கறுப்பு பணம் உருவாவதை தடுப்பது, அதை வெளிநாடுகளுக்கு கடத்துவதை தடுப்பது, கறுப்பு பணத்தை மீட்டு கொண்டு வருவது ஆகியவை பற்றியும், இதுதொடர்பான சட்டங்களை வலுப்படுத்துவது பற்றியும் ஆலோசனை கூறுவதற்காக மத்திய நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி ஓர் உயர்மட்ட குழுவை அமைத்தார்.
இக்குழு, மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர் பிரகாஷ் சந்திரா தலைமையில் அமைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த உயர்மட்ட குழுவின் முதலாவது கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது.
அதில், கறுப்பு பணத்தை மீட்டு கொண்டு வருவதற்கு எந்த சட்டத்தை வலுப்படுத்தலாம் என்பது பற்றி விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.
கறுப்பு பணத்தை கண்டறிவதற்கான வழிமுறைகள் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கலாம் என்று இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

No comments:
Post a Comment