கிசுகிசுக்களால் நடிகைகள் பாதிக்கப்படுகின்றனர் என்று வருத்தப்பட்டார் திரிஷா. இதுகுறித்து ஐதராபாத்தில் அவர் அளித்த பேட்டி வருமாறு:-
என்னைப் பற்றி நிறைய கிசுகிசுக்கள் வருகின்றன. அதற்கு பதில் சொல்வதை தவிர்க்கிறேன். நான் பதில் சொல்ல துவங்கினால் அது நீண்டு கொண்டே போகும். நான் காதலிக்கிறேன் என்றனர். திருமணத்துக்கு தயார் ஆகிவிட்டதாக எழுதினார்கள்.
திருமணம் நடந்து விட்டது என்றும் வதந்தி பரப்பினர். என்னிடம் கேட்காமலேயே இவை வருகின்றன. நான் பதில் சொன்னாலும் அவை வேறு கோணத்தில் வருகின்றன. எனவே பேசாமல் இருப்பதுதான் நல்லது என்று ஒதுங்கி இருக்கிறேன்.
நடிகைகளுக்கும் குடும்பங்கள் உள்ளது. இது போன்ற கிசுகிசுக்களால் அவர்களுக்கு சங்கடங்கள் எற்படுகிறது. வதந்திகளுக்கு பதில் சொல்ல எனக்கு நேரம் இல்லை. இதற்காக வேதனைப் படுவதையும் விட்டு விட்டேன்.
சினிமா பற்றிய சிந்தனையே இப்போது எனக்குள் உள்ளது. திருமணம் பற்றி இன்னும் யோசிக்கவே இல்லை. தெலுங்கில் நான் நடித்த தீன்மார் படம் கோடையில் வருகிறது. மேலும் படவாய்ப்புகள் வருகின்றன. இவ்வாறு திரிஷா கூறினார்.
No comments:
Post a Comment