தொழிலதிபருடன் திருமணம் என்றும், கர்ப்பமாகி குழந்தைப் பெற்றுக் கொண்டதாகவும் தன்னைப் பற்றி வீண் வதந்திகள் வருவதாகக் கூறியுள்ளார் நடிகை த்ரிஷா.
முன்னணி நடிகையான த்ரிஷா பற்றி தொடர்ந்து பல்வேறு வதந்திகள் பரவுகின்றன. பிரபல நடிகருடன் காதல் என கிசுகிசுக்கப்பட்டது. தற்போது தொழில் அதிபரை ரகசிய திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் வந்துள்ளன.
அஜீத்துடன் மங்காத்தா, தெலுங்கில் தீன்மார் போன்ற படங்களில் நடித்து வருகிறார் த்ரிஷா. இந்தப் படங்கள் விரைவில் ரிலீசாக இருக்கிறது. இந்த நிலையில் திருமண வதந்திகள் பரவி இருப்பது, பட வாய்ப்புகளை பாதிக்கும் என அச்சப்படுகிறார் த்ரிஷா. ஹைதராபாத்தில் படப்பிடிப்பில் இருந்த அவரிடம் இதுபற்றி கேட்ட போது, கொதித்துவிட்டார்.
அவர் கூறுகையில், "எனக்கு ஏற்கனவே ஒரு அரசியல் குடும்பத்து புள்ளியுடன் திருமணம் நடந்து விட்டதாக எழுதினார்கள். இப்போது தொழில் அதிபரை ரகசிய திருமணம் செய்து கொண்டதாக புரளி பரப்புகிறார்கள்.பல முறை இதனை மறுத்து விட்டேன். ஆனாலும் வதந்திகள் தொடர்கிறது.
அது மட்டுமல்ல குழந்தை பெற்று விட்டேன் என்று கூட கிசுகிசு பரப்புகின்றனர். எனக்கு யாருடனும் திருமணம் நடக்கவில்லை. ரகசிய திருமணம் செய்து கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. நான் எப்போதும் மீடியாவின் பார்வையில்தானே இருக்கிறேன்... இதில் எங்கே ரகசிய திருமணம் செய்துகொள்வது... அல்லது குழந்தைப் பெற்றுக் கொள்வது? இதெல்லாம் சாத்தியமா என்றுகூட யோசிக்காமல் எழுதுகிறார்களே...
நன்றாகக் கேட்டுக் கொள்ளுங்கள்... என் திருமணத்தை உலகறிய சொல்லி விட்டுத்தான் நடத்துவேன்...," என்றார்.

No comments:
Post a Comment