டெசோ மாநாடு திட்டமிட்டபடி நடக்கும் என்று திமுக தெரிவித்துள்ளது.
நாளை மறுதினம் சென்னையில் திமுக நடத்தத் திட்டமிட்டுள்ள டெசோ மாநாட்டில் ஈழம் என்ற வார்த்தையை பயன்படுத்த மத்திய அரசு தடை விதித்துள்ளது.
அதே போல சென்னையில் டெசோ மாநாட்டை நடத்த அனுமதிக்க முடியாது என்று உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளளது. இதனால் டெசோ மாநாட்டுக்கு பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளன.
இந் நிலையில் மாநாட்டை நடத்துவதில் திமுக தலைவர் கருணாநிதி உறுதியாக உள்ளார் என்று டெசோ மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment