சென்னையில் இன்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கரமேனன் சந்தித்து பேசினார். மேலும் இவ் சந்திப்பின் போது இலங்கை தமிழர்களின் மறுவாழ்வு குறித்து விவாதித்தாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆனால் உண்மையில் என்ன நடந்து இருக்கும், எதற்காக இந்த சிவசங்கரமேனன் வந்திருப்பார்.
இந்த சிவசங்கரமேனன் தான் சோனியாவின் 'முந்தானை'. இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட இனப்படுகொலையை இந்தியா வழிநடத்தியதற்கு இந்த சிவசங்கர மேனனின் பங்கு தான் அதிகம் என்பது உலகறிந்த உண்மை. போரை பலவேளைகளில் திசைத்திருப்பி பல தமிழனின் உயிர்களை காவு வாங்கிய பெருமையில் இவரது பங்கு அதிகம்.
அப்படிப்பட்ட சிவசங்கரமேனன் இன்று சென்னை வந்து முதல்வரை சந்தித்திருப்பது எதற்காக. தமிழர்களின் மறுவாழ்வு குறித்து பேசுவதற்காக வந்ததாக கூறுவது எல்லாம் சும்மா மாக்களாகிய நம்மை ஏமாற்றுவதற்கு தான்.
இதுவரை இலங்கை தமிழர் பிரச்சனையில் ஜெயலலிதா எப்படி நடந்து இருக்கிறார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். இப்போது புதிய பிறவி எடுத்தது போல ஆட்சிக்கு வந்ததும் இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுக்க துவங்கி இருக்கிறார். மத்திய அரசிடம் இருந்து தனக்கு தேவையானவற்றை பெறவும், மத்திய அரசை தன் வழிக்கு கொண்டு வரவும், மத்தியில் ஆளும் காங்கிரஸ் உடன் வரும் காலங்களில் கூட்டணி வைப்பதற்காக அதை தன் பக்கமாக இழுக்கவும் ஜெயலலிதா கையில் எடுத்திருக்கும் ஆயுதம் தான் இந்த இலங்கை பிரச்சனையாக இல்லாமல், இது உண்மையில் இதயபூர்வமாக எடுக்கப்படும் முடிவாக இருந்தால், உலகின் அனைத்து தமிழனும் ஜெயலலிதாவை வணங்குவான்.
இப்போது வந்திருக்கும் இந்த சிவசங்கரமேனன் தனது தந்திரமான பேச்சாலும் சூழ்ச்சியாலும் ஜெயலலிதாவை தன் பக்கமாக இழுக்கும் வேலையை செய்வார். இந்த தந்திர வலையில் ஜெயலலிதாவை விழ வைக்கும் பட்சத்தில் தமிழகத்தில் ராஜபக்சேக்கு எதிராக தற்போது ஏற்ப்பட்டிருக்கும் கொந்தளிப்பான நிலையை அடக்கி விடலாம். இதன் மூலம் உலகின் ஒரே அசைக்க முடியாத வல்லரசாம் இலங்கையின் அதிபர் ராஜபக்சேவை சந்தோஷ மழையில் நனையவைக்க முடியும் என்பது தான் இந்த நயவஞ்சககாரனின் திட்டம்.
இந்நிலையில் நாளை இலங்கை பயணம் செல்ல உள்ள நிருபாமா ராவ் குழுவுடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கரமேனனும் செல்ல உள்ளார். அப்போது இவர் இன்று ஜெயலலிதா எடுக்கும் முடிவை (மனமாற்றத்தை) ராஜபக்சேவிடம் தெரிவித்து ராஜபக்சேவால் கொடுக்கப்படும் 'அந்தப்புற' உபசரிப்பில் களிப்புறலாம் என்ற நினைப்பில் தான் இந்த நல்லவர் இன்று ஜெயலலிதாவை சந்தித்து இருப்பார். பொறுத்திருந்து பார்ப்போம் ஜெயலலிதா உருவில் தமிழனுக்கு தொலைவில் தெரிந்த வெளிச்சம் உண்மையானதா அல்லது மின்னல் கீற்றா என்று ....

உடனுக்குடன் செய்திகள் வெளியிடுகிறீர்களே... எப்படி முடிகிறது...???
ReplyDelete