திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை, மேலப்பாளையத்தில் அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கானை ஆதரித்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில்,
நாங்கள் தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களை சந்திக்க வருபவர்கள் அல்ல. எப்போதும் உங்களுடன் இருக்கிறோம். ஆனால், அ.தி.மு.க.,விற்கு தலைமை வகிக்கும் அம்மையார் தமிழகத்தை பற்றி கவலைப்படாதவர். தேர்தல் நேரத்தில் மட்டும் வருவார்.
அப்புறம் கதை முடிஞ்சதுன்னு கோடநாட்டிற்கு கிளம்பி விடுவார். அவருக்கு தமிழக மக்களை விட, கோடநாட்டின் மீது தான் அக்கறை அதிகம். கூட்டணி கட்சி தலைவர்களுக்கு மரியாதை தர தெரியாதவர். மரியாதை இல்லாமல் நடத்துபவர். அவர் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தும் போது எவ்வாறு நடந்து கொண்டார் என்பதை பார்த்திருப்பீர்கள்.
அந்த கூட்டணியில் இருக்கும் மார்க்கெட் போன முன்னாள் கதாநாயகன், பிரசாரத்தின் போதே தனது கட்சி வேட்பாளரை அடிக்கிறார். அவருடன் கட்சியினர் பிரசாரத்திற்கு செல்வதாக இருந்தால், தலையில் ஹெல்மெட் அணிந்து தான் செல்ல வேண்டும். இது தான் அந்த கூட்டணியில் கட்சிகளுக்கு தரும் மரியாதை.
ஆனால், தி.மு.க., கூட்டணியில் முதல்வர் கருணாநிதி, அனைத்து கட்சி தலைவர்களையும் அழைத்து, மரியாதையுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினார் என்றார்.
இன்றைய பதிவுகள்...
- விஜயகாந்த் வண்டவாளம் எனக்கு தெரியும்: நெப்போலியன்
- விஜயகாந்த் போட்டியிடும் தொகுதியில் 10 வேட்பாளர்கள்...
- கலைஞருடன் போட்டியிடும் வேட்பாளர்களும் ; கலைஞர் சந்...
- ஜெயலலிதாவுடன் போட்டியிடும் வேட்பாளர்களும் ; ஜெ. சந...
- சட்டப்படி குற்றம் :திரை விமர்சனம் :
- மார்க்கெட் போன முன்னாள் கதாநாயகன்: ஸ்டாலின்
- மதிமுக வெளியேறியது குறித்து மா.கம்யூ கருத்து
- தலைவர் ஆவாரா தல?
- விஜயுடன் பணிபுரிவது புது அனுபவம் : ஷங்கர்
- விஜயகாந்த்தை வருங்கால முதல்-அமைச்சர் என்று அழைக்க ...
- காமெடி பீஸ் வடிவேலு : நடிகை விந்தியா கலாய்ப்பு
No comments:
Post a Comment