Wednesday, February 23, 2011

சின்ன சின்ன சினிமா செய்திகள் :விஜய் தங்கையின் பிறந்தநாளை கொண்டாடிய ஹன்சிகா


விஜய் தங்கையின்  பிறந்தநாளை கொண்டாடிய ஹன்சிகா மோத்வானி 

விஜய் தங்கச்சியாக 'வேலாயுதம்' படத்தில் சரண்யா மோகன் நடித்து வருகிறார். சமீபத்தலி (பிப் 20ந் தேதி) அவரது பிறந்தநாள் பட ஷூட்டிங்கில் கொண்டாடப்பட்டது. 'வேலாயுதம்' பட ஷூட்டிங்கில் பங்கேற்றபோது, சரண்யா மோகனின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக ஹீரோயின் ஹன்சிகா மோத்வானி மெகா கேக் வரவழைத்து அசத்தினார்.


யுடிவி நிறுவனத்துடன் இணைந்து மோசர் பேர் தயாரிப்பில் கமல் 
பூ, ராமன் தேடிய சீதை, அவள் பெயர் தமிழரசி போன்ற தரமான படங்களை வழங்கிய மோசர் பேர் தற்போது யுடிவி நிறுவனத்துடன் இணைந்து மோசர் பேர் படங்கள் தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறது. இதற்கு முதல்கட்டமாக செல்வராகவனின் கமல் நடிக்கும் ஒரு படத்தை கூட்டாக தயாரிக்க திட்டமிட்டுள்ளனர். விக்ரம் படமென்றை தயாரிக்கும் திட்டமும் இவர்களுக்கு இருக்கிறது.


மலையாளப் படமொன்றை இயக்கிறார் கௌதம் மேனன்! 

தமிழ் மற்றும் இந்தி படங்களை இயக்கி வந்த கௌதம் மேனன், தற்போது மலையாள திரையுலகத்திலும் இயக்க திட்டமிட்டுள்ளாராம், இதற்காக கேரளாவில் உள்ள திரையலகினருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம் கௌதம். கண்டிப்பாக இந்த வருடம் மலையாளப் படமொன்றை இயக்குவேன் என்றும் கூறியிருக்கிறார்.







இன்றைய பிற பதிவுகள்....









No comments:

Post a Comment