பிரகாஷ்ராஜ்-ராதாமோகன் இருவரும் இணைந்தாலே அது வெற்றிதான் என்பதை மறுபடியும் 'பயணம்' படத்தின் மூலம் நிறுபித்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் அப்படி இப்படி என்று பயணத்தின் ரிசல்ட் இருந்தாலும், தற்போது பயணம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. இதற்கு பத்திரிகையாளர்கள் எழுதிய விமர்சனமும் ஒரு காரணம் என்று கருதிய பிரகாஷ்ராஜ் மற்றும் படக்குழுவினர் அனைவரும் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்து நன்றியை தெரிவித்தார்கள்.
படத்தில் இருக்கும் காட்சிகள், நீக்கப்பட்ட காட்சிகள் என அத்தனை விஷயங்களையும் பத்திரிகையாளர்களுடன் பகிர்ந்துகொண்டார் இயக்குநர் ராதாமோகனிடம், கடத்தப்பட்ட பயணிகள் எந்த ஒரு பயமும் இல்லாமல் சிரித்துக்கொண்டு, ஜாலியாக
இருக்கிறார்களே! உன்மையில் இப்படி இருக்க முடியுமா? என்று கேள்வி கேட்க,
"இந்த மாதிரி படம் எடுக்கனும் என்று நினைத்தபோதே நான் காந்தகார் விமான கடத்தல் தொடர்பான செய்திகளை சேகரிக்க
தொடங்கினேன். அந்த சம்பவத்தில் சிக்கிய சில பயணிகளையும் சந்தித்து பேசினேன். அப்போது அவர்கள் சொல்லிய தகவல்களைதான்
படத்தில் வைத்திருக்கிறேன். அப்போது விமானத்தில் மிமிக்ரி பன்னுபவர் இருந்திருக்கிறார். அவங்களுக்குள்ளே பல விளையாட்டுகள்
நடந்திருக்கிறது. எனக்கும் இது ஆச்சரியமாகத்தான் இருந்தது. ஆனால் எப்பவும் இருக்கமாகவே இருக்க முடியாதில்லையா? ஒரு
ஜப்பானிய பெண் சிகரெட் பிடிக்கும்போது அதை பார்த்து ஒரு தீவிரவாதி கோபப்பட்டிருக்கிறார். பெண்ணாக இருந்திகிட்டு சிகரெட்
பிடிக்கிறாயே, என்று கேட்க, எது என்னுடைய பர்சனல் விஷயம் என்று அந்த பெண் சொல்லிவிட்டு அவளுடைய வேலையை
பார்த்திருக்கிறார். இதுபோல உன்மையில் நடந்த சம்பவங்களைதான் படத்தில் நான் வைத்திருக்கிறேன்." என்றார்.
பயணத்தின்ல் வெற்றிவேகம் இன்னும் கூட படக்குழுவினர் அனைவரும் மூன்று நாட்கள் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்கள்.
சென்னையில் உள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்குகளுக்கு சென்று ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் பேசுகிறார்கள். மேலும் மதுரை
போன்ற பகுதிகளுக்கும் செல்ல இருக்கிறார்கள்.
No comments:
Post a Comment