அத்வானி மூத்த தலைவர். அவர் பேசியதற்கெல்லாம் நான் கருத்துக் கூற மாட்டேன் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் அத்வானியின் பேச்சால் பெரும் சர்ச்சை கிளம்பி விட்டது. வழக்கமாக அமைதியாக இருக்கும் சோனியா காந்தியே இன்று புயல் போல சீறிப் பாய்ந்து விட்டார்.
காங்கிரஸ் கூட்டணி அரசை கள்ளத்தனமான அரசு என்று அதவானி கூறியதுதான் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இதுகுறித்து ராகுல் காந்தியிடம் கருத்துக் கேட்கப்பட்டது. ஆனால் அவர் கருத்துக் கூற மறுத்து விட்டார். ஆனால் அத்வானியை மறைமுகமாக அவர் வாரி விட்டார்.
அவர் கூறுகையில், அத்வானி மூத்த தலைவர். தான் என்ன சொன்னோம் என்பது அவருக்குத் தெரியும். நான் கருத்துச் சொல்ல மாட்டேன் என்று கூறி விட்டார் ராகுல். இதிலிருந்தே ஒரு பெரிய மனிதர், பெரிய தலைவர் பேசும் பேச்சா இது என்று மறைமுகமாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

No comments:
Post a Comment