வாய் பேசாவிட்டாலும் தன் உணர்வுகளை அப்பட்டமாக வெளிப்படுத்தி எல்லாரையும் வாயடைக்க வைத்தவர் அபிநயா. இந்த பெருமைமிகு அறிமுகத்தை பாராட்டாதவர்களே இல்லை. அதோடு சேர்த்து அவரை அறிமுகப்படுத்திய சமுத்திரக்கனியையும் சேர்த்து பாராட்டியது மீடியா.
வாய் பேசாத பெண்ணுக்கு வண்டி வண்டியாக டயலாக் கொடுத்து அதையும் அவரே பேசுவது போல காட்டிய சமுத்திரக்கனியை பார்த்து, "எனக்கு இப்படியெல்லாம் செய்யணும்னு தோணாமல் போச்சே" என்று ஒரு விழாவில் பாராட்டினார் டைரக்டர் அமீர். "இந்தியாவிலேயே இப்படி ஒரு சாதனையை எந்த டைரக்டரும் செஞ்சதில்லை" என்று அதே விழாவில் பாராட்டிய அமீரே கூட இப்போது அபிநயா எங்கே என்று தேடியிருப்பார். ஏனென்றால் நாடோடிகள், ஈசன் படங்களை தொடர்ந்து அபிநயாவின் அடுத்தப்பட அறிவிப்பு வரவேயில்லை இன்னும்.
அதற்கு காரணம் என்னவாக இருக்கும்? யாரும் அழைக்கவில்லையா? அல்லது இவர் மற்றவர்கள் இயக்கத்தில் நடிப்பதை விரும்பவில்லையா? என்று ஆயிரமாயிரம் கேள்விகள். விசாரித்தால் இந்த ஆப்சென்ட்டுக்கு காரணம் அபிநயாவின் குடும்பம்தான் என்கிறார்கள் திரையுலகத்தில்.
அவரை தேடி தினந்தோறும் வரும் வாய்ப்புகளை கெடுத்துக் கொள்கிற அளவுக்கு சம்பளம் கேட்கிறார்களாம் அபிநயா குடும்பத்தினர். திறமையான இந்த பொண்ணுக்கு வாய்ப்பு கொடுக்கணும்னுதான் ஆசைப்படுறோம். அதுக்காக பதினைஞ்சு லட்சம் கேட்டா என்ன செய்வது என்று புலம்புகிறார்கள் இயக்குனர்களும்!
No comments:
Post a Comment