புதுக்கோட்டையில் தே.மு.தி.க. சார்பில் இப்தார் நோன்பு திறப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. ஏழைகளுக்கு நலத் திட்ட உதவி வழங்கி தே.மு.தி.க. தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்த் பேசியதாவது:-
இப்தார் விருந்து மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குவதை புதுக்கோட்டையில் நடத்துவதற்கு இங்கு இந்து, முஸ்லிம்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வருவதை கண்டு தான் தேர்வு செய்தேன். நலத்திட்ட உதவிகளை வழங்கும்போது எங்களுக்கு அ.தி.மு.க. இடையூறாக இருந்து வருகிறது. மக்களுக்கு தர்மம் செய்வதை ஏன் தடுக்கிறீர்கள்.
மக்கள்தான் தெய்வம், அவர்களுக்கு செய்யும் உதவிகளை தடுத்து நிறுத்தினால் பாவத்தை சந்திக்க வேண்டியது இருக்கும். வெள்ளையனே வெளியேறு என்று போராடிய காலம் போய் கொள்ளையனை விரட்டும் காலம் வந்துவிட்டது. ஊழலுக்கு எதிராக தே.மு.தி.க. குரல் கொடுத்தபோது அதனை கிண்டல் செய்தனர். ஆனால் ஊழலுக்கு எதிராக ஆளுக்கு ஆள் குரல் கொடுத்து கொடி பிடித்து வருகின்றனர்.
எம்.ஜி.ஆருக்கு பின்னர் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் மாறி, மாறி ஆட்சியை பிடித்தாலும் மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. இதுவரை மின்தடைக்கு காரணமே அ.தி.மு.க., தி.மு.க. தான். குவாரிகள் மட்டுமல்லாமல் மணல் கொள்ளையால் ஆறுகள் குளம் போல் காட்சி அளித்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு பின்னர் நிரந்தரமான வளர்ச்சி திட்டங்கள் எதையும் மக்களுக்கு யாரும் வழங்கவில்லை.
புதுக்கோட்டை இடைத் தேர்தலுக்காக மின்தடை இல்லாமல் இருந்தது. தற்போது நிலைமை என்ன? நகராட்சி நூற்றாண்டு விழா நிதி உள்பட பல்வேறு நிதிகளில் கமிஷன் ஏலம் தான் நடக்கிறது. புதிய கோட்டையாக உருவாக்குவேன் என்றவர்கள் என்ன ஆனார்கள்.
மத்தியில் எதிர்க்கட்சி பணியை அ.தி.மு.க. செய்கிறது என்று சொல்லும் ஜெயலலிதா தே.மு.தி.க.வினர் செய்யும் பணியை கண்டு ஏன் கோபப்பட வேண்டும். நல்லது யார் செய்தாலும் நான் வரவேற்க தயார். மக்களுக்கு நல்லது செய்ய தைரியம் வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை உயர்வு குறித்து அறிவிப்பு வருகிறது. எதுவும் நிறைவேறவில்லை.ஏறத்தாழ 65 லட்சம் மாற்று திறனாளிகள் நலத்திட்ட உதவிகள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.
தங்க நாற்கர சாலைகளை உருவாக்க வாஜ்பாயால் முடிந்தது. ஆனால் நதிகளை இணைக்க முடியாதா? மன் மோகன்சிங் செல்போன் கொடுக்கிறதுக்கு பதிலாக வேலைவாய்ப்பை வழங்கலாம். தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சிகளில் போது தமிழகத்தில் லஞ்சம் புரையோடிபோய் விட்டது. மடியில் கனம் இல்லை, அதனால் எனக்கு பயம் இல்லை. வழக்கு போடறதுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன். கைது செய்து பாருங்கள், ஜெயில் பற்றி நான் கவலைபடமாட்டேன்.
நூறாண்டு சாதனையை ஓராண்டில் செய்ததாக கூறுகின்றனர். அவர்கள் செய்த சாதனைகள்தான் என்ன?
இவ்வாறு அவர் பேசினார்.

No comments:
Post a Comment