"அவரு யாருங்க கேட்கறதுக்கு?" என்று கூந்தலை முடிந்து கொண்டு குழாயடி சண்டைக்கு தயாராகிவிட்டார் மும்பை தயாரிப்பாளர் ஏக்தா கபூர். எல்லாம் சில்க் என்ற தேவதையால் வந்த வினை. தமிழ்சினிமாவில் எண்பதுகளில் அறிமுகமாகி, அதே வயதுடைய ஆண்களையே கூட தன் அழகால் ஆட்டி வைத்தவர்தான் நடிகை சில்க். அவரது வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து பாலிவுட்டில் தயாராகிக் கொண்டிருக்கும் படம் தி டர்ட்டி கேர்ள்ஸ்.
சில்க்கை திரையுலகத்தில் அறிமுகப்படுத்தியதே நான்தான். என்னை கேட்காமல் எப்படி சில்க் வாழ்கை வரலாற்றை படமாக்கலாம் என்று எகிறிக் குதித்தார் டைரக்டரும் நடிகருமான வினு சக்கரவர்த்தி.
நீதிமன்றத்தில் தடை கோருவேன் என்று வினு பேசியதை பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை ஏக்தாவால். "சில்க்குக்கு ரத்த சம்பந்தமான உறவாக இருந்திருந்தால் இப்படி தடை கோருவதற்கு உரிமை இருக்கிறது. அப்படியில்லாத வினு சக்கரவர்த்தி எப்படி இந்த விஷயத்தில் மூக்கை நுழைக்கலாம்? ஒரு பைசா கூட நான் அவருக்கு தர மாட்டேன்" என்கிறார் அப்படத்தின் தயாரிப்பாளர் ஏக்தா.
"நான் பணமே கேட்கல. அப்படியிருக்கும்போது எப்படி சம்பந்தம் இல்லாமல் பணத்தை பற்றி பேசலாம்? இந்த படத்தை எப்படி வெளியிடுறாங்கன்னு பார்க்கிறேன். நானும் மும்பைக்கே போய் பெரிய லாயரை வச்சு மூவ் பண்ணுவேன். என்னை அவ்வளவு சாதாரணமா நினைச்சுட்டாங்களா? விட மாட்டேன்" என்று கொக்கரித்தார் வினுச்சக்கரவர்த்தி நம்மிடம்.
அட... இவங்க ஓட்டுற படம் ரொம்ப நல்லா இருக்கே!
No comments:
Post a Comment