இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில்,இலங்கையுடனான இந்தியாவின் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள மத்திய அரசை திமுக வலியுறுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.
அவர் மேலும், ‘’ இலங்கை அதிபர் ராஜபட்சவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும், கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இரண்டு தீர்மானங்களையும் வரவேற்கிறோம். இலங்கை அரசு மீது பொருளாதாரத் தடை என்பது ஓர் அடையாள நடவடிக்கைதான்.
ராஜபட்ச அரசின் போர்க்குற்றங்களை விசாரிக்கவும் இலங்கையுடனான இந்தியாவின் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவும், மத்திய காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கும் திமுக வலியுறுத்த வேண்டும்.
அது ஏற்கபடாவிட்டால் மத்திய ஆட்சியிலிருந்து திமுக விலக வேண்டும்.
தினகரன் பத்திரிகை அலுவலகம் தாக்கப்பட்ட வழக்கை மீண்டும் விசாரிக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட வழக்கை விரைந்து நடத்தவும், அதற்கு உத்தரவிட்ட அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கையும் எடுக்க வேண்டும்’’ என்று கூறினார்.

No comments:
Post a Comment