வரும் சட்டசபை தேர்தலில் திமுக தலைவர் கருணாநிதி போட்டியிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழக முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி கடந்த 11 தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளார். ஆனால் தற்போது 12-வது தடவையாக தேர்தல் களத்தில் இறங்கமாட்டார் என்ற கருத்து வலுத்து வருகிறது.
கடந்த 2001-ம் ஆண்டு தேர்தலின்போதே இது தான் எனது கடைசி தேரத்ல் என்றார். அவ்வாறு சொல்லக் கூடாது என்று கட்சியினர் கோரிக்கை வைத்தனர். அதை ஏற்று மீண்டும் 2006-ம் ஆண்டு தேர்தலில் நின்று வெற்றி வெற்று முதல்வரானார். உடல்நிலை முன்புபோல ஒத்துழைக்காததால் ஓய்வு பெறுவதில் நாட்டம் காட்டியுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு கூட நான் தமிழக முதல்வராக இருப்பதைக் காட்டிலும், கட்சித் தலைவராகவே இருக்க விரும்புகிறேன் என்று தெரிவித்தார். மேலும், மகன்கள் அழகிரி மற்றும் ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்க தயாராகிவிட்டதாலும், இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் என்று திமுகவில் குரல் எழும்பியுள்ளதாலும் முன்மாதிரியாக தான் இந்த தேர்தலில் நிற்காமல் இருக்க எண்ணிக் கொண்டிருக்கிறார்.
வரும் தேர்தலில் நின்று ஆட்சியைப் பிடிப்பாரா அல்லது இளைய தலைமுறையினருக்கு வழிவிட்டு ஓய்வு எடுப்பாரா என்பது கருணாநிதியின் முடிவில் தான் இருக்கிறது.

No comments:
Post a Comment