ஏப்ரல் 7 ந் தேதி திரைக்கு வரப்போகிறது அவன் இவன். பாலாவின் இயக்கத்தில் வெகு விரைவாக எடுக்கப்பட்டு வெகு விரைவாக வெளிவரப்போகும் படம் இதுதான். அதே ஏப்ரல் 7 ந் தேதி தெலுங்கிலும் இப்படத்தை டப்பிங் செய்து வெளியிடப் போகிறார்களாம். அங்கே வாடு வீடு என்பதுதான் இப்படத்தின் டைட்டில். தெலுங்கை தாய் மொழியாக கொண்டவர் என்பதால் தனக்கான டப்பிங்கை தானே பேசிவிட்டார் விஷால்.
சண்டக்கோழி, திமிரு என்று தொடர் ஹிட் கொடுத்த சமயத்தில் விஜய் இடத்தை பிடிப்பார் என்று விஷால் மீது பெரும் நம்பிக்கை கொண்டிருந்தது தமிழ்சினிமா. இருவரது படங்களும் ஒரே நேரத்தில் வந்தால் நன்றாக இருக்குமே என்று பல பரிட்சைக்கு கூட தயாரானார்கள் தயாரிப்பாளர்கள். தமிழில் நடக்காத இந்த மல்லுக்கட்டு இப்போது தெலுங்கில் நடக்கும் போலிருக்கிறது.
தீராத விளையாட்டு பிள்ளை கில்லாடி என்ற பெயரில் மார்ச் 5 ந் தேதி ஆந்திராவில் ரிலீஸ் ஆகவிருக்கிறது. இதே மார்ச் 5 ந் தேதி வேட்டைக்காரன் படத்தையும் டப்பிங் செய்து வெளியிடுகிறார்கள் அங்கே. படத்தின் பெயர் புலி வேட்டா!
அது போகட்டும்... மீண்டும் அவன் இவன் விஷயத்துக்கு வருவோம். பாலாவிடம் செஞ்சோற்று கடன் பட்டிருக்கிறார் சூர்யா. அதற்காக இப்படத்தில் நடிக்க வந்தவருக்கு படத்தில் பத்து நிமிடம் ஒதுக்கிக் கொடுத்திருக்கிறாராம் பாலா. இந்த பத்து நிமிடமும் பட்டைய கிளப்பும் நிமிடமாக இருக்கும் என்கிறார்கள் பாலா யூனிட்டில்.
No comments:
Post a Comment