நடிகை ஊர்வசியுடன் ஏற்பட்ட விவாகரத்தையடுத்து, நடிகர் மனோஜ் கே.ஜெயன், கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆஷா என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
மலையாளத்தை சேர்ந்தவர் நடிகர் மனோஜ் கே.ஜெயன். மலையாள சினிமாவில் இவர் மிகவும் பிரபலமானவர். தமிழிலும் நிறைய படங்களில் நடித்து இருக்கிறார். இவர் மாஜி கதாநாயகி ஊர்வசியை காதலித்து திருமணம் செய்தவர். பின்னர் இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இவர்களுக்கு எட்டு வயதில் ஒரு குழந்தை உள்ளது. தற்போது அந்த குழந்தை மனோஜ் கே விஜயனிடம் வளர்ந்து வருகிறது.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் நடிகர் மனோஜ் கே ஜெயன், திருவனந்தபுரத்தை சேர்ந்த ஆஷா என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். திருச்சூரில் மனோஜின் நெருங்கிய உறவினர் வீட்டில் நடந்த இந்த திருமணத்தில் இருவீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment