Thursday, March 31, 2011

மதிமுக வெளியேறியது குறித்து மா.கம்யூ கருத்து


ம.தி.மு.க. எங்கள் கூட்டணியிலிருந்து வெளியேறி இருப்பது எங்களுக்கு வருத்தமளிக்கிறது என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ராமகிருஷ்ணன் கூறினார்.


மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,


தேர்தல் ஆணையத்தின் வாகன சோதனையில் வணிகர்கள் பாதிக்கப்படாத அளவில் பார்த்துக் கொள்ள வேண்டும். ம.தி.மு.க. எங்கள் கூட்டணியில் இருந்த போது பல்வேறு


போராட்டங்களில் கலந்து கொண்டது.

ஆனால் கூட்டணியிலிருந்து வெளியேறி இருப்பது எங்களுக்கு வருத்தமளிக்கிறது. கூட்டணிக்கு வருமாறு வைகோவிற்கு அழைப்பு விடுத்தோம். ஆனால் அவர் அதை ஏற்க மறுத்து விட்டார்.

160 தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க. தனித்து ஆட்சி அமைக்கும். தொங்கு சட்டசபை வராது. எனவே இந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் என்றார்.

No comments:

Post a Comment