தமிழ்நாடு முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் 2,773 பேர் போட்டியிடுகிறார்கள். அ.தி.மு.க. பொதுச் செயலாளர் போட்டியிடும் ஸ்ரீரங்கம் தொகுதியில் 23 பேர் போட்டியிடுகிறார்கள்.
1. ஜெயலலிதா (அ.தி.மு.க)
2. என்.ஆனந்த் (தி.மு.க)
3. கே.ஏ.எஸ். அறிவழகன் (பா.ஜ.க)
4. ரவிசங்கர் அய்யர் (அகில இந்திய இந்து மகாசபா)
5. தமிழரசி (ஐ.ஜே.கே)
6. நடராஜன் (பி.எஸ்.பி.)
7. வெற்றிச் செல்வன் (சுயே.)
8. ராஜேந்திரன் (சுயே.)
9. காமராஜ் (சுயே.)
10. சேது (சுயே.)
11. ரவி (சுயே.)
12. செல்வம் (சுயே.)
13. ராமச்சந்திரன் (சுயே.)
14. சண்முகம் (சுயே.)
15. ரெங்கராஜன் (சுயே.)
16. எம்.ரமேஷ் (சுயே.)
17. முத்தையா (சுயே.)
18. அருந்ததிராதா (சுயே.)
19. அய்யாவு (சுயே.)
20. சோழன் (சுயே.)
21. கல்யாணசுந்தரம் (சுயே.)
22. ஜெயராமன் (சுயே.)
23. கோவிந்தராஜன் (சுயே.)
அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா இதுவரை ஐந்து தேர்தல்களை சந்தித்துள்ளார். 1996ம் ஆண்டு சட்டசபை தேர்தலைத் தவிர, நான்கு தேர்தலிலும் வெற்றி பெற்றார்.
1989ல் முதன் முதலாக அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
ஈரோடு மாவட்டம், காங்கயம் தொகுதியில், 1991ம் ஆண்டு ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
1996ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தர்மபுரி மாவட்டம் பர்கூர் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட்டார். அப்போது, அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுகவைச் சேர்ந்த சுகவனம் 9,000 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தொகுதியில், 2002ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
2006 தேர்தலில் மீண்டும் ஆண்டிபட்டி தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
No comments:
Post a Comment