வரவர சென்சார் அமைப்பின் போக்கை வடிவேலு காமெடியோடுதான் ஒப்பிட வேண்டும் போலிருக்கிறது. நடுநிசி நாய்கள் படத்திற்கு எவ்வித கட்டும் கொடுக்காமல் இப்படத்தை ரிலீஸ் செய்ய அனுமதித்திருக்கிறார்கள். ஆனால் இதே படத்தின் தெலுங்கு பதிப்புக்கு எட்டு இடங்களில் கட் கொடுத்திருக்கிறது ஆந்திர தணிக்கை குழு.
இந்த பாரபட்சம் இங்கு மட்டும் எப்படி என்று விஷயமறிந்தவர்கள் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும்போதே இன்னொரு செய்தி. முதல்வர் மகாத்மா என்ற படத்தை தயாரித்து இயக்கியிருக்கிறார் பாலகிருஷ்ணன். இவர் காமராஜ் என்ற 'நல்ல படத்தை' எடுத்தவர். முதல்வர் மகாத்மாவில் காந்தி மீண்டும் பிறந்து வந்தால் எப்படியிருக்கும் என்பதுதான் கான்சப்ட்.
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனும் காந்தியும் சந்தித்து பேசுவது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இதற்கு சென்சார் அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்களாம். தடை செய்யப்பட்ட அமைப்பை எப்படி படத்தில் காட்டலாம் என்பது அவர்கள் வாதம். ஆனால் புலிகளின் கொள்கையை நியாயப்படுத்தி நான் எந்த இடத்திலும் காட்சிகளையோ, வசனங்களையோ வைக்கவில்லையே என்று வாதிட்டாராம் பாலகிருஷ்ணன். பிறகு அட்வைசரி கமிட்டி வரைக்கும் போயிருக்கிறது பிரச்சனை.
நல்லவேளையாக படத்திற்கு 'யு' சர்டிபிகேட் கொடுத்துவிட்டார்களாம்.
No comments:
Post a Comment