அந்த கடைக்காரரை பார்க்கவே பயமாக இருந்தது சங்கருக்கு. அந்த அளவுக்கு அவரது பார்வை சங்கரை கொலைநடுங்க வைத்தது.
ஒருத்தரோட மனசை படிக்கணும்ன்னா முதலில் கண்ணை பார்த்தாலே போதும், கண்ணே பல விசயங்களை சொல்லி கொடுத்து விடும். மனிதனின் அனைத்து விதமான உணர்ச்சிகளும் விழிகளின் அசைவில் தெரிந்து கொண்டு விடலாம்!
அந்த வகையில் சங்கர் அடுத்து என்ன நடக்க போகிறது என்பதை ஒருவாறாக யூகித்து கொண்டான். ஆனாலும் அவனுக்கு வேறு வழி தெரியவில்லை.
"என்னலே....இதென்ன தர்மசத்திரமா.....வர்றவன் போரவனுகெல்லாம் அரிசி கொடுக்க? போன வாரம் வாங்கினதுக்கு காசு கொடுத்தியாலே? வெட்கமாயில்லே...? மானங்கெட்ட மூதி! அப்படி சோறு திங்கலேன்னா... என்னலே ...? ஆங்! கழுத சம்பாதிக்கிற வரைக்கும் இதை திங்கறது தானே?" கடைகாரர்.
இப்படி சொல்லி விளக்கு கம்பத்துக்கிட்டேயிருந்ததை காடினார்.
"நா ஒண்டி கட்டையாயிருந்தா இப்படி கடன் கேட்க மாட்டேன் அண்ணாச்சி...பிள்ளை குட்டியெல்லாம் ரெண்டு நாளா பட்டிணி...சம்சாரம் வேற பிள்ளைத்தாச்சி"-சங்கர்.
"என்னை கேட்டாலே பெத்தே....? அறிவுகெட்ட முண்டம்! படுக்கிறப்ப தெரிய வேணாம்? கழுதை....அரிசி கடன் கேட்கறதுக்கு 'டோன்பக்' கேளேன்! மூட்டை பூச்சி மருந்தை!! அதை கேட்க மாட்டியே?" -கோபத்தால் நிதானம் இழந்து கத்தினார்.
சங்கர் எச்சிலை முழுங்கினான்.
அவர் என்ன சொன்னாலும் பரவால்ல அரிசி கொடுத்தா போதும் என்று தான் நினைத்தான் சங்கர். காரணம் ஜெகதீஸ்வரி பசியால் அழுதது அவன் கண் முன்னே நிழலாடியது. குழந்தை கீதா வேறு பாலுக்கு அலறுகிறதே!
"உழைக்க மாட்டாதவனா இருந்தா அதைத்தான் வாங்கணும் அண்ணாச்சி! இதோ எப்படியும் ரெண்டு மூணு நாளிலே மழை நின்னுரும்.... நான் சம்பாதிக்க ஆரம்பிச்சுடுவேன்...இப்ப உள்ள கஷ்டத்துக்காக தற்கொலை செய்துகிட்டேன்னா நாளைக்கு வரபோற சந்தோசத்தை அனுபவிக்கிறது யாரு....?" சொல்லி விட்டு சூடாக பெருமூச்சு விட்டான் சங்கர்.
"இப்ப நீ இங்கிருந்து போறியா என்னலே? கோட்டிக்காரன் மாதிரி பேசிகிட்டு!?" -இப்படி கடைகார அண்ணாச்சி பேசிக்கொண்டு இருக்கும் போதே யாரோ ஒருத்தர் சைக்கிளில் வந்து கடை முன்னாடி ப்ரேக் போட்டு நிறுத்தினார்! சைக்கிளை ஸ்டாண்டு போட்டு நிறுத்திட்டு வந்து "நாடாரே! ஒரு பாக்கெட் சிசர்."-என்று கேட்டார்.
சங்கர் கொஞ்சம் தயங்கி ஒதுங்கி நின்றான்.வந்தவர் சிகரெட்டை வாங்கி விட்டு போன பிறகு கடனுக்கு இன்னொரு தடவை முயற்சி பண்ணலாம்ன்னு நினைத்தான். 'ஜெகதி பாவம் என்ன பாடு படுகிறாளோ? குழந்தை பவம் எனக்காக பசியோடு காத்திருக்குமே!' என்றெல்லாம் நினைத்தப்படி நின்றுகொண்டு இருந்தான்.
வந்தவருக்கு சிகரெட் நீட்டின கடைகாரர் சங்கர் இன்னும் போகாமல் இருப்பதை கவனித்து விட்டு "ஏய் ...இன்னுமா நீ போகல...?ன்னு சங்கரை பார்த்து கேட்டார்.
பிறகு சிகரெட் வாங்க வந்தவரிடம் "சார் ...பாருங்க சார் இவனை! நேத்தைக்கும் மாமூல் கேட்டு தொந்தரவு பண்ணினான். இன்னைக்கும் வந்து மாமூல் கேட்டு தொந்தரவு பண்ணுறான் சார்" என்று சொன்னாரே பார்க்கலாம்.
சங்கருக்கு தூக்கி வாரிப் போட்டது. சிகரெட் குடிசைவரை அப்போது தான் உற்றுப்பார்த்தான் மப்டியில் இருந்த போலீஸ்காரர்.
"இங்க வாடா..."ன்னு சங்கரை கூப்பிட்டு சங்கரின் அம்மாவை சம்பந்தப்படுத்தி கெட்ட வார்த்தை சொல்லி திட்டினார்.
"மவனே ...! மாமூல் கேட்கறியா ? ஏரியாவுக்கு புச்சா ...யார்ரா நீ?
முட்டிக்கு முட்டி தட்டி லாக்கப்லே போட்டுருவேன்" என்றார் அந்த போலீஸ்காரர்.
சங்கர் பதறி போய் "ஐயையோ! அதெல்லாம் இல்ல சார்... நா கடன்தான்...எப்பவும் அரிசி எல்லாம் கூட இந்த கடையிலேதான் சார் வாங்குறது. அவரையே வேணா கேட்டு பாருங்க" என்று நடுங்கியப்படி சொன்னான் சங்கர்.
"போடான்னா போவாம போலீஸ்காரன் கிட்டேயே நியாயம் பேசுறியா..."ன்னு சொல்லி சைகிள்ளே இருந்த லத்தியை உருவினார்.
சங்கர் மேல லத்தியால விளாச ஆரம்பித்தார்.சேறிலும் சகதியிலும் பொரட்டி... பொரட்டி அடிச்சாரு.
சங்கர் ஒவ்வொரு அடியையும் எண்ணினான். இப்போ நிறுத்திடுவாறு இப்போ நிறுத்திடுவாறு' ன்னு என்று நினைத்து ஒவ்வொரு அடியையும் எண்ணினான்.
சங்கருக்கு இறுதி வரைக்கும் நினைவில் இருந்தது. அவர் அடித்த அடிகளின் எண்ணிக்கை. ஆம், அந்த போலீஸ்காரர் அடித்த மொத்த அடி பதிமூன்று !!
சங்கரை அவர் மிருகத்தனமா அடிச்சது கூட பரவாயில்லை. அப்பிராணியாக இருந்த சங்கரை போய் ஒரு மிருகமாக மாத்தினதே அந்த அடிதான். சங்கரின் பிந்தைய வாழ்க்கைக்கு பிள்ளையார் சுழியே அந்த போலீஸ்காரர்தான். சங்கர் வாழ்க்கை சூறாவளியாக திசை திரும்பவும் அந்த அடித்தான் காரணாமானது.
இன்னும் தான் சங்கரின் அதிரடி ஆரம்பம்....
ஆட்டோ சங்கர் முன்னால் ...
No comments:
Post a Comment