காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தை அடுத்த குன்னம் பகுதியில் ஜேப்பியார் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி என்ற என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரி வளாகத்தில் கூடைப்பந்து விளையாட்டுக்காக உள் விளையாட்டு அரங்கம் கட்டும் பணி நடந்து வந்தது.
இந்த கட்டுமான பணியில் வடமாநிலத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். கடந்த 6ம்தேதி கட்டிட பணி நடந்து கொண்டிருந்த போது மதியம் 3.30 மணியளவில் புதிதாக கட்டப்பட்ட உள் விளையாட்டு அரங்க கட்டிடத்தின் ஒரு பகுதி சரிந்து விழுந்தது.
இந்த விபத்தில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த 10 தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி பலியாயினர். பலர் காயமடைந்ததனர். விபத்து ஏற்பட்ட கட்டிடத்தை கட்டும் காண்டிராக்டர் ரவிக்குமாரை போலீசார் ஏற்கனவே கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த கல்லூரியில் முதல்வர் அவர் உடல் நல குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.. இந்நிலையில் இவ்விபத்திற்கு காரணமான கல்லூரியின் தலைவர் ஜேப்பியாரை போலீசார் கைது செய்தனர்.
போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள அவர் தொடர்ந்து அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற நீதிபதி மாலிக் அனுமதி வழங்கியுள்ளார். இவ்வழக்கில் கல்லூரி நிர்வாகி உட்பட நான்கு பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்

No comments:
Post a Comment