சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் டெசோ மாநாடு நடத்த அனுமதி மறுத்து போலீஸ் கமிஷனர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஜெ. அன்பழகன் தாக்கல் செய்த மனுவை ஐகோர்ட்டு நீதிபதி பால் வசந்தகுமார் விசாரிக்க மறுத்துவிட்டார்.
அந்த மனுவை டிவிஷன் பெஞ்ச் விசாரணைக்கு பட்டியலிடும்படி தலைமை நீதிபதிக்கு, அவர் பரிந்துரை செய்தார். இதைத்தொடர்ந்து, டெசோ மாநாட்டுக்கு அனுமதி வழங்ககூடாது என்று தொடரப்பட்ட பொதுநல வழக்கு நிலுவையில் உள்ள டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகளே இந்த மனுவையும் விசாரிக்கும்படி தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் உத்தரவு பிறப்பித்தார்.
அதன்படி, இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்துக் கொண்டு இன்று மதியம் 12 மணிக்கு நீதிபதிகள் எலிப்பி தர்மாராவ், எம்.வேணுகோபால் ஆகியோர் விசாரிக்க இருப்பதாக மனுதாரர் தரப்பு மூத்த வக்கீல்பி.வில்சன் தெரிவித்தார்.
இந்நிலையில் டெசோ மாநாடு திட்டமிட்டபடி அண்ணா அறிவாலத்தில் நடைபெறும் என தி.மு.க.அறிவித்துள்ளது. எனவே தி.மு.க. சார்பில் ஐகோர்ட்டில் தாக்கப்பட்டுள்ள மனுவிற்கு எதிராக தீர்ப்பு வந்தாலும் மாநாட்டிற்கு பாதிப்பில்லை.

No comments:
Post a Comment