Sunday, August 12, 2012

உலக பாரம்பரிய சின்னமாகிறது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்


உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை, திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், பழவேற்காடு (புலிக்காடு), சிவகங்கை செட்டிநாடு போன்றவை இடம் பெறுகின்றன. இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வரலாற்று சிறப்பு, தொன்மை, பழமை, கலை, பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் நகரங்கள், இடங்கள், தலங்கள் போன்றவற்றை உலக பாராம்பரிய சின்னங்கள் வரிசையில் யுனெஸ்கோ நிறுவனம் சேர்த்துள்ளது. உலகமெங்கும் மொத்தம் 962 இடங்கள் பாரம்பரிய சின்னங்களாக அறிவிக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன. இந்தியாவில் வரலாற்று சிறப்பு, தொன்மை பழமை வாய்ந்த பல இடங்கள், கட்டிடங்கள் போன்றவை இருந்தாலும் பாரம்பரிய சின்னங்கள் மற்றும் பாரம்பரிய இடங்கள் பட்டியலில் குறைந்தளவு இடங்களே இடம் பெற்றுள்ளன. இந்நிலையில் பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை, திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு (புலிக்காடு) சிவகங்கையில் உள்ள செட்டிநாடு  போன்றவை இடம் பெறுகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன் சுற்றுலாத் துறை, பாரம்பரிய சின்னங்கள் பட்டியல் சேர்க்கை குழு சார்பில் சிறப்பு கருத்தரங்கு ஒன்று சென்னையில் நடந்தது. இந்த கருத்தரங்கில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.


இதில் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையை பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் சேர்ப்பது குறித்த பரிந்துரை கட்டுரையை பேராசிரியர் ஸ்ரீராம் சமர்ப்பித்தார். அதே போல பெர்ணார்டு டிராகன் என்பவர் செட்டிநாடு  குறித்தும், ரூப்மதி ஆனந்த் என்பவர் ஸ்ரீரங்கம் கோயில் குறித்தும், சேவியர் பெணடிக்ட் என்பவர் புலிக்காடு குறித்தும் தங்களது பரிந்துரை கட்டுரைகளை அளித்துள்ளனர். உலக பாரம்பரிய சின்னங்கள் குறித்த ஆலோசனைக்குழு தலைவர் சுஜித் பானர்ஜி இந்த கட்டுரைகளை பெற்றுக்கொண்டு, கட்டுரைகளை மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று இந்த இடங்கள் பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.


2 கி.மீ. நீளமுள்ள பைபிள்: சென்னை கண்காட்சியில் ஆர்வத்துடன் ரசித்த மக்கள்


200 கிலோ எடையும் 2 கி.மீ. நீளமும் உடைய உலகிலேயே மிகப்பெரிய பைபிள் சென்னை கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து ரசித்தனர்.

சென்னை கீழ்ப்பாக்கம் ஹார்லேஸ் சாலையில் உள்ள பிஷப் மாணிக்கம் ஹாலில் ஆண்டு தோறும் பைபிள் கண்காட்சி நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான பைபிள் கண்காட்சி தற்போது நடைபெற்று வருகிறது. இக்கண்காட்சி 12ம் தேதி வரை நடக்கிறது.

இக்கண்காட்சியில் 2 கிலோ மீட்டர் நீளமுள்ள பிரமாண்டமான பைபிள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பைபிளை உருளை போன்றவடிவில் உருவாக்கி உள்ளனர். இதில் பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடு ஆகியவை உள்ளன. படங்கள் அனைத்தும் வண்ணமயமாக தத்ரூபமாக அச்சிடப்பட்டுள்ளன. உலகின் மிகவும் பெரிய பைபிள் என்ற பெருமையுடைய இப்பைபிளின் எடை 200 கிலோ. இப்பைபிளை பொதுமக்கள் திரண்டு வந்து ஆர்வமுடன் பார்த்துச் செல்கிறார்கள்.

இதுபற்றி கண்காட்சியை நடத்தும் புத்தக நிறுவன நிர்வாகி ஜோஸ் தாமஸ் கூறும்போது, தற்போது நடந்து வரும் கண்காட்சியில் பல்வேறு விதமான பைபிள்கள் இடம் பெற்றுள்ளன. சிறிய பைபிளை வாங்க பொது மக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். அடுத்த ஆண்டு முதல் சிறிய ரக பைபிள்கள் விற்பனைக்கு வைக்கப்படும் என்றார்.

இந்த கண்காட்சியில் கிறிஸ்தவ கதைகள் அடங்கிய ஏராளமான புத்தகங்களும் உள்ளன. கிறிஸ்தவ பாடல்கள் கொண்ட சி.டி., டி.வி.டி.க்கள், ஹாலிவுட் கிறிஸ்தவ திரைப்பட டி.வி.டி.க்களும் உள்ளன. கிறிஸ்தவர்களுக்கு தேவையான அனைத்து பொருட்களும் இக்கண் காட்சியில் வைக்கப்பட்டுள்ளன.

மேலும் இக் கண்காட்சியில் உலகின் மிகச் சிறிய பைபிள் ஒன்றும் இடம் பெற்றுள்ளது. 10 கிராம் எடையில் நூதன முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் 1189 அதிகாரங்கள் உள்ளன. புதிய ஏற்பாடு மற்றும் பழைய ஏற்பாடு போன்றவை அதில் இடம் பெற்றுள்ளன.


Monday, December 26, 2011

ஐயப்பனுக்கு வந்த சோகம்


தமிழ்கத்தில் இருந்து காய்கறி மற்றும் பொருட்கள் செல்வது குறைந்துள்ளதால் சபரிமலையில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கமுடியாமல் திருவிதாங்கூர் தேவசம்போர்டு திணறி வருகிறது. நிலைமையை சமாளிக்க கர்நாடகாவில் இருந்து அதிக விலைக்கு காய்கறிகளை வாங்குவதால் கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு விவகாரத்தால் சபரிமலை செல்லும் தமிழக ஐயப்ப பக்தர்கள் மீது கேரளாவில் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் தமிழக பக்தர்கள் சபரிமலைக்கு செல்லாமல் உள்ளூர் ஐயப்பன் கோவிலில் மாலைகளை கழட்டி விரதத்தை முடிக்கின்றனர். இதையடுத்து கடந்த இரண்டு வாரங்களாக சபரிமலைக்கு தமிழக பக்தர்களின் வருகை நின்று போனதால் கோயில் வருமானம் குறைந்து வருகிறது. இது திருவிதாங்கூர் தேவசம்போர்டுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு காய்கறிகள் உள்ளிட்ட பொருட்கள் செல்லாததால் சபரிமலையில் அன்னதானம் வழங்குவதிலும் தேவசம்போர்டுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. சபரி்மலையில் தேவசம்போர்டு சார்பிலும், ஐயப்ப சேவா சங்கம் சார்பிலும், விஸ்வ இந்து பரிஷத், ஆந்திராவை சேர்ந்த ஒரு அமைப்பு சார்பிலும் 5 இடங்களில் அன்னதானம் வழங்கப்படுகிறது.

சுமார் 60,000க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்கான காய்கறிகள் முழுவதும் தமிழ்கத்தில் இருந்துதான் கொண்டு வரப்படுகிறது. முல்லைப் பெரியாறு பிரச்சனையால் தமிழகத்தில் இருந்து காய்கறி செல்வது குறைந்துவிட்டது. தேவசம்போர்டின் 2 அன்னதான மையங்களில் தினமும் காலையில் உப்புமா, கடலைக்குழம்பு, சுக்கு காப்பி, மதியம் சாப்பாடு, சாம்பார், அவியள், தோரன், ரசம், ஊறுகாய், இரவில் கஞ்சி, பயிறு ஆகியவை வழங்கப்படுகிறது.

இந்த இரண்டு அன்னதான மையங்களில் தினமும் 20,000க்கும் அதிகமான பக்தர்கள் சாப்பிடுகிறார்கள். தமிழகத்தில் இருந்து காய்கறி மற்றும் பொருட்கள் வரத்து குறைந்துள்ளதைத் தொடர்ந்து இங்கு உணவு தயாரிப்பதும் குறைந்து விட்டது. இதனால் ஏராளமான பக்தர்கள் அன்னதானம் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.


Friday, November 25, 2011

ஸ்ரீபெரும்புதூரில் சீரடி சாய்பாபா படத்தில் இருந்து குங்குமம் கொட்டியதாக பரபரப்பு


ஸ்ரீபெரும்புதூர் காந்தி ரோட்டைச் சேர்ந்தவர் மணிகண்டன். சாய்பாபா பக்தர். இவரது வீட்டு முன் அறையில் சாய்பாபா படம் வைத்து பூஜை செய்து வந்தார். இன்று காலை 10 மணி அளவில் பூஜை செய்த போது சீரடி சாய்பாபா படத்தில் இருந்து குங்குமம் கொட்டியது. சுமார் 1 அடி உயரத்திற்கு குங்குமம் கொட்டியதாக அவர் தெரிவித்தார்.

இந்த தகவல் நகரம் முழுவதும் பரவியது. ஏராளமான பெண்கள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் அவரது வீட்டுக்கு வந்து வழிபட்டு, குங்குமத்தை பிரசாதமாக பெற்றுச் சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Monday, August 29, 2011

லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்: வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலய திருவிழா இன்று மாலை கொடியேற்றம்


நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள உலக பிரசித்தி பெற்ற கிறிஸ்தவதலமான புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தின் ஆண்டு திருவிழா இன்று (திங்கட்கிழமை) மாலை 6.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

விழாவில் கலந்து கொண்டு புனித ஆரோக்கிய மாதாவின் அருளை பெறவும், தங்களின் பல்வேறு நேர்த்திகடன்களை செலுத்துவதற்காகவும் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலும் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் பல்லாயிரகணக்கான பக்தர்கள் வேளாங்கண்ணியில் வந்து குவிந்துள்ளனர்.

இதனால் வேளாங்கண்ணியில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. அங்குள்ள அனைத்து விடுதிகள் நிரம்பிவிட்ட நிலையில் ஏராளமான பக்தர்கள் கடற்கரையோரம், பேராலய வளாகம் உள்ளிட்ட இடங்களில் திறந்த வெளியில் தங்கியுள்ளனர். விழாவையொட்டி வேளாங்கண்ணிக்கு இயக்கப்பட்டு வரும் அனைத்து பஸ்களிலும் நேற்று அதிக அளவில் கூட்டம் காணப்பட்டது.

சென்னை, புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், விழுப்புரம், விருத்தாச்சலம், திண்டிவனம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் இருந்தும், மதுரை, தேனி, விருதுநகர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வேன்களிலும், டூரிஸ்ட் பஸ்களிலும் வந்து இறங்கிய வண்ணம் உள்ளனர்.

இதுதவிர தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரையாக கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பக்தர்கள் வந்து கொண்டு இருக்கிறார்கள். ஏராளமான பக்தர்கள் காவி உடைகளை அணிந்து கூட்டம், கூட்டமாக மாதாவின் உருவம் பொறித்த கொடியை கையில் ஏந்தி கொண்டும், மாதாவின் பெருமைகளை விளக்கும் ஆன்மிக பாடல்களை இசைத்தவாறும் கடும் வெயிலையும் பொருட்படுத்ததாது வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரையாக சென்றனர்.

பேராலய திருவிழா கொடியேற்றத்தை காண பல்லாயிரகணக்கில் பக்தர்கள் குழுமியிருப்பதால் வேளாங்கண்ணி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.



Sunday, April 24, 2011

உயிர்த்தெழுந்தாரே ஜெயித்தெழுந்தாரே: ஈஸ்டர் ஸ்பெஷல்


ஈஸ்டர் கொண்டாடுவதன் நோக்கம்: இயேசு உயிர்த்தெழுந்தார், இன்றும் ஜீவிக்கிறார் என்ற நம்பிக்கையுடன் ஈஸ்டர் கொண்டாடப்படுகிறது. அவரது பிறப்பை கிறிஸ்துமஸ் என்கிறோம். ஈஸ்டரை ஒட்டி ஜெருசலேம் நகரில் மக்கள் பவனி வருவதை குருத்தோலை ஞாயிறு என்கிறோம். சீடர்களால் அவர் காட்டிக்கொடுக்கப்பட்டதை "பெரிய வியாழன்' என்றும், அவரது மரண நாளை "புனித வெள்ளி' என்றும் நினைவு கூர்கிறோம். சிலுவையில் அறையப்பட்டு மரணத்தை சந்தித்து, தான் கூறிய படியே, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த சம்பவமான, "ஈஸ்டர்' பெருநாளே, உலக வரலாறுக்கு வித்திட்ட நாளானது.

பூமியில் தோன்றிய அரசர்கள், அறிஞர்கள், தலைவர்கள் அனைவருமே ஒரு நாட்டுக்காக, ஒரு குலத்துக்காக பிறந்து வாழ்ந்து இறக்கின்றனர். அவர்கள் பிறப்பது பற்றிய தகவல் ஏதும் நமக்கு தரப்படுவதில்லை. ஆனால், இயேசு பிறக்க இருப்பதை, பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே தீர்க்கதரிசிகள் முன்னுரைத்தனர். அவரது பிறப்பு முதல் இறப்பு வரை என்னென்ன நடக்கும் என்பதை எடுத்துரைத்தனர். இதுபற்றி பைபிளில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல, அவர்கள் சொன்ன அனைத்து வார்த்தைகளும் நிறைவேறியுள்ளது. ""உயிரோடிருக்கிறவரை, நீங்கள் மரித்தோரிடத்தில் தேடுவதென்ன? அவர் இங்கே இல்லை, உயிர்த்தெழுந்தார்,'' என பைபிள் வசனம் கூறுகிறது.

உலக வரலாறு பற்றி பைபிள் கூறுவதைக் கேளுங்கள். முதல் மனிதனான ஆதாம், கடவுளின் கட்டளையை மீறி செய்த பாவத்தால், ஒட்டுமொத்த மனுக்குலமே பாவ வாழ்க்கையை தொடர்ந்தது. தான் படைத்த மனுக்குலம், தன்னை போல் பரிசுத்தமாக இருக்க வேண்டும் என்றே கடவுள் விரும்பினார். மனிதனும், ஒவ்வொரு முறையும் தான் செய்யும் பாவ செயலால் மன வேதனை அடைந்தான். அதற்கு பரிகாரமாக, கடவுளின் மன்னிப்பை பெற விலங்கு, பறவைகளின் ரத்தத்தை கடவுளுக்கு பலியாக செலுத்தினான். ஆனாலும், பாவச்செயல் தொடர்ந்தது. இதில் இருந்து மக்களை விடுவிக்க கடவுள் ஒரு கன்னிப்பெண்ணின் வயிற்றில் பிறந்தார். யூத மக்கள் மத்தியில் முன்மாதிரியாக வாழ்ந்து தன்னை வெளிப்படுத்தினார். ஆனால், கடவுளின் கட்டளைகளை மீறி வாழ்ந்த யூதர்கள் புதிய கட்டளைகளை வாழ்க்கை முறைகளை மாற்றி கொள்ள விரும்பாமல் இயேசுவை ஒழித்து கட்ட திட்டம் தீட்டினர். அப்போது இயேசுவின் சீடர்களில் ஒருவனாகிய யூதாஸ் 30 வெள்ளிக்காசுக்காக அவரை காட்டிக்கொடுத்தான். இயேசுவும் சிலுவை மரணத்தை சந்தித்து, தன் ரத்தத்தை சிந்தி, மனுக்குல பாவத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார். "" தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடைய மாட்டான். அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான். கிறிஸ்துவுக்குள் புது சிருஷ்டியாக எப்போதும் பரிசுத்தமாக வாழவேண்டும்,'' என பைபிள் தெளிவுபடுத்துகிறது.

ஈஸ்டர் காலத்தில் மக்கள் தவவாழ்வு வாழ்கின்றனர். தங்கள் சுகங்களை குறைத்துக் கொள்கின்றனர். ஆனால், ஆண்டுதோறும் 40 நாட்கள் மட்டுமே விரதம் இருந்தால் போதாது. மீதியுள்ள நாட்களிலும் பாவவாழ்வுக்கு ஒரு சதவீதம் கூட இடம் கொடுக்கக்கூடாது. நமக்கு 'ஈஸ்டர்' உணர்த்தும் தத்துவம் இதுவே.

உயிரை கொடுத்தார்; உலகை மீட்டார்: இயேசு மரித்த பிறகு அவரது உடலையும், சிலுவையில் அறையப்பட்ட மற்றவர்களின் உடலையும் சிலுவைகளிலிருந்து அகற்றப்பட வேண்டிய நேரம் வந்தது. அவர்கள் இயேசு அறையப்பட்டிருந்த சிலுவையின் அருகில் வந்தனர். அவர் மரித்துபோயிருந்தார். ஒரு போர்சேவகன் அவரது விலாவில் குத்தினான். உடனே ரத்தமும், தண்ணீரும் வெளிப்பட்டது. இதன் பிறகு யோசேப்பு, மன்னன் பிலாத்துவிடம் சென்று, இயேசுவின் சரீரத்தை எடுத்துக் கொண்டு போக அனுமதி கேட்டார். பிலாத்துவும் அனுமதித்தான். இயேசுவின் உடல் அருகே வந்த நிக்கோதேமூன் என்பவன் இயேசுவின் சரீரத்தில் மணம் மிக்க சுகந்தப்பொருட்களைத்தடவி, துணியில் சுற்றி கட்டினான். கண்மலையில் வெட்டியிருந்த கல்லறைக்குள் இயேசுவின் சரீரத்தை வைத்தனர். கல்லறை வாசலில் பெரிய கல்லைப்புரட்டி வைத்தார்கள். அடுத்தநாள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் இருள்நீங்காத பொழுதில் ஆண்டவருடைய கல்லறைக்கு மகதலேனா மரியாள் என்பவரும், யாக்கோபின் தாயாகிய மரியாள் சலோமியும் சுகந்த வார்க்கங்களை கொண்டு சென்றனர்.

கல்லறைக் கல்லை எப்படிப்புரட்டுவது என்று அவர்கள் பேசிக்கொண்டே சென்றனர். கல்லறை அருகே சென்றதும் கல் புரண்டு கிடந்ததைப் பார்த்தனர். "இதை யார் அகற்றியிருக்கக் கூடும்?'' என்றவர்களாய், கல்லறைக்குள் எட்டிப்பார்த்தனர். உள்ளே இயேசுவின் உடல் இல்லை. அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இயேசுவின் சீடர்களான சீமோன் பேதுரு, யோவான் ஆகியோரிடம் சென்று, ""யாரோ ஆண்டவரை கல்லறையிலிருந்து எடுத்துக் கொண்டு போய்விட்டார்கள், அவரை வைத்த இடத்தில் அவர் இல்லை,'' என்று சொன்னார்கள். இதன்பிறகு மற்ற பெண்களும் கல்லறைக்கு சென்றார்கள், அப்போது பிரகாசமுள்ள ஆடையணிந்த இருவரை கண்டார்கள். அந்தப்பெண்கள் நடுக்கமும், திகிலும் அடைந்தவர்களாய் கல்லறையை விட்டு அகன்றனர். அவர்கள் செல்லும் வழியில் இயேசு வந்து கொண்டிருந்தார். அவர்களை "வாழ்க' என்று வாழ்த்தியதுடன், அவர்களை நோக்கி, ""பயப்படாதிருங்கள், நீங்கள் போய் என் சீடர்கள் கலிலேயாவுக்குப் போகும்படி அவர்களுக்குச் சொல்லுங்கள், அவர்கள் அங்கே என்னைக் காண்பார்கள்,'' என்றார். இயேசு உயிர்த்தெழுந்த அதேநாளில் இரண்டு பேர் எம்மோவு நகரத்துக்குச் சென்றனர். அவர்களது முகம் துக்ககரமாக இருந்தது. அவர்களை இயேசு பார்த்தார்.""நீங்கள் ஏன் துக்கத்துடன் இருக்கிறீர்கள்?'' எனக் கேட்டார். அதற்கு அவர்கள், ""இயேசு என்ற தீர்க்கதரிசி சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டார். அவரது உடலைக் கூட கல்லறையில் காணவில்லை,'' என்றனர். உடனே இயேசு அவர்களை நோக்கி, ""கிறிஸ்து தமது மகிமைகளை வெளிப்படுத்தும் நிலையில், இந்த பாடுகளையெல்லாம் அடைந்து தீரவேண்டுமல்லவா?'' என்றார்.இறந்த பிறகும் கூட விலா எலும்பில் குத்துப்பட்டவர் இயேசுபிரான். தெய்வீகமான அவர், மக்களை நல்வழிக்கு திருப்ப உயிரையே கொடுத்தார். தன்னுயிர் கொடுத்தேனும் பிறருக்கு சேவை செய்ய வேண்டும் என மக்களுக்கு உணர்த்தினார். இயேசுபிரான் உயிர்த்தெழுந்த இந்த நன்னாளில் அவரது போதனைகளைப் பின்பற்றி நடக்க உறுதி கொள்வோம்.

ஈரமுள்ள இருதயம் இருக்கட்டும்: இங்கிலாந்தில் ஆலிவர்கிராம்வெல் ராணுவ தளபதியாக இருந்த போது ஒழுக்க விதிமுறைகள் கடுமையாக இருந்தன. ஒருசமயம் விதிகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு இளம்வீரனை விசாரித்தார் ஆலிவர். குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது. ""நாளை மாலை ஆலயமணி அடிக்கும் போது இவன் சுட்டுக்கொல்லப்பட வேண்டும்,'' என உத்தரவிட்டார். மறுநாள் ஆலிவருடன் அதிகாரிகள், மக்கள் கூடினர். துப்பாக்கியுடன் ஒருவன் வீரனின் தலையை குறி வைத்தான். அனைவரும் மணிச்சத்தத்திற்காக காத்திருந்தனர். தண்டனை நேரம் கடந்துவிட்டது. மணி அடிக்கவே இல்லை. அப்போது, ஒரு பெண் கை எலும்பு நொறுங்கி ரத்தம் வழிய வந்தாள். அவள் ஆலிவரிடம், ""பிரபு, குற்றம் சாட்டப்பட்ட இவருக்கும், எனக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இவருக்கு தண்டனை என அறிவிக்கப்பட்டதும் நேற்றே மணிக்கூண்டில் ஏறி, மணியின் இரும்பு நாக்கைப் பிடித்துக் கொண்டேன். மணி அடித்தவர் வேகமாக கயிறை இழுத்தார். நான் கையால் மணியின் நாக்கை பிடித்திருந்ததால் நாக்கு மணியின் மீது படவில்லை. மாறாக கயிறை இழுத்த வேகத்தில் என் கை முறிந்தது. மணியடிப்பவனுக்கு காது கேட்காது என்பது தங்களுக்கு தெரியும். அவன் மணியடித்துவிட்டதாக எண்ணி போய்விட்டான். இவரை எனக்காக விடுவியுங்கள்,'' என்றாள். ஆலிவரின் மனதில் கூட ஈரம் பொங்கியது. அந்த வீரனை விடுவித்தார். கர்த்தரும் இப்படித்தான், நாம் செய்த பாவங்களுக்காக சிலுவையில் அறையப்பட்டார். அவர் அடைந்த தழும்புகளால் நாம் குணமானோம். அவர் மரித்து நம்மை காத்தார். அவரை ஈஸ்டர் மட்டுமல்ல, எந்நாளும் நினைவு கொள்வோம்.

2426 மொழிகளில் எழுதப்பட்ட நூல்: கிறிஸ்து பிறப்பதற்கு 4000 ஆண்டு காலத்திற்கு முற்பட்ட வரலாறும், அவர் பிறந்த பின் உலகம் முடியும் வரை உள்ள நிகழ்வுகளும் பைபிளில் உள்ளது. ஆதாம் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களின் படைப்பும், இயேசுவின் பிறப்பும் அதில் கூறப்பட்டுள்ளது. பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு என இரு பிரிவாக இருக்கிறது. உலகம் முழுவதும் 2426 மொழிகளில் உள்ள ஒரே நூல் பைபிள் மட்டுமே. பைபிளை பற்றிய இன்னும் ருசிகரமான தகவல்களைத் தெரிந்து கொள்வோமா!

* ஜெர்மனியில், விஞ்ஞானி ஜான் குட்டன்பர்க் கி.பி.,1450ல் அச்சு இயந்திரம் கண்டுபிடித்தார். அதில் முதல் நூலாக பைபிளை அச்சிட்டார்.
* கி.மு.,1500 முதல் கி.பி.,55 வரை, 40க்கும் மேற்பட்ட தீர்க்கதரிசிகளால் அந்தந்த கால நிகழ்வுகளாக எழுதிய கடவுள் வார்த்தையாக பைபிள் நம்பப்படுகிறது.
* முதன்முதலாக எழுதப்பட்ட பைபிளின் பிரதி ஒன்று, அமெரிக்கா நியூயார்க் நகரிலுள்ள பொது இறையியல் கல்லூரியில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.
* இத்தாலி, வாடிகன் நகரில், தோல் சுருளில் எழுதப்பட்ட புதிய ஏற்பாடு பைபிளம் உள்ளது. ஒரு சுருள் 30 அடி நீளம் கொண்டது. இதுபோல 43 தோல் சுருள்களில் அது எழுதப்பட்டது. ஆடு, மாடு, ஒட்டகம், கழுதை தோல்கள் பயன்படுத்தப்பட்டன.
* இந்திய மொழிகளில் பைபிள் முதன் முதலாக மொழி பெயர்க்கப்பட்டது தமிழில் என்பது பெருமைக்குரிய விஷயம். ஜெர்மனி போதகர் சீகன்பால், தஞ்சாவூர் அருகே தரங்கம்பாடி வந்து தங்கினார். கி.பி.,1705ல், எபிரேய மொழியிலிருந்து, தமிழில் பைபிளை மொழி பெயர்க்க துவங்கி 1714ல் முடித்தார். அவர் எழுதிய முதல் மொழிபெயர்ப்பு பைபிள் ரோமிலுள்ள வாடிகன் நகரில் உள்ளது.


Wednesday, January 12, 2011

சென்னையில் 5 நாள் பைபிள் கண்காட்சி இன்று துவங்கியது



சென்னை  யில் இன்று காலை பைபிள் கண்காட்சி துவங்கியது. இது வரும் 16-ம் தேதி வரை தொடர்ந்து 5 நாட்கள் நடக்கும்.

இந்திய வேதாகமச் சங்கம், புக் ரூம் ஆகியவை இணைந்து சென்னையில் பைபிள் கண்காட்சி நடத்துகின்றன. இந்த கண்காட்சி சென்னை கெல்லீஸ் கார்னரில் உள்ள பிஷப் மாணிக்கம் அரங்கில் இன்று துவங்கியது.

இந்த பைபிள் கண்காட்சி மற்றும் தள்ளுபடி விற்பனையில் உலகிலேயே மிகச்சிறிய 2-வது பைபிள், மிகப்பெரிய பைபிள், ஆய்வு பைபிள்கள், தமிழ், ஆங்கிலம், இந்தி மொழியில் பைபிள்கள், பல்வேறு கிறிஸ்துவ புத்தகங்கள், சிறிய குழந்தைகள் பைபிளை படிக்கும் வகையில் பட விளக்கங்களுடன் கூடிய பைபிள்கள், கண்பார்வையற்றவர்கள் படிக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட பிரெய்லி முறை பைபிள்கள், எழுத, படிக்கத் தெரியாதவர்கள் பைபிளை படிப்பதற்கு வசதியாக சோலார் பேட்டரி பைபிள்கள், டிஜிட்டல் பைபிள் உள்ளிட்டவை லைக்கப்பட்டுள்ளன.

சோலார் பேட்டரி பைபிளில் ஒரு பட்டனை அழுத்தினால் அதில் பதிவு செய்யப்பட்டிருக்கும் வசனங்கள் ஒலிக்கும்.

டிஜிட்டல் பைபிளில் 1,280 பக்கங்கள் கொண்ட பைபிளின் அனைத்து அதிகாரமும் கைக்கடங்கும் சிறிய கருவியில் அடக்கப்பட்டுள்ளது. 

இந்த பைபிள் கண்காட்சியை ஈ.சி.ஐ. சென்னை பேராயர் சுந்தர்சிங் இன்று காலை 9.30 மணிக்கு துவங்கி வைத்தார்.

இது வரும் 16-ம் தேதி வரை தொடர்ந்து 5 நாட்கள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடக்கிறது. இந்த தகவலை இந்திய வேதாகம சங்கத்தின் மார்க்கெட்டிங் இயக்குனர்  டபிள்யூ.ஆர்.பால்ராஜ், சென்னை துணை செயலர் பாதிரியார் டி.எஸ்.எபி சாமுவேல் ஆகியோர் தெரிவித்தனர்.


Saturday, December 25, 2010

இயேசு பிறந்த பெத்லகேமில் வரலாறு காணாத கூட்டம்



உலகெங்கும் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாகவும், உற்சாகமாகவும் கொண்டாடப்பட்டது. இயேசு நாதர் பிறந்த பெத்லகேமில் வரலாறு காணாத அளவுக்கு பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

கடந்த பத்து ஆண்டுகளில் இந்த அளவுக்கு கூட்டம் வந்ததில்லையாம் இங்கு. பல்லாயிரக்கணக்கானோர் சர்ச் ஆப் நேட்டிவிட்டியில் கூடி இயேசுநாதரின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினர். இந்த இடத்தில்தான் இயேசுநாதர் பிறந்தார் என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கையாகும்.

இன்று காலை முதலே அங்கு பிரார்த்தனைகள் தொடங்கி விட்டன. கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் இங்கு வந்திருப்பதாக இஸ்ரேல் ராணுவத் தகவல்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு இங்கு 50,000 பேர் வந்திருந்தனர்.

கிறிஸ்தவர்கள் பெருமளவில் கூடியிருந்ததால் அங்கு பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்தியாவில்

இந்தியாவிலும் இன்று கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களை கட்டியிருந்தன. நாடெங்கும் உள்ள கிறிஸ்தவப் பேராலயங்களில் நேற்று நள்ளிரவுப் பிரார்த்தனை நடத்தப்பட்டது. இன்று காலையில் கிறிஸ்தவர்கள் புத்தாடைகள் அணிந்து, கேக் உள்ளிட்ட இனிப்புகளை உற்றார், உறவினர், நண்பர்களுக்கு வழங்கி கிறிஸ்துமஸை கொண்டாடினர்.

தமிழகத்திலும் இன்று கிறிஸ்துமஸ் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. 



கிறிஸ்மஸ் விழா ...


orkut scraps


கிறித்துமசு (Christmasஅல்லது கிறிஸ்து பிறப்புவிழா (நத்தார்ஆண்டு தோறும் நாசரேத்து இயேசுவின் பிறப்பைக் குறிக்கும் முகமாக கொண்டாடப்படுகிறது. கிறிஸ்து பிறப்புவிழா (கிறிஸ்துமஸ்கிறிஸ்மஸ்) கொண்டாட்டங்களில் ஆலய வழிபாடுஇயேசுவின் பிறப்பை சித்தரிக்கும் சிறிய பொம்மைகளால் செய்யப்பட்ட மாட்டுத்தொழுவ காட்சிகள்சண்ட குலோஸ்வாழ்த்து அட்டை மற்றும் பரிசுப் பரிமாறல்கிறிஸ்துமஸ் மரத்தை அழகூட்டல்,கிறிஸ்துமஸ் கெரொல் பாடல்சிறப்பு விருந்து என்பன பொதுவாக அடங்கும். கிறிஸ்தவ கருத்துக்களோடுகிறிஸ்தவத்துக்கு முந்திய காலப்பகுதியின் குளிர்கால கொண்டாட்டங்களின் சில பகுதிகளையும் கிறிஸ்துமஸ் தன்னகத்தே கொண்டுள்ளது. இக்கொண்டாட்டத்தின் மதம் சாரா பகுதிகளாக குடும்ப உறுப்பினர்கள் ஒன்று கூடல்நல்லெண்ணங்களை வளர்த்தல் என்பன பின்பற்றப்படுகின்றன.
கிறிஸ்து பிறப்புவிழா கிறிஸ்தவர்களின் ஒரு முக்கியமான திருநாளாகும். இது பெரும்பாலான கிறிஸ்தவர்களால் டிசம்பர் 25 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது எனினும் கிழக்கு மரபுவழி திருச்சபைகள் இதனை யூலியன் நாட்காட்டியில்டிசம்பர் 25ஐக் குறிக்கும் நாளான சனவரி 7 ஆம் நாள் கொண்டாடுகின்றன. கிறிஸ்துமஸ் கொண்டாடப்படும் நாளானது மரபு வழி வருவதேயன்றி இது இயேசு பிறந்த நாளன்று.
கிறிஸ்துமஸ் இன்று உலகின் பெரும்பாலான நாடுகளில் கிறிஸ்தவத்தினது பரவல் காரணமாகவும் அக்கொண்டாங்களில் காணப்படும் மேற்குலக நாகரிங்களின் கவர்ச்சி காரணமாகவும் கொண்டாடப்படுகிறது. அமெரிக்கபிரித்தானிய வழமைகளுக்கு மேலதிகமாக அவ்வப்பகுதிகளில் கிறிஸ்துமஸ் கொண்டாங்கள் வேறுபடுகின்றன

வரலாறு

கிறிஸ்தவத்துக்கு முந்திய கொண்டாட்டங்கள்

குளிர்கால கொண்டாட்டங்கள் ஒவ்வொரு நாகரிகத்திலும் மிக முக்கியமான கொண்டாட்டங்களாக இருந்து வந்துள்ளன. கிறிஸ்தவ கருத்துக்களின் படி இயேசு கிறிஸ்து தம் சாவிற்குப் பிறகு மீண்டும் உயிர்பெற்றெழுந்த நாளாகிய உயிர்த்த ஞாயிறு மிக முக்கியமான கொண்டாட்டமாக கருதப்படுகிறது. தொடக்கத்தில் கிறிஸ்துமஸ் முன்னுரிமை குறைந்த கொண்டாட்டமாக கருதப்பட்டதுமேலும் ஆரம்பகால கிறிஸ்துவ சமூகத்தில் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் விரும்பப்படவில்லை. இன்றைய சமூகத்தில் கிறிஸ்துமஸ் முக்கிய கொண்டாட்டமாக வளர்ந்திருப்பதற்கு கிறிஸ்தவதுக்கு முன்னதான குளிர்கால கொண்டாட்டங்களின் பாதிப்பும் காரணம் எனக்கருதப்படுகிறது. அவற்றில் முதன்மையானவை சில பின்வருமாறு:

சடுர்நலியா பண்டிகை

இயேசு "சோல்-இன்" சூரிய கடவுளாக சித்தரிக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய படம்
உரோமப் பேரரசின் நாட்களில்சடுர்நலியாஇத்தாலி முழுவதும் நன்கறியப்பட்ட குளிர்கால கொண்டாட்டமாகும். சடுர்நலியாவின் போது களியாட்டங்களும்கேளிக்கை நிகழ்வுகளும் காணப்பட்டது. இதன் போது பரிசு பரிமாற்றங்களும் முக்கிய இடம் வகித்தது. பெரியவர்களுக்கு மெழுகுவர்த்திகளும் சிறுவருக்கு பொம்மைகள் வழங்குவதும் வழக்கமாக காணப்பட்டது. சடுர்நலியாவிம் போது வர்த்தக நடவடிக்கைகள் பிற்போடப்பட்டதோடு அடிமைகளுக்கும் கொண்டாட்டங்களில் ஈடுபட அனுமதியளிக்கப்பட்டிருந்தது. மது அருந்துதல்பொது இடங்களில் உடையின்றி இருத்தல் போன்றவையும் காணப்பட்டது. சடுர்நலியா சனிக் கடவுளை மதிப்பதற்காக நடைபெற்றது. இது ஆண்டுதோறும் டிசம்பர் 17-டிசம்பர் 24 வரை நடைபெற்றது. பின்னர் இது ஐந்து நாட்களாகக் குறைக்கப்பட்டது.

நட்டாலிஸ் சோலிஸ் இன்விக்ட்டி (natalis solis invicti) பண்டிகை

உரோமர்கள் டிசம்பர் 25 ஆம் நாள் வெற்றிவீரன் சூரியன் (sol invictus) என்றைழைக்கப்பட்ட சூரியக்கடவுளின் பிறந்த நாளை கொண்டாடு முகமாக நட்டாலிஸ் சோலிஸ் இன்விக்ட்டிஎன்ற பண்டிகையை கொண்டாடினார். இது கி.மு. 218-222 இல் உரோமை அரசனானஎலகாபலுஸ் காலத்தில் உரோமைக்கு அறிமுகப்படுத்தப்பட்டு கி.மு. 270-275 இல்அவுரேலியன் காலத்தில் உச்சக்கட்டத்தை அடைந்திருந்தது. சோல் இன்விக்டுஸ் ("வெற்றிவீரன் சூரியன்", "தோல்வியடையாத சூரியன்") சிரியாவில் தொடக்கத்தைக் கொண்ட சூரியக் கடவுளாவார். டிசம்பர் 25 குளிர்கால சம இராப்பகல் நாளாக கருதப்பட்டதுஇதனை உரோமர்கள்புருமா என அழைத்தனர். ஜூலியஸ் சீசர் கி.மு. 45 இல் ஜுலியின் நாட்காட்டியை அறிமுகப்படுத்திய போது குளிர்கால சம இராப்பகல் நாள் டிசம்பர் 25 நாளில் வந்தது எனினும் தற்காலத்தில் அது டிசம்பர் 21 அல்லது 22 இல் வருகின்றது. சோல் இன்விக்டுஸ் கிறிஸ்துமசின் தொடக்கத்துக்கு மிகப்பெரிய பங்களிப்பை செய்துள்ளதாக கத்தோலிக்க கலைக்களஞ்சியம் குறிப்பிடுகிறது. சில ஆரம்ப கிறிஸ்தவ எழுத்தாளர்களும் இயேசுவின் பிறப்பை சூரியனின் மீள் உதயத்தோடு ஒப்பிட்டுள்ளதைக் காணலாம்எடுத்துக்காட்டாகசிப்ரியன் என்ற கிறிஸ்தவ ஆயர் (கிமு 300கள் - கிபி258) பின்வருமாறு எழுதியுள்ளார்:
O, how wonderfully acted Providence that on that day on which that Sun was born . . . Christ should be born
எவ்வளவு அதிசயச் செயல் சூரியன் பிறந்த நாளில்...கிறிஸ்துவும் பிறந்தது
சிப்ரியன், [12]
மார்ச்சு மாதம் 25ஆம் நாள் மரியா இயேசுவைக் கருத்தரித்தார் என்னும் நம்பிக்கை தொடக்க காலக் கிறித்தவரிடையே நிலவியது. அதிலிருந்து ஒன்பது மாதங்கள் கணக்கிட்டுடிசம்பர் 25இல் இயேசு பிறந்தார் என்று கிறித்தவர்கள் ஆண்டுதோறும் கிறிஸ்து பிறப்புவிழாக் கொண்டாடலாயினர்.
எனவேஇன்றைய ஆய்வு முடிவுகளின்படிஇயேசு கிறித்து இவ்வுலகிற்கு ஒளியாக வந்தார் என்னும் கருத்தை வலியுறுத்தும் வகையில் பண்டைக் காலக் கிறித்தவர்கள் அக்காலத்தில் வழக்கிலிருந்த சோல் இன்விக்டி விழாவைத் தழுவி இயேசுவின் பிறப்புவிழாவை அமைத்தனர்.

யூல் பண்டிகை

யூல் பண்டிகையில் "சூரிய சக்கரத்தை எரியூட்டுதல்
ஸ்கென்டினேவியாவைச் சேர்ந்த நாடுகளில் ஆவி வழிபாட்டாளர்கள் யூல் பண்டிகையை டிசம்பர் கடைசி தொடக்கம் சனவரி ஆரம்பம் வரையான பகுதியில் கொண்டாடினார்கள். இப்பண்டிகையின் போது தோர்இடியின் கடவுளை மகிமைப் படுத்தும் வகையில் பெரிய மரம் ஒன்றை எரிப்பது வழக்கமாகும். இதன் போது அந்நெருப்பில் இருந்து வரும் ஒவ்வொரு எரிதங்களும் புதுவருடத்தில் பிறக்கப் போகும் கால்நடைகளை குறிப்பதாக நம்பப்பட்டது. மரம் எரிந்து முடியுமளவும் பண்டிகை தொடரும் இது சுமார் 12 நாட்கள் வரை எடுக்கலாம். யேர்மனியில்இதையொத்த பண்டிகை மிட்விண்டனெச் (மத்திய குளிர்கால இரவு) என அழைக்கப்பட்டது. வடக்கு ஐரோப்பாவே கடைசியாக கிறிஸ்தவத்துக்கு மாற்றப்பட்டமையால் அதன் ஆதி வழிபாட்டு முறைகள் கிறிஸ்துமசில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஸ்கென்டினேவியர் கிறிஸ்துமஸ் பண்டிகையை இன்றும் யூல் என்றே அழைக்கின்றனர். யூல் என்ற பதம், 900 ஆண்டு முதல் ஆங்கிலத்தில்கிறிஸ்துமஸ் என்பதற்கு ஒத்த கருத்துள்ள சொல்லாக பயன்படுகிறது.

கிறிஸ்தவ பண்டிகையின் தோற்றம்

ஒரிஜென்ஆரம்ப கால கிறிஸ்தவ குருஇயேசு உட்பட அனைவரது பிறந்த நாள் கொண்டாட்டங்களையும் எதிர்த்தார்.
இயேசு டிசம்பர் 25இல் பிறந்ததாக கி.பி. மூன்றாவது நூற்றாண்டைச் சேர்ந்த கிறிஸ்தவ எழுத்தாளரும் தேச சஞ்சாரியுமான செக்டுஸ் ஜூலியஸ் அப்ரிகானுஸ்என்பவரால் கி.பி. 221 இல் கிறிஸ்தவருக்காக எழுதப்பட்ட நூல் ஒன்றின் மூலம் அறிவிக்கப்பட்டது. இந்நாள் இயேசு கருவில் உருவாகியதாக கருதப்படும் மார்ச் 25இலிருந்து ஒன்பது மாதங்கள் கடந்த நாளாகும். மார்ச் 25 தற்பொழுது மங்கள வார்த்தை அறிவிப்பின் திருநாளாக கொண்டாடப்படுகிறது. மார்ச் 25 வசந்த கால சம இராப்பகல் நாளாகவும் கருதப்படுவதால் ஆதாம் படைக்கப்பட்ட நாளாகவும் இந்நாள்விளங்குகிறது. ஆரம்ப கிறிஸ்தவர்கள் மார்ச் 25ஆம் நாளே இயேசு சிலுவையில் அறையப்பட்டதாக கருதினார்கள். இதன் உள்கருத்து இயேசு கருவில் உருவாகிய அதே நாளில் இறத்தல் என்பதாகும்இது, தீர்க்கதரிசி(இறைவாக்கினர்) ஒருவர் முழு எண்ணளவான நாட்களே உயிர் வாழ்வாரென்ற யூதர்களது நம்பிக்கையின் காரணமாக எழுந்ததாகும். தொடக்க கால கிறிஸ்தவ அவையில் இயேசுவின் பிறந்த நாள் திருநாளாகக் கொண்டாடப்படவில்லை. கி.பி. 245ஆம் ஆண்டு ஒரிஜென் என்ற கிறிஸ்தவ இறையியல் அறிஞர் இயேசுவின் பிறப்பை கொண்டாடுவதை பலமாக எதிர்த்தார். அவர் பார்வோனனரசரைப் போல இயேசுவின் பிறப்பை கொண்டாடக்கூடாது எனவும் பாவிகளே அவ்வாறு செய்வதாகவும் புனிதர்கள் அல்ல எனவும் குறிப்பிட்டார். ஒரிஜெனின் கருத்து கிறித்தவ திருச்சபையால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
கிறிஸ்துமஸ் விழா டிசம்பர் 25ஆம் நாள் கொண்டாடப்பட்டது என்னும் மிகப்பழைமையான குறிப்பு கி.பி. 354ஆம் ஆண்டளவில் உரோமில் தொகுக்கப்பட்டபிலோகலசின் நாட்குறிப்பில் காணப்படுகிறது. கி.பி. 360களின் ஆதாரமொன்று அக்காலத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் உரோமில் நிலைபெற்றிருந்ததைக் காட்டுகின்றன. ஆனால் கிழக்குத் திருச்சபை கிறிஸ்தவர்கள் குழந்தை இயேசுவைக் காண கிழக்கில் இருந்து ஞானிகள் வந்ததை கொண்டாடும் திருநாளின் (சனவரி 6) ஒரு அங்கமாக பிறப்பையும் கொண்டாடினராயினும் இயேசுவின் திருமுழுக்குக்கேமுக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இயேசுவின் பிறப்பு யூதர்களுக்கு மட்டுமன்றி உலக மக்கள் அனைவருக்குமே மகிழ்ச்சியும் ஒளியும் கொணர்ந்தது என்பதை வலியுறுத்தும் வகையில் சனவரி கிறிஸ்து பிறப்புவிழாவாகக் கீழைத் திருச்சபையின் பல பிரிவினரால் கொண்டாடப்பட்டதுஇன்றும் அப்பழக்கம் நிலவுகிறது. கத்தோலிக்க திருச்சபை இவ்விழாவை இறைக்காட்சி விழா (Epiphany) என்று அழைக்கிறது.
கிழக்கில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் ஆரிய சார்பான பேரரசன் வலென்ஸ் கி.பி. 378இல் அட்ரினாபோல் சமரின் போது இறந்ததை அடுத்து அங்கு தந்தைமகன்தூய ஆவி என்று ஒரே கடவுள் மூன்று ஆள்களாக உள்ளார் என்னும் கொள்கையை ஏற்கும் கிறித்தவ சபை பரவியதன் மூலம் புதுப்பிக்கப்பட்டது. கொன்சாந்தினோபிலுக்கு கி.பி 379இலும் அந்தியோக்கியாவுக்கு 380இலும் அலெக்சாந்தரியாவுக்கு சுமார் 430இலும் அறிமுகப்படுத்தப்பட்டது. எட்வட் கிப்பன் என்ற ஆய்வாளரின் கருத்துப்படி ஆரியவாதம் (Arianism) மிகுந்து காணப்பட்ட கொன்சாந்தினொபிலில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் ஆரம்பத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கி.பி 381 இல் அப்போதைய ஆயரான கிரெகொரி நசியன்சுஸ் பதவி விலகியதைத் தொடர்ந்து வழக்கொழிந்து போய் மீண்டும் யோன் கிறிசொஸ்டொம் கி.பி. 400இல் ஆயராக பதவியேற்றப்பின்பு மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது.

மத்திய காலம்

கிழக்கிலிருந்து வந்த ஞானிகள் இயேசுவை வணங்குதல் டொன் லொரென்சோ மொனாகோவின் 1422 ஓவியம்
ஐரோப்பாவின் ஆரம்ப மத்திய காலத்தில்,கிறிஸ்துமசின் முக்கியத்துவம் திருக்காட்சி விழா (மூன்று அரசர் திருவிழா) திருநாளினால் குறைக்கப்படிருந்தது. ஆனால் மத்தியக்காலத்தில் கிறிஸ்துமஸ் தொடர்பான திருநாட்கள் முக்கியத்துவமைடைந்து காணப்பட்டன. கிறிஸ்துமசுக்கு முன் 40 நாட்கள் "புனித மார்டினின் நாற்பது நாட்கள்" (இது நவம்பர் 11 இல் ஆரம்பித்தது) என அழைக்கப்பட்டதுதற்காலத்தில் வருகைக்காலம்(Advent) என இது அழைக்கப்படுகிறது. இத்தாலியில் சடுர்நெலிய அம்சங்கள் வருகைக்கால முறைமைகளுக்குள் உள்வாங்கப்பட்டது. 12வது நுற்றாண்டளவில்இவ்வம்சங்கள் கிறிஸ்துமசின் 12 நாட்களுக்குள் (டிசம்பர் 26-சனவரி 6) ஊடுகடத்தப்பட்டன.
கிறிஸ்துமசின் முக்கியத்துவம் பேரரசர் சார்லிமேன் (Charlemagne) கி.பி. 800ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் நாளில் முடிசூட்டப் பட்டதனாலும் இங்கிலாந்தின் முதலாவது வில்லியம் மன்னர் 1066 கிறிஸ்மஸ் நாளன்று முடிசூட்டப்பட்டதனாலும் அதிகரித்தது. உயர் மத்திய காலத்தில் வரலாற்று நூல்கள் பல முக்கிய நபர்கள் கிறிஸ்துமஸ் திருநாளைக் கொண்டாடியதை குறித்துள்ளன. இங்கிலாந்தின் இரண்டாம் ரிச்சர்ட் மன்னன் 1377ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் விருந்தொன்றை கொடுத்ததாக கூறப்பட்டுள்ளது. யூல் பன்றி மத்திய கால கிறிஸ்துமஸ் விருந்துகளில் கட்டாய அங்கமாக காணப்பட்டது. கெரொல் பாடல் இசைப்பதுவும் இக்காலத்தில் பிரபலமடைந்து வந்தது. ஆரம்பத்தில் கெரொல் குழு நடனமாடுபவர்களால் ஆனதாக காணப்பட்டது. குழுவில் ஒரு தலைமை பாடகரும் அவரைச் சுற்றி நடனமாடும் குழுப்பாடகர்களையும் கொண்டிருந்தது. அக்காலத்தின் பல எழுத்தாளர்கள் கெரோல் இசையை சடுர்நலியயூல் அம்சங்களின் தொடர்ச்சி என சாடினார்கள். விதிமுறைகளை மீறுதலும்,குடிபோதை,சூதாட்டம் போன்றவையும் கொண்டாட்டத்தின் முக்கிய அங்கமாக காணப்பட்டது. இங்கிலாந்தில் புத்தாண்டு நாளில் பரிசுகள் பரிமாறப்பட்டது.

சமய மறுசீரமைப்பும் 1800களும்

கிறிஸ்துமஸ் தந்தை
கிறிஸ்தவ சமய மறுசீரமைப்பின்போது சீர்த்திருத்த திருச்சபைகள் கிறிஸ்துமஸ் கொண்டாங்களை "பாப்பரசரின் ஆடம்பரம்" எனவும்தூய்மை வாதிகள் என்னும் பிரிவினர் (Puritans) கிறிஸ்து பிறப்புவிழாக் கொண்டாட்டத்தை "விலங்கின் (சாத்தானின்கந்தல் துணி" எனவும் கண்டித்தனர். இதற்குப் பதில்மொழி தரும் விதத்தில் கத்தோலிக்க திருச்சபை கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் வெளி ஆடம்பரங்களைக் குறைத்துஅதன் உள்ளார்ந்த சமய தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டியது.
இங்கிலாந்து உள்நாட்டு போரின் போது முதலாம் சார்ல்ஸ் மன்னனை பாராளுமன்றம் வென்றதன் காரணமாகா இங்கிலாந்தின் தூய்மைவாத கிறிஸ்தவ மறுசீரமைப்புஆட்சியாளர்கள் 1647 இல் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை இங்கிலாந்தில் தடை செய்தனர். இதனைத் தொடர்ந்து கிறிஸ்துமஸ் ஆதரவு கலவரங்கள் பல நகரங்களில் வெடித்தது. கண்டர்பெரி பல கிழமைகளுக்கு கலகக்காரர்களின் வசமிருந்தது. அவர்கள் ஒஃலி கிளைகளால் பாதைகளை அலங்கரித்தோடு அரசனுக்கு ஆதரவளிக்கும் வாசகங்களையும் காட்சிப்படுத்தினார்கள். 1660 இல் இங்கிலாந்தின் ஆட்சியாளர்கள் கிறிஸ்துமஸ் மீதான தடையை நீக்கினார்கள். இன்னமும் சிலஅங்கிலிக்கன் திருச்சபையைச் சேர்ந்த பாதிரியார்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை ஏற்க முன்வருவதில்லை.
அமெரிக்காவின் புதிய இங்கிலாந்தில் தூய்மைவாத கிறிஸ்தவ மறுசீரமைப்பினர் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை எதிர்த்தார்கள்பொஸ்டன் நகரில் 1659 தொடக்கம் 1681 வரையான காலப்பகுதியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் தடை செய்யப்பட்டிருத்தது. அதே காலப்பகுதியில் நியூயார்க் வர்ஜீனியா நகர மக்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை கொண்டாடி வந்தனர். அமெரிக்க புரட்சிக்குப் பிறகு இங்கிலாந்தின் கலாச்சரம் எனக் கருதப்பட்டதால் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களின் பாலான ஈர்ப்பு அமெரிக்காவில் குன்றியது.

1820
களில் இங்கிலாந்தின் பிரிவினைவாதம் தலைதூக்கியிருந்த காலத்தில் பலஎழுத்தாளர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகை அருகிக்கொண்டு போவதாக கருதினார்கள். அவர்கள் கிறிஸ்துமஸ் மனமார்ந்த ஒரு கொண்டாட்டத்துக்கான காலமாக கருதியால் அதனை மீட்பிக்க பல முயற்சிகளை செய்தனர்.1843 இல் சார்ல்ஸ் டிக்கின்ஸ் வெளியிட்ட "கிறிஸ்மஸ் கெரொல்ஸ்" என்ற நூல் கிறிஸ்துமஸ் பண்டிகையை சமூக களியாட்டம் வீண்விரயம் செய்யும் காலமாக அல்லாமல் குடும்பம்நல்லெண்ணம்கருணை போன்றவற்றில் மையப்படுத்தி கொண்டாடும் பழக்கத்தை முன் கொணர்வதில் முக்கிய பங்காற்றியது. 
19ஆம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியில் வாசிண்டன் இர்விங் என்ற எழுத்தாளரின் "The Sketch Book of Geoffrey Crayon", "Old Christmas" சிறுகதைகள் காரணமாக அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் மீள்ப்பிக்கப்பட்டனஇச்சிறுகதைகளில் இங்கிலாந்தில் கடைப்பிடிக்கப்பட்டதாக எழுத்தாளர் கூறிய விடுமுறைகளால் மக்கள் கவரப்பட்டனர். ஆனால் சிலர் இர்வினின் நூலில் வரும் விடுமுறை தொடர்பான கூற்றுகள் கற்பனையானவை என்றும் பின்னாளில் அமெரிக்கர்கள் அந்நூலில் உள்ளவற்றை பின்பற்றியதன் மூலமே நூலில் உள்ள விடுமுறைக் கலாச்சாரம் தோன்றியதாகவும் கருதுகின்றனர். மேலும் அமெரிக்க உள்நாட்டு போரைத் தொடர்ந்து அமெரிக்காவுக்கு வந்த அதிகளவான யேர்மனிய குடிவரவாளர்கள் ஐரோப்பிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை அமெரிக்காவுக்கு கொணர்வதில் முக்கிய பங்காற்றினார்கள். 1870 கிறிஸ்துமஸ் அமெரிக்காவில் கூட்டரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டது.

20ஆம் நூற்றண்டும் அதன் பிற்பட்ட காலமும்

"மீண்டும் கிறிஸ்துமஸ்": (1907) கார்ல் லார்சன்
1914 இல் முதலாம் உலகப் போரின் போதுபிரித்தானியயேர்மனிய இராணுவ வீரர்களிடையே அதிகாரபட்சமற்ற போர்நிறுத்த உடன்பாடொன்று காணப்பட்டது. இராணுவத்தினர் தாமாகவே போர் செய்வதை நிறுத்திவிட்டு கெரோல் இசைக்க தொடங்கிவிட்டார்கள். இப்போர்நிறுத்தம் கிறிஸ்மஸ் அன்று தொடங்கி சில நாட்கள் நீடித்தது.
20 ஆம் நூற்றண்டில் அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் மத சார்பானதா சார்பற்றதா என்பதைப் பற்றிய சர்ச்சைக்கு முகம் கொடுத்தது. சிலர் கிறிஸ்துமஸ் கூட்டரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டமையானதுமதத்தையும் நாட்டையும் பிரித்தல் என்பதற்கு முரணானது என வாதிட்டார்கள். "லின்ச் எதிர் டொனெலி (1984)", "கனுலின் எதிர் ஐக்கிய அமெரிக்க (1999)"  வழக்குகள் உட்பட பல முறை நீதிமன்றத்தும் இப்பிரச்சினை எடுத்துச்செல்லப்பட்டது. "கனுலின் எதிர் ஐக்கிய அமெரிக்க (1999)" வழக்கில் நீதிமன்றமானது கிறிஸ்மஸ் கூட்டரசு விடுமுறையாக அறிவிக்கப் பட்டமையானதுஅதில் காணப்படும் மதசார்பற்ற அம்சங்கள் காரணமாக சட்ட மீறல் அல்ல என தீர்ப்பளித்தது. இதனை டிசம்பர் 19, 2000 இல் அமெரிக்க உயர் நீதி மன்றமும் ஆதரித்து தீர்ப்பளித்தது.
21ஆம் நூற்றாண்டில் கிறிஸ்துமஸ் கிறிஸ்தவ மற்றும் மதசார்பற்ற அம்சங்களைக் ஒன்றுசேர கொண்டுள்ளது. டிசம்பர் 26,2004 இந்து சமுத்திர ஆழிப்பேரலையின் காரணமாக இலங்கைஇந்தியாவின் கடற்கரை அண்டிய பகுதிகளில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் குறைந்தாலும்தற்போது வழக்கம்போல ஒரு சமூக விழாவாககுடும்ப விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

பிறப்பு

                             இயேசுவின் பிறப்பு    
இயேசுவின் பிறப்பு பற்றி கிறித்தவ மறைநூலாகிய விவிலியத்தின்பகுதியாகிய புதிய ஏற்பாடு தகவல் தருகிறது. குறிப்பாகமத்தேயுலூக்காஎன்னும் நற்செய்திகள் தருகின்ற தகவற்படிகபிரியேல் என்ற இறைத்தூதன்கன்னி மரியாளிடம் பரிசுத்த ஆவிமூலமாக இயேசு பிறக்கப்போவதை அறிவித்தார். அச்சமயம் மரியாள் யோசேப்பு என்பவருக்கு மணமுடிக்க நிச்சயிக்கப் பட்டிருந்தார். மரியாள் கற்பமாயிருப்பதை தெரிந்து கொண்ட யோசேப்பு மரியாளை இரகசியமாக விலக்கிவி நினைத்தார். இறைத்தூதர் யோசேப்புக்கு தோன்றி மரியாள் கருத்தரித்திருப்பது பரிசுத்த ஆவியினால் என்பதை தெரிவிக்கவே யோசேப்பு மரியாளை மனவியாக ஏற்றுக்கொண்டார்.
மரியாள் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தபோது பாலஸ்தீனத்தை ஆட்சி செய்த உரோமைப் பேரரசன் அகுஸ்துஸ் மக்கள் தொகை கணிப்பீடு ஒன்றை கட்டளயிட்டார். அவர் கட்டளைப்படி யோசேப்பும் மரியாளும் தங்களை பதிவு செய்ய யோசேப்பின் முன்னோரான தாவீதின் நகரமானபெத்லகேமுக்குச் சென்றனர். தங்குவதற்கு அறைகள் கிடைக்காத நிலையில் மாட்டுத் தொழுவமொன்றில் தங்கினார்கள். அம் மாட்டுத் தொழுவத்தில் மரியாள் இயேசுவை பெற்றார்.
இயேசு பிறந்த நேரம்அருகிலுள்ள புல்வெளியில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த இடையருக்கு இறைத்தூதர் தோன்றி பெத்லகேமில் இரட்சகர் பிறந்திருக்கிறார் என்ற நற்செய்தியை அறிவிக்கிறார். மேலும் பரலோக இறைத்தூதரனைவரும் அவர்கள் முன் தோன்றி "உன்னதங்களிலே கடவுளுக்கு மகிமையும்இப் பூமியில் நன்மனதோருக்கு அமைதியுமாகுக" என பாடினர். இடையர் எழுந்து நகருகுள் சென்று குழந்தை இயேசுவை கண்டு வணங்கினார்கள்.

பிரதேச கொண்டாட்டங்கள்

இலங்கையில் கிறிஸ்துமஸ்

கிபி 6வது நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியில் கொஸ்மாஸ் இண்டிகொப்லெய்ட்ஸ் எழுதிய "Topographia Christiana" என்ற நூலில் அக்காலப் பகுதியில் தப்ரபேனில் கிறிஸ்தவர்கள் வசித்ததாகவும் அவர்களுக்கு ஒரு தேவாலாயம் இருந்ததாகவும்ஒரு பாதிரியார் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இலங்கையில் அனுராதபுர இராச்சியத்தில் கிறிஸ்தவர்கள் வாழ்ந்ததாக, 1913 ஆம் ஆண்டு அனுராதபுரத்தில் நடைப்பெற்ற அகழ்வாராய்சிகளில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு சிலுவைகளாலும் வவுனியாவுக்கு அண்மையில் அகழ்ந்தெடுக்கப்பட்ட திருமுழுக்குத்தொட்டியின் மூலமும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பண்டுகாபய மன்னர்புதிய நகரைக் கட்டுவிக்கும் போது தேவாலயம் ஒன்றை கட்டி கொடுத்ததாக மகாவம்சம் கூறும் யோணா பிரிவினர் நெஸ்டோரியன் கிரேக்க மரபுவழி கிறிஸ்தவர்கள் எனக் கருத்தப்படுகிறார்கள். அக்காலத்தில் இங்கு வாழ்ந்த கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடினார்களா என்பதற்கு ஆதாரங்கள் எதுவும் கிடையாது.
இலங்கையில் வரலாற்றில் எழுத்தப்பட்ட முதலாவது கிறிஸ்துமஸ் பண்டிகை 1505 இல் இலங்கைக்கு கத்தோலிக்கர்களான போர்த்துக்கேயர் வருகையை அடுத்தே நடைபெற்றது. 1505 நவம்பர் 15 இல் கொழும்புத்துறைமுகத்தை அடைந்த லோரோன்சோ டி அல்மேதா தலைமையிலான போர்த்துக்கேய மாலுமிக் குழுவினர் அங்கு தமது கப்பலை பழுதுபார்க்கும் பணிகளிலும் கோட்டே அரசனுடன் தொடர்புகளையும் மேற்கொண்ட அதே வேலை கொழும்புத் துறைமுகத்தில் சிறிய தேவாலயம் ஒன்றை கட்டினார்கள். இத்தேவாலயத்தில் 1505 முதலாவதாக கிறிஸ்துமஸ் திவ்விய பலியை ஒப்புக் கொடுத்தார்கள்.

இலங்கையில் கிறிஸ்தவர்கள் 7-8 விழுக்காடு மட்டுமே உள்ளனர் எனினும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் இலங்கையில் முக்கிய இடம் பெறுகின்றது. கிறிஸ்தவர்கள் சமய நிகழ்வுகளில் பங்கு கொள்ளும் அதே வேலை ஏனைய சமயத்தவர்களும் சமய சார்பற்ற விடுமுறையாக கொண்டாடுகின்றனர். பல தொழில் நிறுவனங்களில் கிறிஸ்துமஸ் விடுமுறைகள் விடப்படுவதோடு பல விழாக்களும் எடுக்ப்படுவது வழக்கமாகும். கிறிஸ்துமஸ் இலங்கையில் பொது விடுமுறை நாளாகும். டிசம்பர் மாததில் ஆரம்பம் முதலே வானொலி தொலைக்காட்சி போன்றவற்றில் கிறிஸ்துமஸ் சிந்தனைகள் கெரொல் இசைகள் என்பன ஒலி ஒளி பரப்பப்படும். விற்பனை நிலையங்களில் கிறிஸ்துமஸ் அலங்காரங்களையும் காணலாம்.
கிறிஸ்துமஸ் நாளுக்கு ஒரு கிழமைக்கு முன்னர் கிறிஸ்துமஸ் மரம் ஒன்றை வீட்டில் அலங்கரிப்பதோடு கிறிஸ்துமஸ் கொண்ட்டாங்களை கிறிஸ்தவர்கள் ஆரப்பிப்பது வழக்கமாகும். கிறிஸ்துமஸ் நாளன்று புத்தாடை அணியும் வழக்கமும் காணப்படுகிறது. கத்தோலிக்கர் இயேசு பிறப்பின் மாட்டுத்தொழுவக் காட்சிகளை பொது இடங்களிலும் வீடுகளிலும் காட்சிக்கு வைப்பது வழக்கமாகும். கத்தோலிக்கரும் அங்கிலிக்கன் சபையினரும் டிசம்பர் 24 நடு இரவுடிசம்பர் 25 காலை திருப்பலிகளில் பங்குகொள்ளும் அதே வேளை சீர்த்திருத்த சபையினர் முழு இரவு தியானங்கள்செபக்கூட்டங்கள் என்பற்றில் ஈடுபடுவது வழக்கமாகும். டிசம்பர் 25 காலையில் அயலவருடன் உணவுகளை பகிர்தலும்விருந்து கொடுத்தலும் பொதுவான வழக்கமாகும்.

இந்தியாவில் கிறிஸ்து பிறப்புவிழாக் கொண்டாட்டங்கள்

இந்தியாவில் கிறித்தவக் கொண்டாட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட அரசு விடுமுறை நாள்கள் பெரிய வெள்ளி அல்லதுபுனித வெள்ளி (Good Friday), மற்றும் கிறிஸ்து பிறப்புவிழா ஆகும்.
டிசம்பர் 24ஆம் நாள் நள்ளிரவில் கிறித்தவர் தம் கோவில்களுக்கும் ஆலயங்களுக்கும் சென்று வழிபாடு நடத்துவர். கத்தோலிக்கர் நள்ளிரவுத் திருப்பலியில் கலந்துகொண்டு நற்கருணை விருந்தில் பங்கேற்பர். திருப்பலியின்போது கிறிஸ்து பிறப்புவிழாவின் பொருள் என்ன என்பது மறையுரை வழியாக விளக்கப்படும். ஒவ்வொரு கோவிலிலும் கிறிஸ்துமஸ் குடில் செய்து வைக்கப்பட்டிருக்கும். வீடுகளிலும் குடில் செய்து வைக்கும் பழக்கம் உண்டு. அக்குடிலில் குழந்தை இயேசுமரியாயோசேப்பு ஆகியோரின் உருவச்சிலைகள் வைக்கப்பட்டிருக்கும். கூடவேஇடையர்கள்இடையைச் சார்ந்த ஆடுகள்தொழுவத்தில் மாடுகழுதை போன்ற உருவச்சிலைகளும் இடம்பெறும்.
வீடுகளில் விருந்து நடைபெறும். எல்லாரும் புத்துடை அணிவர். நண்பர்களையும் உறவினரையும் சந்திக்கச் செல்வர். மேலும்இரவில் வாண வேடிக்கைகள் நடைபெறும்.
பல இடங்களில் கிறிஸ்துமஸ் பஜனை நடைபெறும். அப்போது பாடல் குழுவினர் அணியாகச் சென்று வீடுகளைச் சந்தித்து கிறிஸ்துமஸ் பாடல்கள் (Carols) இசைப்பார்கள்.
கிறித்தவர்களோடு பிற சமயத்தவரும் இணைந்து இவ்விழவைக் கொண்டாடுகின்றனர். இது சமய நல்லிணக்கம் உருவாக உறுதுணையாக உள்ளது என்பதில் ஐயமில்லை.








christmas scraps greetings images for orkut, facebook