அதிமுக கூட்டணியில் நீடிப்பது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆலோசனை நடத்த உள்ளது.
அதிமுக கூட்டணியில் தேமுதிகவுடன் உடன்பாடு எட்டப்பட்ட பிறகு மதிமுக மற்றும் இடதுசாரி கட்சிகளை பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை.
சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளை ஒதுக்கிய நிலையில், தனியரசு தலைமையிலான கொங்கு இளைஞர் பேரவைக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆனால் கூட்டணியில் ஏற்கனவே பலமுறை நடத்திய பேச்சுவார்த்தையில் அதிருப்தி அடைந்த மதிமுக, அதிமுக கூட்டணியில் இருந்து விலகி மூன்றாவது அணி அமைக்கப்போவதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் தொகுதி பங்கீடு குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்படாததால், அதிமுக கூட்டணியில் நீடிப்பது குறித்து சனிக்கிழமை அன்று அவசர மாநில குழு கூட்டத்தை கூட்டியுள்ளது.
வெள்ளிக்கிழமை காலை அதிமுக அழைப்பு விடுத்திருந்தாக கூறும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இதுவரை நேரம் ஒதுக்கவில்லை என்று தெரிவித்துள்ளது. அதிமுகவின் இந்த நிலைபாடு மதிமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
அதிமுக. தனது கூட்டணி கட்சிகளுக்கு இதுவரை 52 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. தேமுதிக 41, மமக 3, சமக 2, புதிய தமிழகம் 2, மூவேந்தர் முன்னேற்றக் கழகம் 1, பார்வர்டு பிளாக் 1, இந்திய குடியரசுக் கட்சி 1, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவைக்கு 1 தொகுதியையும் ஒதுக்கியுள்ளது.
அதிமுக 144 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதிமுக கூட்டணியில் மதிமுக கம்யூனிஸ்ட் கட்சிகள் நீடிக்கும் பட்சத்தில், மீதமுள்ள 38 தொகுதிகளைத்தான் பிரித்துக்கொள்ள வேண்டும்.
இன்றைய பதிவுகள்....
- செருப்பால அடிச்ச மாதிரி இருந்துச்சு :டைரக்டர் பாலா...
- டெபாசிட் இழந்த விஜயகாந்த் கட்சிக்கு தனி சின்னம் வழ...
- சிபிஐ விசாரணையில் நடந்தது என்ன? : கனிமொழி விளக்கம்...
- சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி: பங்கேற்றார் ஐஸ்வர்யா ர...
- இனிமே வாழ்க்கை ஜெதான்... :சத்யராஜ்
- அதிமுக கூட்டணிக்காக வடிவேலு தமிழ்நாடு முழுவதும் பி...
- படமாகும் வாஸ்கோடகாமா வரலாறு!
- 19-ஆம் தியதி பேரழிவுகள் ஏற்படலாம்-நிபுணர்கள் எச்சர...
- அசினை விட நயன்தாரா பெட்டர்! - கரீனா 'சர்டிபிகேட்'
- கிறிஸ்தவர்கள் தவக்காலம்; “அசைவ உணவுக்கு தடா போட்ட ...
- சிம்பு எப்படி இப்படி எழுதலாம்...:சிம்புவுக்கு மகளி...
- விஜயுடன் இணைகிறார் ஆர்யா!!!
- ஜப்பானில் பயங்கர பூகம்பம்: அடுத்தடுத்து தாக்கிய சு...
- ஜப்பானை தாக்கிய சுனாமி பேரலையின் வீடியோ காட்சி
- கேட்கும் தொகுதிகளை பெற கனிமொழி, தயாளு அம்மாளிடம் ச...
- கோடி கடன்கள் துரத்தும் பாலா
- கருணாநிதியை எதிர்த்துப் போட்டியிடவும் தயார்: 'இப்ப...
- சிம்புவின் டபாங்கை இயக்குவது யார்...?
- பிரம்மாண்ட விழா - இணையும் மூவர்!
- சுதீப் உடனான காதல் பற்றி சோனியா அகர்வால்

No comments:
Post a Comment