ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் அன்னா ஹசாரே, அரசியல் இயக்கத்தை உருவாக்கப் போவதாக அறிவித்தார். அத்துடன் தனது குழுவையும் கலைத்தார். இதனால் அவரது இயக்கத்தைச் சேர்ந்த பலர் அதிருப்தியடைந்துள்ளனர்.
இந்நிலையில் கெஜ்ரிவால் தங்களுக்கு கொடுத்த வாக்குறுதியை மீறி அரசியல் இயக்கத்தை உருவாக்கும் முயற்சியில் தங்களை வழிநடத்துவதாக அவரது ஆதரவாளர் ஒருவர் வழக்கு பதிவு செய்துள்ளார்.
மீரட் கல்லூரியில் பணியாற்றி வரும் ஆசிரியரான ஹரிஷ்வர் என்பவர் நேற்று கூடுதல் தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், அரசியல் சார்பற்ற இயக்கம் என்று கெஜ்ரிவால் கூறியதால் ஹசாரே இயக்கத்தில் இணைந்தேன். ஆனால் அந்த இயக்கம் அரசியலில் ஈடுபடுவதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருப்பது என்னை மிகவும் காயப்படுத்தியது. எனவே இது மோசடி என்பது தெளிவாகிறது, என்று கூறியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை 14ம் தேதி தொடங்குகிறது.

No comments:
Post a Comment