விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Tuesday, May 1, 2012

    காதல் : அஜீத் - ஷாலினி



    ஏய்...’ என்ற அலறலோடு அஜீத் கத்தியைக் காற்றில் வீச, எதிரே இருந்த ஷாலினியின் வலது கையில் ரத்தக் கோடு. 'கட்... கட்...’ பதறிப்போனது மொத்த யூனிட்டும்.

    திட்டமிட்ட காட்சி அதுதான். ஆனால், நிஜமாகவே ஷாலினி யின் கையைக் கத்தி பதம்பார்த்துவிட்டது எதிர்பாராத திருப்பம். ரத்தம் பார்த்த அஜீத் படபடப்பாகிவிட்டார் தாம்தூம் என்று ஆர்ப்பாட்டம் செய்து, அடுத்த சில நிமிடங்களில், படப்பிடிப்புத் தளத்துக்கு ஒரு ஆஸ்பத்திரியையே கொண்டுவந்துவிட்டார்.

    வலியால் கத்தித் தீர்க்க வேண்டிய ஷாலினி, 'நோ பிராப்ளம்’ என்பதுபோல அமைதியாக இருந்தார்.

    ''ஷாலினியின் அந்த நிதானம், என்னை ஆழமாகப் பாதித்துவிட்டது. 'ஒரு பெண்ணால் இத்தனை அமைதியாகப் பிரச்னையை எதிர்கொள்ள முடியுமா?’ என்று ஆச்சர்யமாக இருந்தது!''- இப்போது சொல்கிறார் அஜீத்.

    ''அடுத்தவருக்குச் சிறு துன்பம் என்றால் இவ்வளவு அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டுமா? தான் யார், தன்னுடைய நிலை என்ன... என்பதை எல்லாம் விட்டுவிட்டு, முகத்தில் பதற்றமும் மனதில் அக்கறையுமாக ஒருவரால் அல்லாட முடியுமா என்று வியப்பாக இருந்தது!'' என்று சொல்லும் ஷாலினியின் இதழ் ஓரத்தில் வெட்க இழை!
    எதிர் எதிர் துருவங்கள் ஈர்க்கப்படுவது இயல்பு தானே... ஷாலினிக்கும் அஜீத்துக்கும் காதல் அரும்பியது அந்தத் தருணத்தில்தான்!

    ''அஜீத்தும் ஷாலினியும் சந்தித்துக்கொண்டதே அந்தத் தினத்தில்தான். அஜீத்தான் ஹீரோ, ஷாலினிதான் ஹீரோயின் என்பதில் உறுதியாக இருந்த நான், கஷ்டப்பட்டு ஷாலினியைச் சம்மதிக்கவைத்து அழைத்து வந்தேன். அஜீத் தனியாக வும் ஷாலினி தனியாகவும் நடித்து முடித்த நிலை யில், அடுத்த ஷெட்யூலில் காம்பினேஷன். முதல் சந்திப்பிலேயே ரத்தம். ஷாலினியின் அப்பா, 'இது நல்ல சகுனம்தான்’ என்றார். எல்லாம் நல்லவித மாகவே முடிந்திருக்கிறது!'' என்றார் 'அமர்க்களம்’ படத்தின் டைரக்டர் சரண்.

    ''ஷாலுவை (ஷாலினியைத்தான் இப்படிச் செல்லமாகக் குறிப்பிடுகிறார்) பார்த்தால் ஆச்சர் யம்தான் மிஞ்சுகிறது. '20 வயதில் ஒரு பெண்ணுக் குள் இத்தனை தீர்க்கமான சிந்தனையா...’ என்று பல நேரங்களில் பிரமித்துப்போயிருக்கிறேன்...'' என்கிறார் அஜீத்.


    ''இதற்கு முன் நான் சந்தித்த பெண்களிடம் காண முடியாத தீர்க்கம் இந்தப் பெண்ணின் பார்வைக்குள்ளும் செயலுக்குள்ளும் ஒளிந்து இருப்பதாக எனக்குத் தோன்றியது. சட்டென்று எனக்குள் ஒரு மின்னல்... 'என் தேடல் இதை நோக்கித்தானோ...’ நேராக ஷாலினியிடம் போய், 'நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்க ஆசைப் படறேன்’ என்று சொன்னேன். என்ன பதில் வருமோ என்ற பதற்றம் எனக்கு!'' பேசுவதை நிறுத்தித் தலையைக் கோதிவிட்டபடி, பின்னால் சாய்ந்துகொண்டார் அஜீத்.

    ''அஜீத் என்னிடம் வந்து இப்படிக் கேட்டபோது எனக்குள் பெரிய அதிர்ச்சி எல்லாம் எழவில்லை. சொல்லப்போனால், என் மனமே மெள்ள அஜீத் பக்கம் சாயத் தொடங்கிவிட்டதாகத்தான் உணர்ந்தேன். ஆனால், நான் அப்பா பொண்ணு. அதனால், 'எனக்கு ஓ.கே... அப்பாவிடம் பேசி விடுங்கள்’ என்று சொல்லிவிட்டேன். அப்பாவிடம் அஜீத் பேசும் முன்பே நான் பேசிவிட்டேன். இந்த விஷயத்தில் எல்லோருக்கும் சந்தோஷம்!'' என்றார் ஷாலினி.

    ''எல்லோருக்கும் சந்தோஷம். சரி... ஆனால், ஒரு டைரக்டர் என்ற முறையில் எனக்குப் பெரிய வருத்தம். 'ஷாலினிங்கிற நடிகையை இழந்துட்டோமே’ன்னு. மற்றபடி, நான் அடம்பிடிச்சு சினிமாவில் இவர்களை ஜோடி சேர்த்தது வாழ்க்கையிலும் ஜோடி சேருவதற்குத்தான் என்று நினைக்கும்போது சந்தோஷமாக இருக்கிறது'' என்றார் சரண்!

    ஆக, இனிமேல் ஷாலினி சினிமாவில் நடிக்கப்போவது இல்லை!


    ''என் ஆசை அதுதான்... நான் ஒரு காட்டாறு மாதிரி யான மனிதன். எதையோ தேடி அருவியாக விழுந்து, பாறைகளில் மோதி, தேவை இல்லாமல் பல விஷயங்களைச் சுமந்துகொண்டு இருக்கிறேன். இப்போதான் எனக்கான கடலைத் தேடிக் கண்டுபிடித்துச் சங்கமம் ஆகிறேன். இந்தக் கடல் என்னைக் கட்டுப்படுத்தவும், சாந்தப்படுத்தவும் உறுதுணையாக இருக்க ஆசைப்படுகிறேன்!'' என்றார் அஜீத்.

    ''நடிப்பது என்பது பணத் தேவைக்காகவோ, அதீதப் புகழுக்காகவோ இல்லை. என் சந்தோஷத்துக்காக... இப்போது அடுத்த பொறுப்பு கிடைத்திருக்கிறது. அங்கே மாறிவிட்டேன்''- மெலிதான புன்னகையோடு சொல்கிறார் ஷாலினி.

    ''ஷாலுவைவிட எனக்குத்தான் பொறுப்பு அதிகம். ஷாலுவைத் தமிழ்நாட்டில் உள்ள குடும்பங்கள் தங்கள் வீட்டுப் பெண்ணாக மதிக்கின்றன. அவர்கள் எல்லோரும் எனக்கும் ஷாலுவுக்கும் நல்வாழ்த்துக்களை அனுப்பி இருக்கிறார்கள். இப்போது நான் தமிழ்நாட்டின் மருமகன்'' என்றார் அஜீத்.

    ''இப்போது எதிர்காலம் பற்றித்தான் அதிகம் பேசிக் கொள்கிறோம். அஜீத்தின் திட்டங்களைச் சொன்னால் பல பெண்களுக்கு என் மேல் பொறாமை வரும்'' என்று பெரிய பீடிகை போட்டார் ஷாலினி.

    ''ஒரு நேரத்தில் ஒரு படம்... 15 நாள் சினிமாவுக்கு... 15 நாள் குடும்பத்துக்கு. இந்தத் தொடையில் ஒன்று, அந்தத் தொடையில் ஒன்று... வலது தோளில் ஒன்று, இடது தோளில் ஒன்று... தலையில் ஒன்று... கழுத்தைக் கட்டிக் கொண்டு முன்பக்கம் ஒன்று, பின்பக்கம் ஒன்று... இப்படி நிறையக் குழந்தைகள். என் ஓய்வு நேரங்கள் எல்லாம் என் ஸ்வீட் ஹார்ட்டுக்கும் ஜூனியர் அஜீத், ஷாலினிகளுக்கும்தான். நல்ல தகப்பனாக... நல்ல ஆசிரியனாக... உண்மையான சேவகனாக, நிறைவான வாழ்க்கை வாழ ஆசைப்படுகிறேன். அவர்களுக்கு என்று வாழ்க்கையின் எல்லாக் கதவுகளையும் திறந்துவைக்கப் போகிறேன்!'' - நெகிழ்ச்சி ததும்புகிறது அஜீத் குரலில்.

    ஏற்றுக்கொண்ட பொறுப்புகளை முடிக்கும் வேகத்தில் இருக்கிறார் ஷாலினி. எல்லாம் முடிந்து இரண்டு குடும்பங் களும் கலந்து பேசி திருமணத்துக்காக ஒரு நல்ல நாளை முடிவு செய்யப்போகிறார்கள். அதுவரையில் இருவர் கை களிலும் இருக்கும் செல்போன்கள் மாறி மாறி ஒலித்துக் கொண்டே இருக்கும்... அவர்களின் சந்தோஷ எதிரொலியாக!



    Posted by விழியே பேசு... at 5:52 PM 1 comment:
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: சினிமா

    ஓமனில் 6 நாட்களுக்கு ஒரு இந்தியர் தற்கொலை: அதிர்ச்சி தகவல்


    பொருளாதார பிரச்சனை அல்லது சொந்த பிரச்சனை காரணமாக ஓமனில் 6 நாட்களுக்கு ஒரு இந்தியர் தற்கொலை செய்துகொள்வதாக அரசு தகவல்கள் தெரிவித்துள்ளன.

    கடந்த 4 மாதத்தில் மட்டும் ஓமனில் 23 இந்தியர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் தலா 8 இந்தியர்களும், மார்ச்சில் 4 பேரும், ஏப்ரலில் 3 பேரும் தற்கொலை செய்துள்ளனர். தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை குறித்த புள்ளிவிவரம் மஸ்கட்டில் உள்ள இந்திய தூதரகத்திடம் உள்ளது என்று டைம்ஸ் ஆப் ஓமன் பத்திரி்க்கை தெரிவித்துள்ளது.

    கடந்த வாரம் ருவி பகுதியில் வசித்து வந்த பெண் ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு 3 குழந்தைகளின் உள்ளனர். கடந்த 2010ம் ஆண்டு ஓமனி்ல் 50 இந்தியர்களும், 2011ல் 54 பேரும் தற்கொலை செய்துள்ளனர்.

    ஓமனில் உள்ள இந்தியர்களிடையே அதிகரி்த்து வரும் தற்கொலை எண்ணத்தை மாற்ற இந்திய சமூக மற்றும் மத அமைப்புகள் முயற்சி செய்து வருகின்றன.

    நிதி பிரச்சனை அல்லது சொந்த பிரச்சனைகளால் தான் இந்தியர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்று மனநல மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    மனஅழுத்ததில் உள்ள இந்தியர்களுக்கு உதவுவதற்காகவே இந்திய உயர் அதிகாரி தலைமையிலான குழு செயல்பட்டு வருவதாக இந்திய தூதரக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.



    Posted by விழியே பேசு... at 5:27 PM No comments:
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    அரசியல் பிரவேசம் குறித்து சச்சின் தெண்டுல்கர் பேட்டி


    இந்திய கிரிக்கெட்டின் நம்பிக்கை நட்சத்திரமான சச்சின் தெண்டுல்கர் கடந்த 23 ஆண்டுகளாக விளையாட்டு துறைக்கு செய்த சேவையை பாராட்டி, மேல்-சபை நியமன எம்.பி.யாக பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார். இதன் மூலம் அவர் அரசியலுக்கு வருவாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
     
    இதற்கு முன் நடிகர்கள் சிலருக்கு நியமன எம்.பி. பதவி கொடுத்து, அவர்களை காங்கிரஸ் தனது கட்சிக்கு இழுத்ததுபோல், சச்சினையும் அரசியலுக்கு இழுக்க முயற்சிப்பதாகவும், சச்சினின் செல்வாக்கை அரசியலுக்கு பயன்படுத்த காங்கிரஸ் முயற்சி செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
     
    இந்நிலையில் புனேவில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சச்சின், ‘நான் அரசியல்வாதி அல்ல. எப்போதும் விளையாட்டு வீரராக இருக்கவே நான் விரும்புகிறேன். கிரிக்கெட் தான் எனது வாழ்க்கை. கிரிக்கெட்டை விட்டுவிட்டு, அரசியலில் ஒருபோதும் ஈடுபட மாட்டேன். தொடர்ந்து கிரிக்கெட் விளையாடுவேன்’ என்றார்.
     
    இவ்வாறு கூறியதன் மூலம் சச்சின் அரசியலுக்கு வரக்கூடாது என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பை அவர் பூர்த்தி செய்திருக்கிறார்.
     
    மேலும், ’கிரிக்கெட்டில் நூறு சதங்கள் அடிப்பதைவிட, உலககோப்பை வெல்வதே எனது கனவாக இருந்தது. அதை அடைய நான் 22 வருடங்கள் காத்திருந்தேன். ஒருவர் தனது கனவை தொடர்ந்து துரத்தினால் நிச்சயம் ஒருநாள் அது மெய்யாகும்’ எனவும் சச்சின் கூறியுள்ளார்.


    Posted by விழியே பேசு... at 5:15 PM No comments:
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி, விளையாட்டு செய்திகள்

    என் ரசிகர்கள் விஜய்யை விமர்சிக்க கூடாது- அஜித்




    நானும் விஜய்யும் சினிமாவுக்கு வெளியே நல்ல நண்பர்கள். என் ரசிகர்கள் விஜய்யை விமர்சிப்பது முகம் சுளிக்க வைக்கிறது. அதை நிறுத்திக் கொள்ள வேண்டும், என்றார் அஜீத்.

    நடிகர் அஜித் இன்று தனது 41-வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி அவர் அளித்த பேட்டி:

    இத்தனை ஆண்டு சினிமா வாழ்க்கையில் நீங்கள் கற்றுக் கொண்டது?

    என்னுடைய வளர்ச்சியில் ரசிகர்களின் பங்கை மறக்கமாட்டேன். இத்தனை ஆண்டு சினிமா வாழ்க்கையில் நல்ல நல்ல படங்களில் நடித்துள்ளேன். மோசமான படங்களிலும் நடித்துள்ளேன். நல்ல முடிவுகள் எடுத்தது உண்டு. மோசமான முடிவுகளையும் எடுத்தேன். அற்புதமான மனிதர்களையும் சந்தித்திருக்கிறேன். இதன் மூலம் நிறைய அனுபவங்கள் கிடைத்தன. இவை என்னை செதுக்கி உள்ளது. கடந்த கால நிகழ்வுகள் பற்றி எந்த வருத்தமும் கிடையாது.

    உங்களுக்கு போட்டி யார்? லட்சியம் என்ன?

    எல்லாம் விதிப்படித்தான் நடக்கும் என்பதை நான் நம்புகிறேன். எனக்கு பெரிய லட்சியங்கள் கிடையாது. வாழ்க்கை என்பது பெரிய பரிசு. ஆக்கப்பூர்வமாக வாழ ஆசைப்படுகிறேன். நான் யாருக்கும் போட்டியும் இல்லை. நாம் சாப்பிடும் ஒவ்வொரு அரிசியிலும் நம் பெயர் உள்ளது என்பதை நான் நம்புகிறேன். எனவே நமக்கு கிடைப்பது கிடைக்கும். ஏன் கவலைப்பட வேண்டும்.

    ஒரு வெற்றிப் படத்துக்கான தேவை, பார்முலா என்ன?

    படத்தின் வெற்றிக்கான பார்முலா தெரிந்தால் எல்லோருமே 100 சதவீத ஹிட் கொடுக்க முடியும். ஒரு படம் ஜெயிப்பதற்கு பல விஷயங்கள் உள்ளது. அது கூட்டு முயற்சி. படங்களை தேர்வு செய்ய இயக்குனர், தயாரிப்பாளர்களுடனான புரிதல் முக்கியம். கதையும் முக்கியமானது. படத்தை முடிவு செய்த பின் எதிலும் நான் தலையிடமாட்டேன்.

    ரொம்ப வெளிப்படையாகப் பேசுகிறீர்களே?

    நான் உணர்வு பூர்வமாக பேசுகிறேன். நினைப்பது ஒன்று பேசுவது ஒன்று கிடையாது. அரசியல் ரீதியாக இது சரி இல்லாமல் இருக்கலாம். அது என் குற்றம் இல்லை.

    விஜய்க்கு நீங்கள் போட்டியா? உங்கள் இருவரின் ரசிகர்களும் அவ்வப்போது மோதிக் கொள்கிறார்களே?

    அஜித்துக்கும் எனக்கும் தொழில் முறை போட்டிதான் உள்ளது என்றும், சினிமாவுக்கு வெளியே நாங்கள் இருவரும் நண்பர்கள் என்றும் விஜய் சொல்லி இருப்பது உண்மைதான்.

    விஜய் மனைவி சங்கீதாவும் என் மனைவி ஷாலினியும் நட்புடன் பழகுகிறார்கள். இருவர் குழந்தைகளும் ஒன்றாக இருக்கின்றனர். எங்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் ரசிகர்கள் ஒருத்தரை ஒருத்தர் பற்றி தவறாக கருத்துக்கள் வெளியிடுவது மனதை புண்படுத்துகிறது. சாதாரண மனிதன் இதை பார்க்கும்போது முகம் சுளிக்கிறான். எனவே இவற்றை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

    உங்கள் முடிவுகளில் மனைவி ஷாலினி குறுக்கிடுவாரா?

    மனைவி ஷாலினி எல்லா விஷயங்களிலும் எனக்கு உதவியாக இருக்கிறார். சினிமா சம்பந்தமாக நான் எடுக்கும் முடிவுகளில் தலையிடுவது இல்லை.

    நீங்களே சமைத்து விருந்து கொடுப்பதாக அடிக்கடி செய்தி வருகிறதே?

    நான் நன்றாக சமைப்பேன். எனது அம்மா சிறு வயதில் இருந்தே சமையல் கற்று கொடுத்துள்ளார். ஓய்வு நேரத்தில் சமைத்து நண்பர்களை சந்தோஷப்படுத்துவது எனக்குப் பிடிக்கும்.



    Posted by விழியே பேசு... at 5:00 PM No comments:
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: சினிமா

    ஸ்னேகாவை திருமணம் செய்வதாக அறிவித்ததும் 'மிரட்டல்' வந்தது!- பிரசன்னா


    கல்யாணத்துக்குத் தயாராகிவிட்டனர், நடிகை ஸ்னேகாவும் நடிகர் பிரசன்னாவும். ஊரெல்லாம் பத்திரிகை கொடுத்து, விவிஐபிக்களை அழைத்து ஓய்ந்த நிலையில், சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.

    இருவரும் சந்தித்துக் கொண்டது, காதல் வளர்த்தது, பெற்றோரின் சம்மதத்துக்குக் காத்திருந்தது, சாதிகளை மீறி திருமணத்துக்கு சம்மதம் வாங்கியது என இத்தனை நாட்களும் மீடியாவில் அரைபட்ட செய்திகள் கேள்விகள், பதில்களாக ஓடிக் கொண்டிருந்தன...

    பிரசன்னா, ஸ்னேகா திருமணம் வருகிற 11ம் தேதி காலை 9 மணிக்கு, சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் நடக்கிறது.

    தம்பதிகளாகப் போகும் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்தோம். வாய் நிறைந்த புன்னகையுடன் திருமணத்துக்கு அழைப்பு விடுத்தனர் இருவரும்.

    அவர்களின் திருமணத் திட்டங்கள், திருமணத்துக்குப் பிந்தைய திட்டங்கள் குறித்து நம்மிடம் கூறியதாவது:

    இந்தத் திருமணத்தை பிரசன்னாதான் முதலில் அறிவித்தார். ஆனால் அதன் பிறகு நீங்கள் எதுவுமே சொல்லாமல் அமைதி காத்தீர்களே?

    ஸ்னேகா: இருவரும் சேர்ந்து அறிவிக்கத் திட்டமிட்டிருந்தோம். அது கொஞ்சம் முன்கூட்டியே வந்துவிட்டது. ஆனால் அதன் பிறகு நானே ஒரு பேட்டியில் சொல்லிவிட்டேனே.

    உண்மையை சொல்லுங்கள். நீங்கள் எத்தனை வருடங்களாக காதலித்தீர்கள்? அச்சமுண்டு அச்சமுண்டுக்கு முன்பிருந்தே காதலா?

    பிரசன்னா: அச்சமுண்டு அச்சமுண்டுக்கு முன்பு அவரைப் பிடிக்கும். அந்தப் படத்துக்குப் பிறகு இரண்டு வருடங்களாகக் காதலித்தோம். எங்கள் 2 பேரின் வீட்டிலும் சம்மதித்தபிறகுதான், காதல் பற்றி வெளியில் சொல்ல ஆரம்பித்தோம்.

    பிரசன்னாவிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம்?

    ஸ்னேகா: அவரது உண்மையான காதல். அந்தக் காதலை எப்போதும் ஒரே மாதிரி அவர் கொண்டாடும் விதம். எனக்கு மிகப் பொருத்தமான இணை அவர் என முடிவு செய்த பிறகே காதலை ஒப்புக் கொண்டேன்.

    மாமனார் மாமியார் பற்றி...

    ஸ்னேகா: அதை கண்டிப்பாக நான் சொல்லியாக வேண்டும். எனக்கு மாமனார்-மாமியார் எப்படி இருக்க வேண்டும் என்று நினைத்தேனோ அப்படியே பிரசன்னாவின் பெற்றோர் இருக்கின்றனர். திருமணத்திற்கு பின் ஆறு மாத காலம் தனிக்குடித்தனம் இருக்கிறோம். பின்னர் அனைவரும் ‌ஒரே குடும்பத்தில் சேர்ந்து இருப்போம்.

    எதிர்காலத் திட்டங்கள்...

    ஸ்னேகா: என்ன திட்டம்... ஓ குழந்தைகள் பற்றியா... அதைப் பற்றியெல்லாம் யோசிக்கவில்லை. கொஞ்சம் ரிலாக்ஸ்டாகத்தான் அதை முடிவு செய்வோம். நிறைய கமிட்மென்ட்ஸ் உள்ளன. எல்லாவற்றையும் முடித்த பிறகே குழந்தைகள்.

    ஸ்னேகாவை திருமணம் செய்வதாக அறிவித்ததும் உங்களுக்கு மிரட்டல் வந்ததாமே...

    பிரசன்னா: அட ஆமாங்க. ட்விட்டர் வலைதளத்தில் சிலர் எங்கள் புன்னகை அரசியையா கல்யாணம் செய்ய போகிறாய் என்று மிரட்டினர். ஆனால் அந்த மிரட்டலை நான் புன்னகையோடு வரவேற்கிறேன். அவர்களுக்கு நான் சொல்வது, திருமணத்திற்கு பிறகும் ஸ்னேகாவை புன்னகை அரசியாகவே பார்த்துக் கொள்வேன் என்றார்.

    பின்னர், "எல்லாரும் திருமணத்துக்கு தவறாம வந்துடுங்க, வாழ்த்துங்க", என்றனர் இருவரும்.


    Posted by விழியே பேசு... at 4:00 PM No comments:
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: சினிமா

    மனிதர்கள் வாழ தகுதியுள்ள பூமி போன்ற கிரகங்கள் கண்டுபிடிப்பு


    விண்வெளியில் நட்சத்திரங்களை போன்று ஏராளமான கிரகங்கள் உள்ளன. அவை பூமியை போன்ற அமைப்பும் தோற்றமும் இருப்பதாக கருதப்படுகிறது. ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளி விண்வெளி விஞ்ஞானி ஆதித்யா சோப்ரா குழுவினர் இது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
     
    அப்போது பூமியை போன்றுள்ள அந்த கிரகங்கள் மனிதர்கள் வாழ தகுதியுள்ளவையாக இருக்கின்றன. அங்கு திரவ நிலையில் தண்ணீர் மற்றும் சீரான தட்பவெப்ப நிலை போன்றவை இருப்பது தெரிய வந்துள்ளது. பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே இந்த கிரகங்களில் மனிதர்கள் மற்றும் உயிரினங்கள் வாழக்கூடிய தகுதி இருப்பதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 


    Posted by விழியே பேசு... at 3:52 PM No comments:
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: அதிசய செய்திகள், செய்தி

    ஜனாதிபதி தேர்தல்: பாஜக கூட்டணியிலும் பிளவு!


    ஜனாதிபதி தேர்தலில் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட காங்கிரஸ் வேட்பாளர்கள் யாரையும் ஆதரிக்க மாட்டோம் என்ற பாஜக தலைவர் சுஷ்மா ஸ்வராஜின் பேச்சு அவரது சொந்தக் கருத்தாகும் என்று தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முக்கியக் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் தெரிவித்துள்ளது.

    இதன்மூலம் பாஜக கூட்டணியில் இந்த விஷயத்தில் ஒருமித்த கருத்து இல்லை என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

    ஜனாதிபதி வேட்பாளர் யார் என்ற விஷயத்தில் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள கட்சிகள் ஆளுக்கு ஒரு பெயரை கூறி வருகின்றன. அதே போல எந்தக் கூட்டணியிலும் இல்லாத கட்சிகளும் வாய்க்கு வரும் பெயர்களை சொல்லி வருகின்றன.

    இந் நிலையில் பாஜக கூட்டணியிலும் ஒற்றுமை இல்லை என்பது தெளிவாகியுள்ளது.

    அப்துல் கலாம் போட்டியிட விரும்பினால் அவரை ஆதரிக்கத் தயார் என்றும் அதே நேரத்தில் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட காங்கிரஸ் வேட்பாளர்கள் யாரையும் ஆதரிக்க மாட்டோம் என்றும் சுஷ்மா ஸ்வராஜ் கூறியிருந்தார்.

    முகர்ஜி தீவிரமான அரசியலில் உள்ளார். அன்சாரிக்கு ஜனாதிபதி பதவிக்கான தகுதி கிடையாது என்றும் அவர் கூறியிருந்தார்.

    இந் நிலையில் இன்று பேட்டியளித்த பாஜக கூட்டணியின் மிக முக்கிய கட்சியான ஐக்கிய ஜனதா தளத் தலைவரான சரத் யாதவ், சுஷ்மாவின் பேச்சு முழுக்க முழுக்க அவரது சொந்தக் கருத்து. அது கூட்டணியில் கருத்து அல்ல. இந்த விஷயத்தில் நாங்கள் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்றார்.


    Posted by விழியே பேசு... at 3:51 PM No comments:
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி
Newer Posts Older Posts Home
Subscribe to: Posts (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ▼  2015 (650)
    • ▼  August (1)
      • புலி பட பாடல்கள் டவுன்லோட் (Puli Tamil Movie Songs...
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ►  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ►  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.