விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Tuesday, November 25, 2014

    வருண் ஆரோன் வேகத்தில் அசந்து போன ஆஸ்திரேலியர்கள்

    கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் அதிவேக பந்துகளை வீசிய வருண் ஆரோனைக் கண்டு ஆஸ்திரேலியர்கள் அசந்து போயுள்ளனர்.

    இன்று அவர் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். வழக்கமாக போதுமான வேகத்துடன் ஸ்விங் பந்துகளை வீசும் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களைப் பார்த்து பழகிய ஆஸ்திரேலியர்கள் இன்று வருண் ஆரோன் வீசிய வேகத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாக சிட்னி மார்னிங் ஹெரால்ட் என்ற ஆஸி. ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

    இது குறித்து ஐபிஎல் கிரிக்கெட்டில் நீண்ட நாளைய பயிற்சி தொடர்புடைய பயிற்சியாளர் டிரென்ட் உட்ஹில், வருண் ஆரோன் பற்றிய தனது கருத்தை பதிவு செய்துள்ளார். 2011ஆம் ஆண்டு டெல்லி டேர் டெவில்ஸ் அணியின் பயிற்சி முகாமில் வருண் ஆரோனை தான் முதன் முதலில் பார்த்த போது ஏற்பட்ட உணர்வை அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்:

    ”விமானத்தில் வந்த என் களைப்பா, தூக்கக் கலக்கமா என்று புரியவில்லை, வருண் ஆரோன் உண்மையில் அதிவேகமாக வீசினார். இந்தியாவில் பந்துகள் விக்கெட் கீப்பரிடம் செல்லும் முன் செத்து விடும், ஆனால் இவரது பந்துகள் மேலும், மேலும் எகிறியபடி சென்றன” என்றார்.

    இன்றைய பயிற்சி ஆட்டத்தில் வருண் ஆரோன் பந்து வீச்சைப் பார்த்த பிறகு அவர் கூறும் போது, “பிரிஸ்பன் பிட்சில் வருண் ஆரோன் வீசுவதை பார்க்க ஆவலாக இருக்கிறேன். அந்த வேகத்தில் அவர் பந்தின் தையல் பகுதி தரையில் படுமாறு வீசுவது அரிதானது. தையல் தரையில் படாமல் வேகமாக வீசுவது என்பதல்ல இவரது வேகப்பந்து வீச்சு முறை. டெஸ்ட் போட்டிகளில் வருண் ஆரோன் மணிக்கு 140 கிமீ மற்றும் அதற்கும் அதிகமான வேகத்தில் வீசாவிட்டால் நான் பெருத்த ஏமாற்றமடைவேன். மிட்செல் ஜான்சன் வேகத்திற்கு வருண் ஆரோன் ஈடுகொடுப்பார் என்றே கருதுகிறேன்.

    விராட் கோலி தலைமையிலான இளம் இந்திய அணியிடத்தில் தங்கள் திறமைகள் மேல் நல்ல நம்பிக்கை உள்ளது. இப்போது, எதிரணியினரின் மரியாதையைப் பெறுவது மட்டும் இந்திய அணியின் நோக்கமாக இருக்காது, அவர்கள் எதிரணியினரை ஆதிக்கம் செலுத்த சித்தமாயிருப்பதாகவே நான் நினைக்கிறேன்” என்றார் அவர்.

    இன்று அதிகபட்சமாக 58 ரன்களை எடுத்த ரியான் கார்ட்டர்ஸ், வருண் ஆரோன் பற்றி கூறும்போது, “வருண் ஆரோன் நிச்சயம் வேகமாக, ஆக்ரோஷமாக வீசுவார் என்பதை நான் அறிவேன், சில ஆண்டுகளுக்கு முன்பு அவரது பந்து வீச்சை எதிர்கொண்டேன், அவரது வேகத்தில் மாற்றமில்லை. அவர் சில அதிவேக பவுன்சர்களை இன்று வீசினார். இது எங்கள் நடுக்கள பேட்ஸ்மென்களுக்கு சில சேதங்களை விளைவித்தது. ஆனாலும், சில வேளைகளில் அவரை சரியாகவே விளையாடினோம் என்றே நினைக்கிறேன்” என்றார்.

    அஸ்வினை ஸ்லிப் பீல்டராகக் கருத முடியுமா?

    இந்தியா, இந்த ஆஸ்திரேலியத் தொடரில் ஏதாவது தாக்கத்தை ஏற்படுத்த வேண்டுமென்றால், அது ஸ்லிப் கேட்சிங் மூலமாகவே முடியும். இங்கிலாந்தில் ஏகப்பட்ட கேட்ச்கள் கோட்டை விடப்பட்டன. ஜடேஜா விட்ட கேட்சினால் ராஜஸ்தான் பவுலர் பங்கஜ் சிங்கின் கிரிக்கெட் வாழ்வே கேள்விக்குறியானது நினைவிருக்கலாம். விராட் கோலி உட்பட ஸ்லிப்பில் கேட்ச்களை கோட்டை விட்டனர். அஸ்வின் ஒரு போதும் இதற்கு மாற்று கிடையாது. வேகப்பந்துகளுக்கான அவரது நகர்வு, ரிஃப்ளெக்ஸ் டெஸ்ட் தரத்திற்கு உயர்ந்ததாக இல்லை என்பது தெளிவு.

    இன்று, முதல் ஸ்பெல்லில் கேப்டன் ஆஷ்டன் டர்னர் மற்றும் நிக் ஸ்டீவன்ஸ் ஆகியோர் விக்கெட்டுகளை 3 பந்துகள் இடைவெளியில் கைப்பற்றினார் ஆரோன்.

    ஆனால் 2-வது ஸ்பெல்லில் கெல்வின் ஸ்மித் (40) என்ற கிரிக்கெட் ஆஸ்திரேலிய லெவன் அணியின் சிறந்த பேட்ஸ்மெனுக்கு தனது வேகத்தினால் எட்ஜ் எடுக்க வைத்தார் வருண் ஆரோன். முதல் ஸ்லிப்பில் அது ஒரு சாதாரணமாக பிடிக்கப்பட வேண்டிய கேட்சாகவே இருந்தது ஆனால் அதனைக் கோட்டை விட்டார் ரவிச்சந்திரன் அஸ்வின். பசுந்தரை ஆட்டக்களத்தில் வருண் ஆரோனின் எகிறும் பந்துகளுக்கு முதல் ஸ்லிப்பில் கேட்ச் பிடிக்கக் கூடிய திறமை மிக்கவர்தானா அஸ்வின் என்ற சிந்தனை ஒரு கேப்டனுக்கு இருப்பது அவசியம்.

    நாளை டேவிட் வார்னர், வாட்சன், கிளார்க் போன்ற வீரர்களுக்கு மட்டுமல்ல ஆஸ்திரேலியாவின் பலம் வாய்ந்த டெய்ல் எண்டர்களுக்குக் கூட கேட்ச் விடுவது பந்து வீச்சாளர்களை தண்டிக்கும் செயல் ஆகும்.

    எனவே, ஸ்லிப் பீல்டிங்கை துல்லியமாக்குவதோடு, முதலில் ஆஸ்திரேலிய பிட்ச்களில் ஸ்லிப்பில் எந்த தூரத்தில் எந்த கோணத்தில், நின்றால் சவுகரியமாக இருக்கும் என்பதை அறுதியிடுவது அவசியம், இதற்கு ரவிசாஸ்திரி உள்ளிட்டவர்கள் உதவி புரிய வேண்டும். முதலில் ஸ்லிப்பில் யார் யாரை நிறுத்துவது என்பதை முடிவு செய்தாக வேண்டும். எந்த ஒரு திட்டமிடுதலும் இல்லாமல் இவர் சரியில்லையா, அடுத்தவர் அவரும் சரியில்லையா அடுத்தவர் என்ற சிந்தனைப் போக்கு மாறுவது அவசியம். இப்படி தோனி இங்கிலாந்தில் செய்ததால்தான் கேட்ச்கள் கோட்டை விடப்பட்டன.

    2004-ஆம் ஆண்டு இந்திய அணி கங்குலி தலைமையில் ஆஸ்திரேலியா சென்ற போது திராவிட், லஷ்மண் என்று அபார ஸ்லிப் பீல்டர்கள் இருந்தனர். இயன் சாப்பல், குறிப்பாக பலமான ஆஸ்திரேலிய பேட்டிங்கை பிரிஸ்பன் மைதானத்தில் 323 ரன்களுக்கு இந்தியா மட்டுப்படுத்திய போது, லஷ்மண் உள்ளிட்ட ஸ்லிப் பீல்டர்களின் பங்களிப்பை பெரிதும் பாராட்டினார்.

    இந்தத் தொடரிலும் ஸ்லிப் கேட்சிங் என்பது மிகமிக முக்கியம். இதனை விடுத்து அஸ்வினைக் கொண்டு போய் ஸ்லிப்பில் நிறுத்துவது ஒரு போதும் சரியான தீர்வை அளிக்காது.


    அவரவர்கள் தங்கள் சொந்த பார்மை நினைத்து கவலைப்படுவது இப்போதெல்லாம் இந்திய அணி வீரர்களிடத்தில் அதிகம் காணப்படுகிறது. இதனால் ஸ்லிப்பில் நின்று கொண்டு அந்தப் பந்தை நானாக இருந்தால் இப்படி ஆடியிருப்பேன் அல்லது இப்படி ஆடவேண்டும் என்று யோசனை செய்து கொண்டு கவனத்தை இழக்கின்றனர். பந்துவீச்சாளர்களோ ஒரு பேட்ஸ்மெனுக்கு சில உத்திகளை வகுத்து அதற்கேற்ப களவியூகத்தையும், பந்தை எங்கு பிட்ச் செய்வது என்பதையும் முன்கூட்டியே திட்டமிடுகின்றனர். இவர்களை ஊக்குவித்து வெற்றியைச் சாதிக்கும் கூட்டு மனோபாவமே இந்திய அணிக்கு தேவை. இதுவே ஸ்லிப் பீல்டிங்கிலும் கேட்ச்சிங்கிலும் வெளிப்படும்.


    Posted by விழியே பேசு... at 5:27 PM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: விளையாட்டு செய்திகள்

    No comments:

    Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ▼  2014 (1155)
    • ►  December (465)
    • ▼  November (469)
      • முத்தபோட்டிக்கு நடிகை குஷ்பு ஆதரவுக்கு
      • வைகோவை மிரட்டிய ஹெச்.ராஜாவுக்கு அரசியல் தலைவர்கள் ...
      • வைகோவுக்கு பகிரங்க கொலைமிரட்டல் விடுத்த பாஜக
      • லிங்கா.. இன்னுமொரு புதிய சாதனை!
      • லதா ரஜினிகாந்த் ரூ.10 கோடி மோசடி: போலீசில் புகார்
      • லிங்கா படத்துக்கு சிம்பொனி இசை தந்த ஏ ஆர் ரஹ்மான்!
      • தமிழக மக்களுக்கு விஜய் வேண்டுகோள்
      • நடிகையை ஏமாற்றி கற்பழித்த டிவி நடிகர்
      • கிரிக்கெட்டில் நிகழ்ந்த சோக சம்பவங்கள்
      • மீண்டும் ஏமாற்றிய சிம்பு
      • இந்தியா முழுவதும் பள்ளிகளில் திருவள்ளுவர், பாரதியா...
      • பாகிஸ்தான் நடிகருடன் லிங்கா நாயகி
      • சொதப்பும் சிம்பு; புலம்பும் படக்குழு
      • பிலிப் ஹியூஸ் கிரிக்கெட் பயணம்: ஒரு விரிவான பார்வை
      • யாரைக் கேட்டு ரூம் போட்டீர்கள்? - லிங்கா சிறப்புத்...
      • விஜய்க்கு அட்வைஸ் சொன்ன அஜீத்!
      • முதல் மரியாதையை அமெரிக்க பின்னணியில் எடுக்கும் பார...
      • கருணாநிதியின் குடும்ப வாரிசு ஏறிய திருட்டு ரயில்!
      • அண்ணா என அழைத்து ஹீரோவை கப்சிப் ஆக்கிய அனுஷ்கா
      • கமலுடன் சேர்ந்து ஸ்ருதி டான்ஸ்
      • அதிவேக இரட்டை சதம் அடித்து நியூசிலாந்து வீரர் மெக்...
      • 29 பந்தில் 100 ரன்கள் * மும்பை வீரர் சாதனை
      • விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தீவிரவாத இயக்கமே- செ...
      • விசிடி ரெய்டில் விளம்பரம்!
      • ஹியுஸ் மரணம் எப்படி * என்ன சொல்கிறார் டாக்டர்
      • சினிமாகாரங்க வேறு மாதிரி பார்க்கிறாங்க : கண் கலங்க...
      • குஷ்பு காங்கிரசில் இணைந்ததின் பின்னணி
      • சாமியார் ராம்பாலை கைது செய்ய ஆன செலவு ரூ.26 கோடியாம்!
      • தனுஷை கவர்ந்த விஜய் சேதுபதி!
      • ஆரஞ்சு மிட்டாய் ட்ரெய்லரின் அபார சாதனை
      • பிரதமர் பதவியை களங்கப்படுத்தி விட்டார் மோடி: வைகோ
      • உயிருக்கு போராடுகிறேனா...? பிரபல நடிகை விளாசல்
      • எதிரெதிர் துருவங்களாக இருந்த முலாயம் சிங் யாதவும்,...
      • ஏ.ஆர்.ரகுமான், கமல்ஹாசன் அரசியலுக்கு வரவேண்டும்: ர...
      • ஹியுஸ் மரணத்துக்கு ‘ஆம்புலன்ஸ்’ தாமதம் காரணமா
      • சோனியா, குஷ்பு ஒரே கொள்கையுடையவர்கள் : எச். ராஜா
      • பவர் ஸ்டாரை கடிந்து கொண்ட கிரண் பேடி
      • சிறுமியரை நிர்வாணப்படுத்தி கொடுமை: இருவர் கைது
      • ஜெ.வுக்கு நிம்மதி: வருமான வரி வழக்கில் சமரச முடிவு
      • தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைத் தொடங்கினார் ஜி.கே....
      • பெண்கள் விலங்குகளைப் போல நடத்தப்படுகிறார்கள்: சானி...
      • எனது 'திகார்' அனுபவம்: 'பவர் ஸ்டார்' சீனிவாசன் ருச...
      • நடிப்பில் கமலோடு போட்டி போட தயாராகும் விஜய்! வெல்வ...
      • பார்த்திபன் மீது கடுப்பு ....
      • வறுமையின் காரணமாக குஜராத் மாடல் அழகி பேஸ் புக் மூல...
      • மரணக் காட்சியில் பரிதாபம்: மேடையிலேயே சுருண்டு விழ...
      • தமன்னாவிடம் லவ் பெயிலியர் பற்றி கேள்வி கேட்க கூடாத...
      • உனக்கு தைரியம் இருந்தால் அமர ஏற்பாடு செய்து விட்டு...
      • 'அவனுக்காச்சும் கொஞ்சம் சுயபுத்தி வேணும்' : ரஜினி,...
      • நல்லகண்ணு, நெடுமாறனுக்கு இல்லாத தகுதியா ரஜினிக்கு ...
      • எம்.ஜி.ஆர் , ரஜினி , அஜித், சிம்பு ?
      • சிம்புதேவன் இயக்கும் இளைய தளபதி படத்தில் தளபதி விஜ...
      • இந்த வாரம் வெளியாகும் படங்கள் ஒரு சிறப்புப் பார்வை
      • லிங்கா அடுத்த சாதனை - யுஎஸ்ஸில்...
      • முதல் ஒருநாள் போட்டியில் சதம் அடித்த ஒரே ஆஸி. வீரர்
      • ஐ.பி.எல்.லிலிருந்து சென்னை அணியை நீக்கலாம்: உச்ச ந...
      • அட்லி இயக்கத்தில் விஜய் - சுவாரஸிய தகவல்கள்
      • ஜெயலலிதாவிற்கு தண்டனை வழங்கிய நீதிபதி மைக்கேல் டி ...
      • 26 ஆண்டு சிறை! கடும் அதிர்ச்சியில் நடிகை வீணா மாலி...
      • அதிமுக, திமுக, பாஜக தவிர்த்த தனி அணி! விஜயகாந்த், ...
      • ரஜினியின் 40 வருட திரைவாழ்க்கையில் இது முதல்முறை
      • விபச்சாரம்... டிவி நடிகை ஸ்வாதி கைது
      • பிரியங்கா சோப்ராவுக்கு சொந்தமான இடத்தில் விபச்சாரம...
      • என்னை அறிந்தால்... த்ரிஷாவுக்கு முக்கியத்துவமா...!!
      • மோடியின் வாரணாசித் தொகுதியில் 6 லட்சத்திற்கும் மேல...
      • ஆமீர்கானை முந்திய ரஜினி!
      • கிரிக்கெட் பந்து தாக்கி காயமடைந்த ஆஸ்திரேலியா வீரர...
      • ''இப்படியுமா இருப்பாங்க மனுஷங்க...'' : விக்ரம்பற்ற...
      • சூர்யா படத்தில் இருந்து விலகினார்...?
      • மரியாதை நிமித்தமாக கருணாநிதியை சந்திக்க தயார்! காங...
      • திரிஷாவை கடுப்பேற்ற சமந்தாவுடன் டேட்டிங்
      • எப்போது எல்லாம் பான் கார்டு தேவை?
      • கபில்தேவை மிரள வைத்த மனோஜ்குமார்
      • அமெரிக்காவை விஞ்சியது இந்தியா!!
      • முத்த நடிகைக்கு இயக்குனர்கள் சப்போர்ட்
      • சல்மான் கான் தான் என் கணவர் ஆகணும்: சானியா மிர்சா
      • பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா? இல்லையா?
      • ஒரே படத்தில் பல கதைகள்
      • இன்று சோனியாவை டெல்லியில் சந்தித்து காங்கிரஸில் சே...
      • புது படங்களில் இருந்து ஜகா வாங்கும் திரிஷா
      • நித்தியானந்தா, உடலுறவு கொள்ள இயலாத ஆண் என்று கூற ம...
      • தைரியம் இருந்தால் கருணாநிதி சட்டசபைக்கு வரட்டும்: ...
      • சீமான் பாஸ்போர்ட்டில் கூடுதல் பக்கங்கள்: ஒரு வாரத்...
      • பிரதமர் மக்கள் நிதித்திட்டத்தில் யாருக்கு காப்பீடு...
      • ராஜபக்சவின் ராஜதந்திரம் வெல்லுமா?
      • லிங்கா இந்திய திரையுலகில் புதிய சாதனை!
      • ஜெயலலிதா இல்லை பயம் போச்சு! சட்டப்பேரவைக்கு வர கரு...
      • மோடிக்கு ஹிட்லர், முசோலினிக்கு ஏற்பட்ட நிலைதான் ஏற...
      • புதுப் பிரச்னையில் 'லிங்கா'!
      • அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எதிரொலி! மேயர் சைதை...
      • அன்று விஜய் இன்று விக்ரம்
      • இப்ப தேவடி...ள் இல்லாத தெரு கிடையாது ...:கமல் பரப்...
      • முதல் முறையாக கௌதம் மேனன்! இரண்டாவது முறையாக ஷங்கர்!!
      • அ.தி.மு.க. எம்.பி.க்கள் தத்தெடுத்த கிராமங்கள் எவை?...
      • சூர்யா படத்தில் மூன்று நாயகிகள்!
      • தீவிரவாதிகள் கூடாரமாகிறதா திருப்பூர்?
      • லிங்கா புத்தம் புது போட்டோக்கள் ( Lingaa Stills )
      • லிங்காவில் அனுஷ்காவா சோனாக்ஷியா
      • கிரிக்கெட் பந்து தலையில் தாக்கியதில் உயிருக்கு போர...
      • அனேகன் படத்தின் கதை!
      • முத்த போராட்டக்காரர்கள் மீது வன்முறை கூடாது: பெங்க...
      • காவியத் தலைவன் படத்துக்கு வரிவிலக்கு
      • வருண் ஆரோன் வேகத்தில் அசந்து போன ஆஸ்திரேலியர்கள்
      • விஜய் ரசிகர்களின் அஜித் பாசம்
      • எனக்கு தரப்படும் பாதுகாப்பே அச்சத்தை தருகிறது!: பி...
      • ஏலியன்களைத் தேடும் அதிசய விஞ்ஞானம்
      • ரிலீசுக்கு முன்பே ரூ 200 கோடியை குவித்து ரஜினியின்...
      • சூர்யாவை வைத்து வெங்கட் பிரபு போடும் புது கணக்கு
      • கடலுக்கு அடியில் அதிநவீன நகரத்தை ஜப்பான் நிறுவனம் ...
      • பிரபல நடிகர் திலீப் குமாரைக் 'கொன்ற' ட்விட்டரும் வ...
      • சூர்யா, விக்ரம் கே.குமார் படத்தின் பஸ்ட் லுக்
      • விக்ரம் உருவில் அஜித்துக்கு வந்த மிக பெரிய சோதனை !
      • பேசிய சம்பளத்தைக் கொடுக்க மாட்டேங்கறாங்களே...:ஸ்ரு...
      • எனது திட்டங்களை மோடி காப்பியடித்துவிட்டார் - முலாய...
      • வசீகரிக்கத்த காதல் கதை - பி.சி.ஸ்ரீராம்
      • குஷ்புவின் 'லட்சியத்துக்கு' கைகொடுக்கிறது பாஜக!
      • இயக்குனர் செல்வா கொலை வழக்கில் துணை நடிகை சங்கீதா ...
      • நடிகை ஜீவிதாவுக்கு 2 ஆண்டு சிறை, 25 லட்சம் அபராதம்
      • நான் கடந்து வந்த பாதை: 'பவர் ஸ்டார்' சீனிவாசன்
      • விஜய்யின் அடுத்த படத்துக்கு...!
      • பயிற்சி ஆட்டத்தில் இந்தியா அபாரம்
      • ஜட்டிக்குள் 'டிஷ்யூ' பேப்பரை திணித்து வைத்து உலகக்...
      • என்னங்கண்ணா, நீங்கள் கேட்டீர்கள், நான் எப்படி வராம...
      • மெஸ்ஸி புதிய சாதனை
      • சட்டப்பேரவையில் பன்னீர் செல்வம் எங்கே அமர்வார்?: க...
      • ரஜினியின் லிங்கா நவம்பர் 24-ம் தேதி...
      • 2 வருடமாக படம் வராதது ஏன்? சிம்பு விளக்கம்
      • முன்னாள் மத்திய அமைச்சர் முரளி தியோரா காலமானார்
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ►  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ►  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.