்பு மகன் திருமணம் பற்றி ஜெயலலிதா சொன்ன பொய்கள்
      • லதா ரஜினிகாந்த்; அழகிரி முதுகில் எஸ்எஸ்ஆர் போட்ட ...
      • ஜெயலலிதாவால் கட்சியை விட்டு நீக்கப்பட்டவர் எஸ்.எஸ்...
      • சல்மானின் சவாலை ஏற்பாரா ரஜினி?
      • சென்னை அணியை ஊக்குவிக்க வந்த ரஜினி -அமிதாப் பச்சன்
      • மகாராஷ்டிராவில் துணை முதல்வர் பதவி கொடுத்து சிவசேன...
      • ஸ்ரீரங்கத்தில் ஜெயலலிதா மீண்டும் போட்டி !?
      • வச்சா குடுமி அடிச்சா மொட்டை ' தமிழக அமைச்சர்களின் ...
      • பதக்கத்தை வாங்க மறுத்ததால் சரிதா தேவி சஸ்பெண்ட்
      • கனடா நாடாளுமன்றம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்!
      • இந்த தாடி 'அம்மா தாடி' ! தமிழக அமைச்சர்களின் கூத்த...
      • கம்ப்யூட்டர், டேப்ளட்களைக் கையாள பீகார் அமைச்சர்கள...
      • பிரபுதேவாவின் அடுத்த காதல்?
      • கடற்படை ஊழலை அம்பலப் படுத்திய வீரருக்கு அடிஉதை:வேட...
      • டெரர் கிளப்பும் சூர்யாவின் மாஸ் கெட்டப்
      • தனுஷின் அனேகன் ட்ரைலர்
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ►  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ►  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.