சிபிஐ அதிகாரிகளிடம் கலைஞர் தொலைக்காட்சியின் கணக்கு விபரங்கள் தொடர்பாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்ட தகவல்களை உறுதிப்படுத்தியதாக, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பு அளித்ததாகவும் கூறினார்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிபிஐ அதிகாரிகள் சென்னையில் 11.03.2011 அன்று தயாளுஅம்மாள், கனிமொழி ஆகியோரிடம் விசாரணை நடத்தினார்கள்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் டிவி அலுவலகத்தில் புது டெல்லியைச் சேர்ந்த சிபிஐ குழு இந்த விசாரணையை நடத்தியது.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சிபிஐ அதிகாரிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு அளித்தோம். கலைஞர் தொலைக்காட்சியின் கணக்கு விபரங்கள் தொடர்பாக அதன் நிர்வாக இயக்குநர் சரத்குமார் ஏற்கனவே அளித்த தகவல்களை நாங்கள் உறுதிப்படுத்தினோம்.
கலைஞர் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குநர் ஏற்கனவே அளித்துள்ள அறிக்கையில், என்ன நடந்தது என்பதை தெளிவாக தெரிவித்துள்ளார். அதை, நாங்கள் உறுதிப் படுத்தினோம். அதிகாரிகள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் விடையளித்தோம். மற்ற அரசியல்வாதிகளைப் போல் நடந்து கொள்ளாமல், அவர்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை அளித்தோம்.
விசாரணையின் போது எந்தவித நிர்பந்தமும் எங்களுக்கு அளிக்கப்படவில்லை. இந்த வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றம் கண்காணித்து வருகிறது என்றார்.
இன்றைய பதிவுகள்...
- சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி: பங்கேற்றார் ஐஸ்வர்யா ர...
- இனிமே வாழ்க்கை ஜெதான்... :சத்யராஜ்
- அதிமுக கூட்டணிக்காக வடிவேலு தமிழ்நாடு முழுவதும் பி...
- படமாகும் வாஸ்கோடகாமா வரலாறு!
- 19-ஆம் தியதி பேரழிவுகள் ஏற்படலாம்-நிபுணர்கள் எச்சர...
- அசினை விட நயன்தாரா பெட்டர்! - கரீனா 'சர்டிபிகேட்'
- கிறிஸ்தவர்கள் தவக்காலம்; “அசைவ உணவுக்கு தடா போட்ட ...
- சிம்பு எப்படி இப்படி எழுதலாம்...:சிம்புவுக்கு மகளி...
- விஜயுடன் இணைகிறார் ஆர்யா!!!
- ஜப்பானில் பயங்கர பூகம்பம்: அடுத்தடுத்து தாக்கிய சு...
- ஜப்பானை தாக்கிய சுனாமி பேரலையின் வீடியோ காட்சி
- கேட்கும் தொகுதிகளை பெற கனிமொழி, தயாளு அம்மாளிடம் ச...
- கோடி கடன்கள் துரத்தும் பாலா
- கருணாநிதியை எதிர்த்துப் போட்டியிடவும் தயார்: 'இப்ப...
- சிம்புவின் டபாங்கை இயக்குவது யார்...?
- பிரம்மாண்ட விழா - இணையும் மூவர்!
- சுதீப் உடனான காதல் பற்றி சோனியா அகர்வால்

IT IS SOMETHING LIKE "ARGUING IN A COURT, WHERE ALREADY JUDGEMENT HAS BEEN WRITTEN IN FAVOUR OF THE OTHER PARTY""!!!! ALL ARE DRAMA, "PUCCAA DRAMA""!!!
ReplyDelete