சென்னை அண்ணா அறிவாலயத்தில் 10.06.2011 அன்று நடைபெற்ற தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் முடிந்ததும், தி.மு.க. தலைவர் கலைஞர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு தி.மு.க. தலைவர் கலைஞர் அளித்த பதில்களும் வருமாறு:
கேள்வி: சட்டமன்றத்தில் தேமுதிக எதிர்க்கட்சியாக இருந்தாலும், மக்கள் மன்றத்திலே உங்கள் கட்சிதான் எதிர்க்கட்சி.
பதில்: உண்மையைச் சொன்னதற்கு நன்றி.
கேள்வி: ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் கடந்த காலத்தில் நீங்கள் சரியாகச் செயல்படவில்லை என்று விஜயகாந்த் சொல்லியிருக்கிறாரே?
பதில்: நான் அவருக்கெல்லாம் பதில் சொல்ல மாட்டேன்.
கேள்வி: உங்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் எப்படி செயல்படப் போகிறார்கள்?
பதில்: பொறுத்திருந்து பாருங்கள்.

உங்கள் பதிவு நன்றாக இருந்தது செய்திகளை கீழே பதியவும்.
ReplyDeleteShare