மும்பையில்
நடக்கும் கங்கா லீக் கிரிக்கெட்
தொடரில், 29 பந்தில் 100 ரன்கள் அடித்து சாதனை
படைத்தார் நெய்ல் நர்வேகர்.
மும்பையில்
கங்கா லீக் ‘பி’ டிவிசன்
போட்டிகள் நடக்கின்றன. இதில் முதலில் களமிறங்கிய
ஜிம்கானா அணி, முதல் இன்னிங்சில்
349 ரன்கள் எடுத்தது. பின் களமிறங்கிய பர்கோபெனே
அணிக்கு பிரிதிவ் ஷா 110, பராக் 110 ரன்கள்
எடுத்தனர்.
நெய்ல்
நர்வேகர் 29வது பந்தில் சதம்
அடித்து சாதித்தார். இவரது 103 ரன்கள் (30 பந்து, 12 சிக்சர், 6 பவுண்டரி) கைகொடுக்க, பர்கோபெனே அணி 9 விக்கெட்டுக்கு, முதல்
இன்னிங்சில் 492 ரன்கள் குவித்து வெற்றி
பெற்றது.
நர்வேகர்,
26, கூறியது:
96 ரன்கள்
எடுத்திருந்த போது, போட்டி முடிய
இன்னும் 6 நிமிடம் மட்டும் இருப்பதாக
சக வீரர்கள் தெரிவித்தனர். இதையடுத்து நான் சந்தித்த 29 பந்தை
சிக்சருக்கு அனுப்பி சதம் அடித்தேன்.
மிக விரைவில் சதம் அடிப்பேன் என்று
எண்ணியதே இல்லை. என்னை யுவராஜ்
சிங்குடன் ஒப்பிட்டு பேசுவது மகிழ்ச்சி தருகிறது.
மும்பை
அணிக்காக பல்வேறு தொடர்களில் உத்தேச
அணியில் எப்போதும் இடம் பெற்று விடுவேன்.
கடைசியில் தேர்வு செய்யப்பட மாட்டேன்.
இப்போது சதம் அடித்து விட்டதால்
இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப் போவதில்லை.
இவ்வாறு
நர்வேகர் கூறினார்.
No comments:
Post a Comment