Saturday, February 26, 2011

யாருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வீர்கள்? : பிரகாஷ்ராஜ் பதில்


நடிகர் பிரகாஷ்ராஜ் நடித்து, தயாரித்து வெளிவந்துள்ள படம் ’’பயணம்’’.   இப்படத்தின் ரிசல்ட்டை நேரில் காண மதுரை சென்றார் பிரகாஷ்ராஜ்.



மதுரை திரையரங்குகளுக்கு சென்று பயணம் படத்தை பார்த்த பிரகாஷ்ராஜை செய்தியாளர்கள் சந்தித்தனர்.


அப்போது அவர்,   ‘’மதுரையில்தான் தீவிர சினிமா ரசிகர்கள் அதிகம் இருக்கிறார்கள்.   அதனால்தான் இங்கு வந்தேன்.   படம் திருப்திகரமாக போய்க்கொண்டிருக்கிறது’’ என்று கூறியவரிடம்,


இந்த தேர்தலில் யாருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வீர்கள்? என்று கேட்கப்பட்டது.
அதற்கு அவர்,


‘’ என்னை யாரும் அரசியலுக்கு அழைக்கவில்லை.   நானும் அரசியலுக்கு வரமாட்டேன்.   அரசியலுக்குள் நுழைந்து தேர்தலில் போட்டியிடும் எண்ணமும் இல்லை.   பிரச்சாரம் செய்யும் எண்ணமும் இல்லை’’ என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

இன்றைய பதிவுகள் ....



No comments:

Post a Comment