அதிமுக கூட்டணியில் 18 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.
தேமுதிக, சமக ஆகிய கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்துள்ள அதிமுக, வைகோவின் மதிமுக மற்றும் இடதுசாரிகளுக்கு தொகுதியை பங்கிட்டுக் கொடுப்பதில் காலம் தாழ்த்தி வருகிறது. இதற்கு, அக்கட்சிகள் கோரும் இடங்களின் எண்ணிக்கையே காரணம் எனத் தெரிகிறது,
இந்நிலையில், தமது கட்சி வரும் தேர்தலில் 18 தொகுதிகளில் போட்டியிட விரும்புவதாக பேட்டி ஒன்றில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான பேச்சுவார்த்தைகள் அதிமுக தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment