2011ஆம் ஆண்டு விக்ரமுக்கு சிறப்பாக அமைந்திருக்கிறது. ஒரே படத்திற்காக சில ஆண்டுகளாக நடித்துகொண்டிருக்கும் விக்ரம், இந்த ஆண்டில் இரண்டு படங்களில் நடிக்கவுள்ளார்.
தற்போது இயக்குநர் விஜய் இயக்கத்தில் விக்ரம் நடித்துகொண்டிருக்கும் படத்தின் படப்பிடிப்பு முடிவடைத நிலையில், தனது அடுத்தப் படத்திற்கு தயாராகிவிட்டார் சியான்.
இந்த படத்தை சுசீந்திரன் இயக்கவிருக்கிறார். 'வெண்ணிலா கபடிக்குழு', நான் மகான் அல்ல' படங்களுக்குப் பிறகு சுசீந்திரன் இயக்கியிருக்கும் 'அழகர்சாமியின் குதிரை' படமும் வெளியீட்டுக்கு தயாராக இருக்கிறது. இதற்கிடையில் விக்ரம் படவேலைகளில் மும்முரமாக ஈடுபட்டிருக்கும் சுசூந்திரன், இப்படத்தின் படப்பிடிப்பை ஏப்ரல் 6ஆம் தேதியன்று துவங்குகிறார்.
விஜய் இயக்கத்தில் விக்ரம் நடித்து முடித்திருக்கும் படத்திற்கு இன்னும் உறுதியான தலைப்பு வைக்கப்படவில்லை. தற்சமயம் 'தெய்வமகன்' மற்றும் 'பிதா' ஆகிய இரண்டு தலைப்புகளை தேர்வு செய்துவைத்திருக்கிறார்களாம்.

No comments:
Post a Comment