நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி காவல்துறையில் புகார் கூறியுள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் சீமான் மீது பெண்கள் வன்கொடுமை, நம்பிக்கை மோசடி, கற்பழிப்பு, திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியது என 6 பிரிவுகளின் கீழ் வலசரவாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சிமான் மீது நடிகை விஜயலட்சுமி புகார் கொடுத்துள்ளதையடுத்து, பேராவூரணி காங்கிரஸ் கட்சியினர் அப்பகுதி முழுவதும் பரபரப்பான போஸ்டர் ஒன்றை ஒட்டியிருந்தனர்.
அந்த போஸ்டரில், தமிழ்பெண்களின் கற்போடு விளையாடும் சீட்டிங் சீமானை கைது செய் என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது. மேலும் கே.மகேந்திரன், செல்வம் என்ற பெயரும், தொடர்புக்கு செல்வம் என்பவரின் செல்போன் எண்களும் போடப்பட்டிருந்தது.
இந்நிலையில் போஸ்டர் அடித்த செல்வம் என்பவர் சேதுபாவா சந்திரம் காவல்நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அதில், சீமான் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சுவரொட்டிகள் ஒட்டியுள்ளோம். அதில் எங்களுடைய பெயர் மற்றும் செல்போன் நம்பர் குறிப்பிட்டிருந்தோம். சுவரொட்டி ஒட்டிய நாளில் இருந்து, எனது செல்போனுக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து 51 செல்போன் எண்களில் இருந்து தொடர்பு கொண்டு மிரட்டுகிறார்கள்.
இதனால் எனக்கு அச்சமாக உள்ளது. இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர் மகேந்திரனை ராகுல் காந்தி பார்த்துக்கொள்ளட்டும். உங்கள் உயிருக்கு ஆபத்து உள்ளது. குண்டு வைத்து தகர்ப்போம் என மிரட்டுகின்றனர் என்று புகார் மனுவில் குறிப்ட்டுள்ளார்.

No comments:
Post a Comment