விஜயகாந்த் வண்டவாளம் முழுவதும் எனக்கு தெரியும். அதை வெளியில் சொன்னால் நாறிவிடும் என, நடிகர் நெப்போலியன் பேசினார்.
திருக்கோவிலூரில் நடிகரும், மத்திய அமைச்சருமான நெப்போலியன் திமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில்,
எதிர்க்கட்சிகாரர்களை கொத்தடிமைத்தனமாக வைத்திருந்தவர் ஜெயலலிதா. ஜெயலலிதா கடந்த ஐந்து ஆண்டுகளாக கோட நாட்டில் ஓய்வு எடுத்துவிட்டு இப்பதான் இறங்கி வந்து, தி.மு.க., தேர்தல் அறிக்கையை காப்பி அடித்துள்ளார்.
சினிமாவில் மார்க்கெட் போனதால், வேறு வழியில்லாமல் கட்சி துவங்கிய விஜயகாந்த் உடன் கூட்டணி அமைத்துள்ளார் ஜெயலலிதா. கம்பெனி ஆரம்பிக்கிற மாதிரி அவர் மனைவி, மைத்துனரை வைத்து கட்சி துவங்கி விட்டார். குடும்ப அரசியலைப் பற்றி பேசும் விஜயகாந்த், குடும்பத்துடனே அரசியலை ஆரம்பித்து இருக்கிறார். இவரால் கல்லூரிக்கு கூட முதல்வராக முடியாது. அதற்கும் படிப்பு தகுதி வேண்டும். அப்படிப்பட்ட விஜயகாந்த் எல்லோரையும் கிண்டல் செய்கிறார்.
விஜயகாந்த் எங்காவது ஜெயலலிதாவை முதல்வராக்குவேன் என்று சொன்னாரா... இல்லை. ஏன் என்றால் அவர் முதல்வராக வேண்டும் என்ற ஆசையில் உள்ளார். இந்த அம்மாவோ அவரை எப்ப எட்டி உதைக்கலாம் என்று பார்த்துக் கொண்டு இருக்கிறார்.
விஜயகாந்த் 2005ல் கட்சி ஆரம்பிக்கும் வரை மக்களை பற்றி சிந்திக்கவில்லை. படத்துல நடிச்சு முகம் வீங்கி போனதால படவாய்ப்பு குறைஞ்சது. அதுக்கு அப்புறம் கம்பெனி ஆரம்பிக்கிற மாதிரி புதுசா கட்சி ஆரம்பிச்சார். இவர் நடிகர் சங்க தலைவராக இருந்தபோது நான் துணைத்தலைவராக இருந்தேன். இவரது வண்டவாளம் முழுவதும் எனக்கு தெரியும். அதை வெளியில் சொன்னால் நாறிவிடும். பள்ளிக்கூடத்தில் வாத்தியார் மாணவனை அடிப்பதுபோல் விஜயகாந்த் தனது வேட்பாளரை அடிக்கிறார் என்றார்.
இன்றைய பதிவுகள்...
- விஜயகாந்த் வண்டவாளம் எனக்கு தெரியும்: நெப்போலியன்
- விஜயகாந்த் போட்டியிடும் தொகுதியில் 10 வேட்பாளர்கள்...
- கலைஞருடன் போட்டியிடும் வேட்பாளர்களும் ; கலைஞர் சந்...
- ஜெயலலிதாவுடன் போட்டியிடும் வேட்பாளர்களும் ; ஜெ. சந...
- சட்டப்படி குற்றம் :திரை விமர்சனம் :
- மார்க்கெட் போன முன்னாள் கதாநாயகன்: ஸ்டாலின்
- மதிமுக வெளியேறியது குறித்து மா.கம்யூ கருத்து
- தலைவர் ஆவாரா தல?
- விஜயுடன் பணிபுரிவது புது அனுபவம் : ஷங்கர்
- விஜயகாந்த்தை வருங்கால முதல்-அமைச்சர் என்று அழைக்க ...
- காமெடி பீஸ் வடிவேலு : நடிகை விந்தியா கலாய்ப்பு
No comments:
Post a Comment