'டைரக்டர் சாமிய கடவுளாக்கிட்டாருப்பா கவுதம் மேனன்' என்று ரசிகர்கள் ஓப்பனாக கமெண்ட் அடிக்கிற அளவுக்கு போய்விட்டது நிலைமை!
மாமனார்-மருமகள் தகாத உறவையே சகித்துக் கொள்ள முடியாமல் அப்படத்தை முடக்கிப் போட்டது தமிழகம். அந்த காயம் மறைவதற்கு முன்னாலேயே அடுத்த ஷாட் அடித்துவிட்டார் கவுதம்.
இவரது 'நடுநிசி நாய்கள்' படத்தில் அம்மாவே மகனுடன்.... 'அடப்பாவிங்களா' என்று பெண்கள் பதறுகிற காட்சியை தியேட்டர்களில் காண முடிகிறது. இதை எப்படி சென்சாரில் அனுமதித்தார்கள் என்ற கேள்வி ஒரு புறம் இருக்க, படத்தின் இயக்குனர் கவுதம் வீட்டை முற்றுகையிட துடிக்கிறது சில சமூக நல அமைப்புகளும் அரசியல் கட்சிகளும். இந்து மக்கள் கட்சியினர் நாய்களுடன் சென்று மறியல் நடித்தினார்கள் நேற்று. இன்று...?
விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் இந்த போராட்டத்தை கையில் எடுத்திருப்பதாக நமக்கு தகவல் கிடைத்திருக்கிறது. இன்றோ, அல்லது நாளையோ கையில் விளக்குமாறுடன் இக்கட்சியின் முக்கிய பிரமுகர்களும் பெண்கள் பிரிவினரும் கவுதம் வீட்டை முற்றுகையிட திட்டமிட்டிருக்கிறார்களாம். இதற்கான வியூகங்கள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் வகுக்கப்பட்டு வருவதாக தகவல்.
ஆஹா... படத்தை ஓட வச்சுருவாங்க போலிருக்கே!
No comments:
Post a Comment