பாபா ராம்தேவ், ஒரு அபூர்வ மூலிகையின் மகத்துவம் பற்றி கூறியது பொய் என்று கோவர்த்தன பீட சங்கராச்சாரியார் அதோக்ஷ் ஜனந்த் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர், ‘’ராம்தேவ் உண்ணாவிரதத்தை தொடங்குவதற்கு முன்பு தன்னிடம் அபூர்வ மூலிகை இருப்பதாகவும், உணவு சாப்பிடாமல் அதை வைத்து குறைந்தபட்சம் 50 நாட்கள் உயிர் வாழ முடியும் என்றும் கூறினார்.
ஆனால் உண்ணாவிரதம் ஆரம்பித்து 6 நாட்களில் ராம்தேவின் உடல்நிலை மோசமாகிவிட்டது. இதன் மூலம் அபூர்வ மூலிகை பற்றி அவர் சொன்னது பொய் என்று நிரூபணம் ஆகிவிட்டது .
மேலும், விவசாயிகளிடம் ஒரு கிலோ கோதுமையை 10 ரூபாய்க்கு விலைக்கு வாங்கும் ராம்தேவ், அதை கூழாக தயாரித்து ஒரு கிலோ 50 ரூபாய் என விற்று வருகிறார். அது ஊழல் இல்லையா” என்று கூறினார்.
No comments:
Post a Comment