செல்வராகவன் இயக்கிய காதல் கொண்டேன் படத்தில் தனுஷ் ஜோடியாக அறிமுகமானவர் சோனியா அகர்வால். அந்த படத்தின் படப்பிடிப்பின்போது செல்வராகவனுக்கும், சோனியா அகர்வாலுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்கள்.
திருமணத்துக்குப்பின் இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து இரண்டு பேரும் விவாகரத்து செய்து கொண்டார்கள். இந்த நிலையில், செல்வராகவனுக்கு கீதாஞ்சலி என்ற பெண்ணுடன் காதல் ஏற்பட்டது. இருவருக்கும் நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்தது.
தனிமையில் இருந்த சோனியா அகர்வாலும் இப்போது காதல்வலையில் சிக்கியிருக்கிறார். அவருடைய காதலர், கன்னட நடிகர் சுதீப். இருவரும் சண்டு என்ற கன்னட படத்தில் ஜோடியாக நடித்தபோது, அவர்களுக்கு இடையே காதல் துளிர்விட்டதாக கூறப்படுகிறது.
சோனியா அகர்வால் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றதுபோல், சுதீப்பும் மனைவியை பிரிந்து வாழ்கிறார். அதனால் இரண்டு பேரும் ஒருவருக்கொருவர் ஆறுதலாக பழகி வருகிறார்கள்.
சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடந்த நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கு சோனியா அகர்வாலும், சுதீப்பும் ஜோடியாக வந்தார்கள். அன்று இரவு விசாகப்பட்டினத்தில் நடந்த விருந்திலும் ஜோடியாக கலந்துகொண்டார்கள்.
இதுபற்றி சோனியா அகர்வாலிடம் கேட்டபோது 'எனக்கு சுதீப்பை நன்றாக தெரியும். அவர் எனக்கு நண்பர் மட்டுமே. ரொம்ப நாட்களுக்கு பிறகு விசாகப்பட்டினத்தில் சந்தித்தோம் அவ்வளவுதான். எனக்கு எப்பொழுது காதல் செய்ய நேரமில்லை எனது திரையுலக வாழ்க்கை தான் எனக்கு முக்கியம்.'

No comments:
Post a Comment